எழிலகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எழிலகம் (Ezhilagam) தமிழ்நாட்டு அரசுக்குச் சொந்தமான ஐந்தடுக்குக் கட்டிடமாகும். இது சென்னைச் சேப்பாக்கப் பகுதியில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு எதிரில், காமராசர்ச் சாலையில் அமைந்துள்ளது. இதில் முக்கிய அரசுத் துறை அலுவலகங்கள் அமைந்துள்ளன.
Remove ads
அமைந்துள்ள முக்கியத் துறை அலுவலகங்கள்
இவ்வளாகத்தில் கீழ்க்கண்ட துறைகளின் அலுவலகங்கள் அமைந்துள்ளன.
- நில நிருவாகம்
- பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம்
- மாநிலத் திட்ட ஆணையம்
- பொது விநியோகம் மற்றும் நுகர்வோர்ப் பாதுகாப்பு
- வணிக வரி
- பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் நல வாரியம்
- வருவாய் நிருவாக ஆணையரகம்
விபத்து
2010 சூன் 15 அன்று இக்கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் தீப்பற்றியது. மின்கசிவே இத்தீவிபத்துக்குக் காரணமெனக் கருதப்பட்டது. 45 நிமிடங்களுக்குப் பின் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இவ்விபத்தில் எவரும் காயமடையவில்லை.[1]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads