தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாட்டின் பன்னிரெண்டாவது சட்டமன்றத் தேர்தல் 2001 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, ஜெ. ஜெயலலிதா இரண்டாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.
Remove ads
தொகுதிகள்
2001ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]
அரசியல் நிலவரம்
திராவிட முன்னேற்றக் கழகம், மத்தியில் ஆட்சி புரிந்த பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தது. 2001 தேர்தலுக்கு சிறிது காலம் முன் வரை அக்கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியும் (பாமக), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் (மதிமுக) தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணியை விட்டு வெளியேறின. பாமக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தலைமையிலான கூட்டணியில் இணைந்தது. மதிமுக தனித்துப் போட்டியிட்டது. திமுக தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் பல திட்டங்களை செயல்படுத்தியதால் முதல்வர் கருணாநிதிக்கு மக்களிடையே செல்வாக்கிருந்தது. ஆனால் அதைவிட திமுக-பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பும் மிகுந்தே காணப்பட்டது. எதிர் கட்சியான அதிமுக, முக்கிய எதிர் கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை உருவாக்கியது.
Remove ads
கூட்டணிகள்
இத்தேர்தலில் மும்முனைப் போட்டி காணப்பட்டது. திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சி, சு. திருநாவுக்கரசரின் எம்ஜியார் அதிமுக, ராஜ கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம் , ஏ. சி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி , திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் (ஆதி திராவிடர் ஆகியவை இடம் பெற்றிருந்தன. அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசு, பாமக, இந்திரா காங்கிரசு, இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), எல். சந்தானத்தின் ஃபார்வார்ட் ப்ளாக் ஆகியவை இடம் பெற்றிருந்தன. வைகோவின் மதிமுக முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. ஆனால் தொகுதி உடன்பாடு ஏற்படாத காரணத்தால், பிரிந்து சென்று தனித்து போட்டியிட்டது.
தேர்தல் முடிவுகள்
தேர்தல் தேதி: மே 10, 2001; மொத்தம் 59.07 % வாக்குகள் பதிவாகின.[3][4]
2001 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்[3] | ||||||
---|---|---|---|---|---|---|
கூட்டணி | கட்சி | போட்டியிட்ட தொகுதிகள் |
வென்ற தொகுதிகள் |
வைப்புத் தொகை இழப்பு |
வைப்புத் தொகை இழக்காத, வெற்றி பெற்ற தொகுதிகளில் வாக்கு சதவீதம் |
போட்டியிட்ட அனைத்து தொகுதிகளில் மொத்த வாக்கு சதவீதம் |
அதிமுக கூட்டணி - 196 | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 141 | 132 | 0 | 31.44 | 52.08 |
இந்திய தேசிய காங்கிரஸ் | 14 | 7 | 0 | 2.48 | 45.35 | |
பாட்டாளி மக்கள் கட்சி | 27 | 20 | 0 | 5.56 | 46.82 | |
இந்திய பொதுவுடமைக் கட்சி (CPI) | 8 | 5 | 0 | 1.59 | 48.54 | |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) (சிபிஎம்) | 8 | 6 | 0 | 1.68 | 48.21 | |
தமிழ் மாநில காங்கிரஸ் | 32 | 23 | 0 | 6.73 | 47.49 | |
சுயேட்சை | 3 | 0 | ||||
மொத்தம் | 234 | 196 | ||||
தேசிய ஜனநாயக கூட்டணி – 37 |
திராவிட முன்னேற்றக் கழகம் | 183 | 31 | 2 | 30.92 | 39.02 |
பாஜக | 21 | 4 | 0 | 3.19 | 38.68 | |
எம்ஜிஆர் அதிமுக | 3 | 2 | 0 | 0.46 | 37.14 | |
தனித்துப் போட்டியிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் |
மதிமுக | 211 | 0 | 205 | 4.65 | 5.12 |
பார்வார்ட் பிளாக் | 1 | 1 | 0 | 0.14 | 43.32 | |
சுயேச்சை | 3 |
Remove ads
ஆட்சி அமைப்பு
அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று அக்கட்சியின் தலைவி ஜெயலலிதா இரண்டாம் முறை முதல்வரானார். ஆனால் அவர் மீது ஊழல் வழக்குகள் நிலுவையிலிருந்ததால் (கீழ்மட்ட நீதிமன்றங்கள் அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியிருந்தன) அவர் முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என இந்திய உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 2001ல் தீர்ப்பு வழங்கியது. இதனால் ஜெயலலிதா பதவி விலகி அவருக்கு பதில் வி.கே.சசிகலா பரிந்துரைப்படி ஓ. பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.[5] நிலுவையிலிருந்த வழக்குகளில் தீர்ப்பு வெளியாகிய பின், ஜெயலலிதா ஆண்டிப்பட்டித் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று மார்ச் 2002ல் மீண்டும் முதல்வரானார்.[6]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads