எழிலன் நாகநாதன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
எழிலன் நாகநாதன் (Ezhilan Naganathan) ஒரு தமிழ்நாட்டு அரசியலர், மருத்துவர், மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, முன்னாள் முதலவர் கருணாநிதியின் தனி மருத்துவராக இருந்துள்ளார்.தற்போது மு. க. ஸ்டாலின் தனி மருத்துவராக இருக்கிறார்.[1][2][3][4][5]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
இவர் மு.நாகநாதன் – ஜமதக்னி சாந்தி இணையரின் மகனாக பிறந்தார்.இவரின் தந்தை கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு திட்டக்குழு துணை தலைவராக இருந்துள்ளார்.இவரின் தாய்வழி தாத்தா க. இரா. ஜமதக்னி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.
சமூக தொண்டு
"இளைஞர் இயக்கம்" என்ற அமைப்பையும் நிறுவி நடத்தி வரும் இவர் ஈழத் தமிழர் பிரச்சினைக்காக உரத்துக் குரல் கொடுத்தவர். கூடங்குளம், நெடுவாசல் நீட் தேர்வு, சேலம் எட்டு வழிச்சாலை,சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள், கோவிட் தடுப்புப் பணிகள் என அனைத்து சமூகப் பிரச்சினைக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருபவர்.
அரசியல்
2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[6]
கல்வி
இவர் தனது பள்ளி படிப்பை சென்னையில் உள்ள டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் படித்தார். அதனை தொடர்ந்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ், எம்.டி. படித்துப் பட்டம் பெற்றார்.
காவேரி மருத்துவமனையில் பொதுநல மருத்துவராக உள்ளார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads