தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், 234 தொகுதிகளுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய 2021 ஏப்ரல் 6 இல் நடைபெற்றது.[5][6] இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் முதல் முறையாக தமிழ்நாட்டின் 12-வது முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டு ஆட்சி அமைத்தார்.
Remove ads
தேர்தல் நிலைபாடு
- அஇஅதிமுக கட்சியின் முதலமைச்சராான எடப்பாடி க. பழனிசாமி தலைமையில் அமைந்த 15-வது சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் மே 3, 2021இல் முடிவடைந்தது.
- தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.
- இத்தேர்தலுடன் சேர்ந்து கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய பிற மாநில சட்டமன்றத் தேர்தல்களுடன் சேர்த்து நடத்தப்பட்டது.
- தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.[7][8]
- எதிர்கட்சியான திமுகவில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி மரணத்திற்கு பிறகு அவரது மகன் மு. க. ஸ்டாலின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகம் உடன் இந்திய தேசிய காங்கிரசு, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழக உள்நாட்டு கட்சிகளான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சிறிய கட்சிளுடன் இணைந்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (ம.மு.கூ) கூட்டணியை உருவாக்கி திமுக போட்டியிட்டது.
- ஆளும் அதிமுகவில் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்ட ஓ. பன்னீர்செல்வம் பிறகு கே. பழனிசாமி, ஒரு மனதாக முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உடன் மத்தியில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி மற்றும் தமிழக உள்நாட்டு கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சிறிய கட்சிகளுடன் அதிமுக–பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ச.கூ) கூட்டணியில் அஇஅதிமுக போட்டியிட்டது.
- இச்சமயத்தில் தமிழகத்தில் ஏற்பட்டிருந்த கோவிடு-19 (கொரோனா) வழிகாட்டி முறைகளுடன் மிகவும் கட்டுப்பாடுடன் தேர்தல் நடத்தப்பட்டது.
- தமிழகத்தில் 72.81% வாக்குகள் பதிவாயின. தேர்தலுக்கு முன்னும் பின்னும் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கணித்தன. 2021 மே 2 அன்று வாக்குகள் எண்ணப்பட்டன; ம.மு.கூ 159 இடங்களைக் கைப்பற்றியது, இவற்றில் திமுக 125 தொகுதிகளில் வெற்றியைப் பதிவு செய்து, தனிப் பெரும்பான்மையைப் பெற்றது.
- அதிமுக–பாஜக தலைமையிலான தே.ச.கூ 75 இடங்களை வென்றது, இதில் 65 இடங்களை அதிமுக வென்றது. பத்தாண்டுகால அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தது, ஆறாவது முறையாக திமுக மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்தது முதலமைச்சராக மு. க. ஸ்டாலின் அவரது அமைச்சரவை மந்திரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களோடு மே 7, 2021 அன்று பதவியில் பொறுப்பேற்று கொண்டனர்.
Remove ads
பின்னணி
- தமிழ்நாடு அரசியலில் மாநிலத்தின் இரண்டு முன்னணித் திராவிடக் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) ஆகியவை கடந்த ஐந்து தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
- 2011 சட்டமன்ற தேர்தலில், ஜெ. ஜெயலலிதா தலைமையில் அஇஅதிமுக, மு. கருணாநிதி தலைமையிலான திமுகவைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது.
- அதை தொடர்ந்து (2011–2016) அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா சிறந்த நல்லாட்சி செய்ததால். அடுத்து நடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தொடர் வெற்றி, தொடர் ஆட்சி பெற்று தனது பெரும்பான்மையை 135 இடங்களுடன் தக்க வைத்துக் கொண்டது.
- இத்தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து 98 தொகுதிகளை கைப்பற்றி பலமான எதிர்கட்சியாக செயல்பட்டது.[9]
- 2021 இன் 16-வது சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் இறப்பின் பின்னர் நடைபெறும் முதலாவது மாநிலத் தேர்தல் ஆகும்.
- 2016 இல் ஆளும் கட்சி முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2017 ல் அதிமுக கட்சியின் சட்டமன்றத் தலைவர் மற்றும் முதலமைச்சராக எடப்பாடி க. பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ. பன்னீர் செல்வமும் பதவியேற்று கொண்டனர் அவர்களின் கீழ் இணைத் தலைமையோடு அஇஅதிமுக செயல்பட்டு வந்தது.
- 2018 இல் எதிர்கட்சி தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியின் இறப்பிற்கு பின்னர், அவரது மகன் மு. க. ஸ்டாலின் திமுகவின் தலைமையை ஏற்றார்.
- அதன் பிறகு நடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில், திமுக–காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தமிழக நாடாளுமன்ற தொகுதியான 39 தொகுதியில் 38-ஐக் கைப்பற்றியது.
- ஆனால் தமிழ்நாட்டில் அதிமுக–பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படும் தோல்வி அடைந்த போதிலும் தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக சார்பில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் இரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். மத்தியில் பாரதிய ஜனதா கட்சி மீள் வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானார்.
- இதே காலகட்டத்தில் நடைபெற்ற 2019 சட்டமன்ற இடைத்தேர்தல்களில், திமுக 13 தொகுதிகளையும், அஇஅதிமுக 10 தொகுதிகளையும் கைப்பற்றியது.
Remove ads
தேர்தல் குறிப்புகள்
- தேர்தல் நடத்துவது குறித்து 2021 பிப்ரவரி 11 அன்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சென்னையில் நடத்திய கூட்டத்தில் அறிவித்தார்.[10][11]
- 6 ஏப்ரல் 2021 அன்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறும்.
- வழக்கமான தேர்தல் நேரத்துடன் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்படும்.[10]
- கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல், தமிழக சட்டமன்ற தேர்தலுடன் ஒரே கட்டமாக நடத்தப்படும்.
- கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 88,936 ஆக அதிகரிக்கப்படும்.[12]
- 80 வயது முதியோர்கள் வழக்கமான வாக்குப் பதிவு செய்வதுடன், விருப்பப்பட்டவர்கள் தபால் வாக்கும் செலுத்த அனுமதிக்கப்படுவர்.[13]
- தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
- மின்னணு இயந்திரம் வைக்கப்படும் அறையில் உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின்போது வீடியோ பதிவு செய்யப்படும்.
- வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து 24 மணி நேரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
- திமுக சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்பட்டது.[14]
தேர்தல் அட்டவணை
சட்டமன்றத் தேர்தலின் முக்கிய நாட்கள்:[15]
வாக்காளர் புள்ளிவிவரங்கள்
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலின்படி,[16][17] சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிகபட்சமாக 694,845 வாக்காளர்கள் உள்ளனர்.[16][18]
Remove ads
தேர்தல் வாக்குறுதிகள்
அஇஅதிமுக வாக்குறுதிகள்
அதிமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 163 நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கியது.[19][20]
திமுக வாக்குறுதிகள்
திமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 500 நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாகவும் வழங்கியுள்ளது.[21] [22]
ஆகிய முக்கியமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும். இதற்கு திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் என்று பெயரிடப்படும். எனவும் அறிவிக்கப்பட்டது.[26]
Remove ads
அரசியல் நிலவரம்
- தமிழ்நாட்டில் சுமார் 50 வருடமாக வென்று ஆட்சி அமைக்கும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் முதலமைச்சர்களான மு. கருணாநிதி மற்றும் ஜெ. ஜெயலலிதா என்கிற பெரும் அரசியல் ஆளுமை தலைவர்களின் மரணத்திற்கு பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தல் ஆகும்.
- கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் தொடர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பதவியேற்ற 6 மாதகாலங்களிலே அவர் எவ்வித உடல் உபாதைகளும் இல்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 5,2016 ஜெயலலிதா உயிரிழந்தது தமிழக மக்களிடையே பெரும் அனுதாப வருத்தத்தையும், தீராத கண்ணீர் மழையிலும் சிக்க வைத்து மட்டுமில்லாமல் அவரது மர்ம மரணம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
- அந்த ஆறு மாதகால ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளாக கூறிய அனைத்து வீடுகளிலும் 100 சதவீதம் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பை நடைமுறைபடுத்தினார்.
- பின்பு சென்னை மக்கள் நெரிசலை சரிசெய்யும் விதமாக முந்தைய திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் கொண்டுவரப்பட்டு மோனோ ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
- அதை நடைமுறைப்படுத்தும் விதமாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மோனோ ரயில் திட்டம் அதிக கனரக வேலை கட்டமைப்பு நில அதிர்வு போன்ற இயற்கை உபாதைகளுக்கு எதிரான திட்டமானதால் அதை தவிர்த்து விட்டு மெட்ரோ ரயில் திட்டம் ஆக செயல்படுத்தி சென்னை மாநகரில் முதல் முறையாக துவக்கிவைத்தார்.
- பின்பு பல தேர்தல் வாக்குறுதிகள் முதல்வர் ஜெயலலிதாவால் நிறைவேற்றப்படும் என்று தமிழக மக்கள் நினைத்து கொண்டிருக்கும் போது பேரிடியாக அவரது எதிர்பாராத மரணம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரது அதிமுக ஆட்சியிலும், கட்சியிலும் பல தலைமை மாற்றம் குழப்பங்கள் நடந்தேறியது.
- முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அவரது முதல்வர் பதவியை அனுபவிக்கும் பொருட்டு அவரது அரசியல் விசுவாசியும், மாநில நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக தனது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஜெயலலிதாவின் மரணத்தின் அன்றே பதவியேற்று கொண்டது பல விமர்சனங்களுக்கும், தீராத அரசியல் சர்ச்சைகளுக்கும் உள்ளானது.
- பின்பு பன்னீர் செல்வத்திடமிருந்து அவரது முதல்வர் பதவியை ஜெயலலிதாவின் தோழி வி. கே. சசிகலாவால் பறிக்கப்பட்டது.
- இதனால் ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட நேரத்தில் ஜெயலலிதா சமாதியில் சென்று கண்ணீர் தர்மயுத்தம் நடத்தியது பெரும் சர்ச்சையானது.
- மேலும் பன்னீர் செல்வத்தின் அச்செயலை கண்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வி. கே. சசிகலா தலைமையில் பாதுகாக்கப்பட்ட கூவத்தூர் சொகுசு பங்களாவில் கட்சி தாவல் நடக்காமல் வி. கே. சசிகலா தனது தலைமையில் கட்சியையும், முதல்வர் பதவியையும் தன்வசபடுத்தும் நேரத்தில் எதிர்பாராத விதமாக அவர் கடந்த காலத்தில் ஜெயலலிதாவோடு இணைந்து செய்த சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் சிறை தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு அவருடன் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் அனைவரும் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- இந்த சமயத்தில் சசிகலா தனது உறவினரான தினகரனை முதல்வர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஆனால் அதை அதிமுக கட்சி தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியிடமே ஒரு மனதாக முதல்வர் பதவிக்கு சசிகலா பரிந்துரைத்தார்.
- மேலும் இந்த காலகட்டத்தில் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் டி. டி. வி. தினகரன் தலைமையில் கீழ் அதிமுக ஈபிஎஸ் அணியாக செயல்பட்டுவந்தது.
- ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒபிஎஸ் அணியாகவும் செயல்பட்டுவந்தது.
- இதனால் அதிமுகவின் அதிகார பூர்வ தேர்தல் சின்னமான இரட்டை இலை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது.
- பின்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அதிமுக ஆட்சி அமைத்த போது 136 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவரது மரணத்திற்கு பிறகு எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தலைமையில் 125 சட்டமன்ற உறுப்பினரும், அவரிடமிருந்து பிரிந்த ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் 11 சட்டமன்ற உறுப்பினர்களும் இருந்தனர். இதே காலகட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் டி. டி. வி. தினகரன் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால். தினகரன் தனித்து சென்றுவிட அவருடன் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.
- இதனால் தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் 107 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர் இது ஆட்சி செய்வதற்கு பெரும்பான்மையற்ற அரசாக இருந்தது.
- இதை எதிர்கட்சியில் திமுக சட்டமன்றத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் எடப்பாடி கே. பழனிச்சாமி தனது ஆளுமையை நம்பிக்கை வாக்கெடுப்பில் நிருபிக்க வேண்டும். என கூறியவுடன் அதை எதிர்த்து எதிர்கட்சி தலைவர் என்றும் பாராமல் ஸ்டாலினை பலவந்தமாக சட்டமன்றத்தில் இருந்து குண்டு கட்டாக காவல் துறையினரால் வெளியேற்றப்பட்டார்.
- இது அப்போது தமிழக மக்களிடையே அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையையும் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மீது பெரும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியது.
- ஆனால் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் கீழ் 117க்கும் குறைவான சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்ததால் அதை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தரும் பட்சத்தில் பெரும்பான்மை இல்லாத ஆட்சி நியாயமாக கலைக்கப்படும் என்று அஞ்சிய எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தார். மேலும் குறைவான சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அவரை முதலமைச்சராக பதவி ஏற்குமாறு தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவ் அழைப்பு விடுத்தார்.
- இதனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாகவும் ஜனநாயக முறைகேடாகவும் அவரது அதிமுக ஆட்சி கலைக்கப்படாமல் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக பிரதமர் மோடியின் மறைமுகமான ஆதரவால் வரைமுறையற்ற அதிகாரத்தால் நடப்பது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் தமிழக மக்களிடையே பெரும் எதிர்ப்பை எடப்பாடி கே. பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றது மக்கள் விரோத அரசாக அதிமுக மாறியது.
- மேலும் இதே காலகட்டத்தில் அதிமுகவில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தமிழக ஆளுநரால் இரு அணியும் ஒன்றினைந்து பெரும்பான்மையான அராசக மீண்டும் அதிமுக உருவானது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை மீண்டும் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கே வழங்கியது.
- எனினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதா பிரதிநிதிகளாக முதல்வராகவும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி கே. பழனிச்சாமியும், துணை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் பன்னீர் செல்வமும் இணைந்தனர்.
- பின்பு அம்மையார் ஜெயலலிதா அவர்களால் கட்டிகாக்கபட்ட மாநில சுயாட்சி அதிகாரங்களுக்கு எதிரான மத்திய மோடி அரசால் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரைமுறையற்ற வரிவிதிப்பு, ஒன்ஜிசி விவசாய நிலங்களுக்கும், நலனுக்கும் எதிரான திட்டங்கள், உதய் மின்திட்டம் மின் கட்டண உயர்வு, மருத்துவம் பயிலும் மாணகர் கண்மணிகளுக்கு எதிரான நீட் தேர்வு போன்ற திட்டங்களை முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் மத்திய அரசின் அதிகாரத்தால் அடக்குமுறையாக திணிக்கப்பட்டது.
- இதனால் பல போராட்டங்களும் மக்கள் எதிர்ப்பும் அதிமுக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எதிராக இருந்தது.
- மேலும் நீட் தேர்வானது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்ற தீர்ப்பால் தடைசெய்யப்பட்டது. ஆனால் அந்த தடையை தொடராமல் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அரசு மத்திய அரசின் திட்டத்திற்கு அடிப்படிந்து நீட் தேர்வு பல அடித்தட்டு விலிம்பு நிலை சிறுபான்மையின மாணவ/மாணவிகளின் தற்கொலை அதிகமாக அதிகரித்தது இது மாணவ கண்மணிகளின் பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.
- அதிக விலை ஏற்றம் தண்ணீர் பற்றாக்குறைகள் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு பிரச்சனைகள். தலையெடுத்து நின்றனர்.
- மேலும் தமிழ்நாட்டில் பல சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் மத்திய பாஜக தொண்டர்களால் அரங்கெறியது அதை அதிமுக அரசு தட்டிக்கேட்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டது.
Remove ads
கூட்டணி நிலைபாடு
- அதிமுக கூட்டணியிலிருந்த தேமுதிக கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் தரப்படாததால் கூட்டணியிலிருந்து விலகியது.[27]
- அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் முடிவாகியது.[28]
- அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் முடிவாகியது.[29]
- அதிமுக சார்பில் போட்டியிடும் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. மொத்தம் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் முதல்கட்டமாக அதிமுக 6 தொகுதிகளுக்கும், அமமுக 15 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாமக.,விற்கு 23 தொகுதிகளும், பா.ஜ.,விற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு, தொகுதிகள் இறுதி செய்யும் பணிகள் நடைபெற்றன.[30][31]
- அதிமுக கூட்டணியில், செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் (மேற்கு), சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகிய 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டது..[32]
- ஆண்டிப்பட்டி தொகுதியில் இரண்டாவது முறையாக எதிரெதிர் அணியில் சகோதரர்கள் களம் இறங்கினர். 2019-ல் ஆண்டிபட்டியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மகாராஜன், தனது தம்பி லோகிராஜனை 2 ஆயிரத்து 323 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[33]
- திமுக சார்பில் போட்டியிடும் தொகுதிகளும், அதன் வேட்பாளர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டது.[34]
- தொகுதி வழங்கப்படாததால் பாசகவில் சேர்ந்த தற்போதைய திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர், மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டார்.[35]
- ஆ. ராசா முதல்வரை பற்றி கூறிய சர்ச்சைக்குரிய பேச்சின் விளக்கத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. ஆ. ராசாவின் விளக்கத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம், ஆ. ராசா 48 மணிநேரத்திற்கு பிரச்சாரம் செய்யக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டது. அதேசமயம், திமுகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலிலிருந்தும், ஆ.ராசாவை நீக்கியும் உத்தரவிட்டிருந்தது.[36][37]
- வேளச்சேரி தொகுதியின் 92 ஆம் எண் கொண்ட வாக்குச்சாவடியின் வாக்குப் பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றது தேர்தல் விதி மீறல் என்பதால் அந்த வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.[38]
- அமமுக கூட்டணியில், ஒவைசியின் அகில இந்திய மச்லிசு-இ-இத்தாதுல் முசுலிமின் கட்சி வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட்டது.[39]
அதிமுக கூட்டணி ஆதரவு
- ஜெயலலிதா கூறியபடி நல்லாட்சி தொடர அதிமுக கூட்டணியை ஆதரிப்பதாக புதிய நீதிக் கட்சித் தலைவர் அறிவித்தார்.[40]
- சாதி மத சார்பற்ற நல்லாட்சி தொடர அதிமுக கூட்டணியை ஆதரிப்பதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் தெரிவித்தது.[41]
- நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சி அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது.[42]
- ஜாதி இனம் பாகுபாடின்றி ஆட்சிபுரியும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக, தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிவித்தது.[43]
- தமிழக விவசாயிகளின் தேவை அறிந்து செய்வதால் அதிமுக கூட்டணிக்கு தமிழக விவசாய சங்கம் ஆதரவு தெரிவித்தது.[44]
- மேலும் மூவேந்தர் முன்னணிக் கழகம், பசும்பொன் தேசிய கழகம், பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, இந்தியத் தேசிய குடியரசு கட்சி, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம், தமிழக ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி, செங்குந்தர் அரசியல் அதிகாரம் போன்ற அமைப்புகள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.[45]
திமுக கூட்டணி ஆதரவு
- ஐந்து கோரிக்கையுடன் மனிதநேய ஜனநாயக கட்சி திமுக கூட்டணிக்கு அதரவு அறிவித்தது.[46][47]
- விஸ்வகர்மா சமூகத்தினருக்கு ஏற்ற தேர்தல் வாக்குறுதியினால் கைவினைஞர் முன்னேற்றக் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது.[48]
- தமிழகத்தில் பாசிசத்தை எதிர்த்து வீழ்த்த திமுக கூட்டணியை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது.[49]
- மதச்சாா்பற்ற ஆட்சி அமைய திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகத் தமிழக மக்கள் முன்னணி தெரிவித்தது.[50]
- மத ரீதியாகப் பிளவுபடுத்தி, இந்திய ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் பாஜக கூட்டணியை வீழ்த்த திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அறிவித்தது.[51]
- மேலும் புதிய திராவிட கழகம்[52], திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு கோயில் பூசாரிகள் நலச் சங்கம்[53], புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி[54] போன்ற அமைப்புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
Remove ads
கட்சிகளும் கூட்டணிகளும்
தேசிய ஜனநாயகக் கூட்டணி

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி

அமமுக கூட்டணி
மக்கள் நீதி மய்யம்
சகாயம்+
எந்த கூட்டணியிலும் இல்லாத கட்சிகள்
Remove ads
வேட்பாளர் பட்டியல்
வேட்புமனு தாக்கல் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலவரங்கள்:
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் பரப்புரைகள், அவற்றின் தேர்தல் அறிக்கைகள் குறித்த தகவல்கள் இங்கு ஆவணப்படுத்தப்படுகின்றன. உலக சேப்பர்சு சென்னை, அரசியல் பாகுபாடற்ற அமைப்பு இந்த அமைப்பு உலக பொருளாதார மன்றம் இயக்கப்படுகிறது TN Election Promises 2021 [55] இந்த தளமானது வாக்களர்களுக்கு தேவையான வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை தொகுத்துள்ளது.
Remove ads
கருத்துக் கணிப்புகள்
வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் 71.78 விழுக்காடு வாக்குகள் பதிவானது. இது முந்தைய 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலை விட 2.03% குறைவு. இதில் மாவட்ட வாரியாக அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் (83.92%) சதவீத வாக்குப் பதிவும், குறைந்தபட்சமாக சென்னையில் (59.06%) சதவீத வாக்குகளும் பதிவானது.[69] தொகுதி வாரியாக, அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகளும் பதிவானது.
மாவட்ட வாரியாக வாக்குகளின் சதவீதம்
அதிகபட்சம் | குறைந்தபட்சம் |
முடிவுகள்
வாக்கு எண்ணும் பணி 2021 மே 2 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது, முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டன. இதற்கு அரை மணிநேரம் கழித்து, இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தேர்தல் முன்னணி நிலவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் இசீநே காலை 9 மணி முதல் அறிவிக்கத் துவங்கியது. திமுக 125 தொகுதிகளைக் கைப்பற்றி, தனித்து ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. அதன் கூட்டணி ம.மு.கூ மொத்தம் 159 இடங்களைக் கைப்பற்றியது. இதேவேளை ஆளும் தே.ச.கூ 75 இடங்களைக் கைப்பற்றியது. இதில் அஇஅதிமுக 65 இடங்களில் வென்றது. ஏனைய கட்சிகளோ அல்லது சுயேச்சை வேட்பாளர்களோ எந்த ஒரு தொகுதியையும் கைப்பற்றவில்லை. பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த திமுக 2011 முதல் 2021 வரை ஆட்சியில் இருந்த அஇஅதிமுக இடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.[70]
கூட்டணி வாரியாக முடிவுகள்
159 | 75 |
மமுகூ | தேசகூ |
கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்
மமுகூ (45.38%)
தேசகூ (39.72%)
நாதக (6.58%)
அமமுக+ (2.79%)
மநீம+ (2.72%)
மற்றவை (1.80%)
நோட்டா (0.75%)
மாவட்ட வாரியாக
தொகுதி வாரியாக முடிவுகள்
கட்சிகள் பெற்ற வாக்குகள்
இவற்றையும் காண்க
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads