சேப்பாக்கம்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேப்பாக்கம் (ஆங்கிலம்: Chepauk), இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது வங்காள விரிகுடா கடலை ஒட்டி அமைந்துள்ளது. சேப்பாக்கம் என்ற பெயர் எம். ஏ. சிதம்பரம் சர்வதேச துடுப்பாட்ட அரங்கத்தை குறிக்க பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது, இது சேப்பாக்கம் அரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த துடுப்பாட்ட அரங்கத்தில், உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகள் நடத்தப்படுகிறது. இங்குள்ள கலச மஹால், இந்தோ சரசனிக் பாணியில் கட்டப்பட்ட ஒரு பழமையான அரண்மனையாகும்.
"சேப்பாக்" என்ற பெயர் "ஆறு தோட்டங்கள்" என்று பொருள்படும், "சே பாக்" என்ற உருது வார்த்தையிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சேப்பாக்கத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 600005 ஆகும். சேப்பாக்கத்தின் முக்கிய சாலைகள் பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை மற்றும் அருகிலுள்ள திருவல்லிக்கேணியில், அண்ணா சாலை செல்கிறது.
Remove ads
அமைவிடம்
சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், சேப்பாக்கம் அமைந்துள்ளது.
முக்கிய இடங்கள்
சேப்பாக்கத்தில் உள்ள முக்கிய இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
போக்குவரத்து
சென்னையில் உள்ள பறக்கும் தொடருந்து நிலையங்களில், சேப்பாக்கம் தொடருந்து நிலையமும் ஒன்றாகும்.
சேப்பாக்கம் வழியாக செல்லும் மாநகரப் பேருந்துகள்:
- பெல்ஸ் சாலை, துடுப்பாட்ட அரங்கம் மற்றும் வாலாஜா சாலை வழியாக: 22A, 6A, 22, 27B, 127B, 27L, 27H, 40, 40A, M28
- வாலாஜா சாலை மற்றும் அண்ணா சதுக்கம்: 11H
- கடற்கரை சாலை (சேப்பாக்கம் மற்றும் அண்ணா சதுக்கம்): 13 series, 45B,45E, PP19, PP21, 21G, G21, H51, PP51, 21H, H21, 6D, 6E, 12G, 25G, 21K, M21K, 21L முதலியன.
அரசியல்
இது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்கும், மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
படங்கள்
- சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் கட்டிடம்
- சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்
- அண்ணா சதுக்கம்
- எம். ஜி. ஆர் நினைவிடம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads