எழுத்துமயக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எழுத்துமயக்கம் (Dyslexia) என்பது எந்த ஒரு தகவலையும் எழுத இயலாத அல்லது புரிந்து படிக்க இயலாத கருத்தொற்றுமை இல்லாத ஒரு நிலையாகும். புரிந்தும் படிக்க இயலாமை, சொல்லெழுத்துக்கேடு, வாசிப்புக் குறைபாடு, திரிபு வாசிப்பு என்ற பல சொற்றொடர்களாலும் இந்நிலை விவரிக்கப்படுகிறது. இது நோயல்ல ஒரு கற்றல் குறைபாடு என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.[1][3] மூளை மற்றும் நரம்பியல் நிபுணர்கள், இதை 'இயலாமை' என்றும் கூறுகிறார்கள். கிரேக்க மொழியில் ‘டிசு’ என்றால் ‘சிரமம்.’ ‘லெக்சியா’ என்றால் ‘மொழி’ என்ற பொருளில் `தெளிவற்ற பேச்சு' என்பதை விவரிக்கும் சொற்றொடரே எழுத்து மயக்கம் எனப்படுகிறது.
இக்குறைபாடால் வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு அளவுகளில் பாதிக்கப்படுகின்றனர். சொற்களை உச்சரிப்பதில் சிரமம், விரைவாகப் படிப்பதில் சிரமம், வார்த்தைகளை எழுதுவதில் சிரமம், உள்ளத்தில் தோன்றும் வார்த்தைகளை ஒலிப்பதில் சிரமம்", சத்தமாகப் படிக்கும்போது வார்த்தைகளை உச்சரிப்பதில் சிரமம், ஒருவர் படிப்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் போன்றவை இக்குறைபாட்டால் விளையும் சில சிக்கல்கள் ஆகும்.[4][5] பெரும்பாலும் இந்த சிரமங்கள் முதலில் பள்ளியில் கவனிக்கப்படுகின்றன.[2] இச் சிரமங்கள் தன்னிச்சையானவையாகும். மேலும் இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு கற்றுக்கொள்ள இயல்பான விருப்பமும் இருக்கும்.[4] எழுத்து மயக்கம் உள்ளவர்களுக்கு அதிகக் கவனக்குறை, மீச்செயற்பாடு கோளாறு, மொழி வளர்ச்சி கோளாறுகள் மற்றும் எண்களில் சிரமங்கள் போன்ற இயலாமைகள் அதிகமாக இருக்கும்.[2][6]
எழுத்துமயக்க குறைபாட்டிற்கான சிகிச்சையானது நபரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அவருக்கான கற்பித்தல் முறைகளை சரிசெய்வதை உள்ளடக்கியுள்ளது. ஒருவேளை அடிப்படை பிரச்சனையை குணப்படுத்தாவிட்டாலும், கற்பித்தல் முறைகளை சரிசெய்வது அறிகுறிகளின் அளவையோ அல்லது தாக்கத்தையோ குறைக்கலாம்.[7] பார்வையை இலக்காகக் கொண்ட சிகிச்சைகள் பலனளிக்கவில்லை.[8] எழுத்து மயக்கக் குறைபாடு என்பது மிகவும் பொதுவான கற்றல் குறைபாடு ஆகும். இது உலகின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.[9] மக்கள் தொகையில் 3–7% பேரை இக்குறைபாடு பாதிக்கிறது;[2][10] இருப்பினும், பொது மக்களில் 20% வரை ஓரளவு அறிகுறிகளைக் கொண்டிருக்கின்றனர்.[11] எழுத்து மயக்கம் பெரும்பாலும் சிறுவர்களிடையே கண்டறியப்பட்டாலும், ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களிடையே சுயமாக பூர்த்திசெய்யும் பரிந்துரை சார்பும் இதற்கு ஓரளவு காரணமாகும்.[2][12] இந்த நிலை ஆண்களையும் பெண்களையும் சமமாகப் பாதிக்கிறது என்றும் கூறப்படுகிறது. சிலர் எழுத்து மயக்கக் குறைபாட்டை வேறுபட்ட கற்றல் முறையாகக் கருதுகிறார்கள். இதற்கு நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டும் உள்ளன என்றும் நம்புகிறார்கள்.[13][14]
Remove ads
வகைகள்
எழுத்துமயக்கக் குறைபாடு, வளர்ச்சி எழுத்துமயக்கம், பெறப்பட்ட எழுத்துமயக்கம் என இரண்டு வடிவங்களாக பிரிக்கப்படுகிறது. [15] மூளை காயம் அல்லது பக்கவாதம் போன்ற நரம்பியல் பாதிப்புகளுக்குப் பிறகு பெறப்பட்ட எழுத்துமயக்க பாதிப்பு ஏற்படுகிறது. பெறப்பட்ட எழுத்துமயக்க பாதிப்பு உள்ளவர்கள் வளர்ச்சிக் கோளாறின் சில அறிகுறிகளைக் காட்டுகிறார்கள். ஆனால் இவர்களுக்கு வெவ்வேறு மதிப்பீட்டு உத்திகள் மற்றும் சிகிச்சை அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன. கரு வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் மூளை வளர்ச்சியில் ஏற்படும் சிக்கல்களால் வளர்ச்சி எழுத்துமயக்கம் ஏற்படுகிறது. குழந்தை முதிர்ச்சியடையும் போது இந்த வகை எழுத்துமயக்கம் காலப்போக்கில் குறைகிறது.[16] தற்காலத்தில் பல்வேறு வகையான எழுத்துமயக்க வகைகள் அறியப்படுகின்றன.
Remove ads
அறிகுறிகள்
எழுத்துமயக்கக் குறைபாட்டின் அறிகுறிகள் பின்வருமாறு:
- பள்ளி வயதுக்கு முன்
- தாமதமாகப் பேசுதல்
- புதிய சொற்களை மெதுவாகக் கற்றுக்கொள்வது
- வார்த்தைகளில் ஒலிகளை தலைகீழாக மாற்றுவது அல்லது ஒரே மாதிரியாக ஒலிக்கும் சொற்களை சரியாக உருவாக்குவதில் சிக்கல்கள்.[17]
- எழுத்துக்கள், எண்கள் மற்றும் வண்ணங்களை நினைவில் கொள்வதில் அல்லது பெயரிடுவதில் சிக்கல்கள்
- குழந்தைப் பாடல்களை, குழந்தை விளையாட்டுகளைக் கற்றுக்கொள்வதில் சிரமம்.[18]
- பள்ளி வயதில்
- வயதுக்கு ஏற்ற அளவை விட மிகவும் குறைவாக வாசிப்பு.
- கேட்டதைச் செயலாக்குவதிலும் புரிந்துகொள்வதிலும் சிக்கல்கள்
- சரியான வார்த்தையைக் கண்டுபிடித்து பதில்களை உருவாக்குவதில் சிரமம்
- வரிசையை நினைவில் கொள்வதில் சிக்கல்கள்
- எழுத்துக்களிலும் சொற்களிலும் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளைப் அறிவதில் சிக்கல்
- அறிமுகமில்லாத வார்த்தையின் உச்சரிப்பை உச்சரிக்க இயலாமை.
- எழுத்துப்பிழை உணர்வதிலும் பலகையில் இருந்து புத்தகத்திற்கு நகலெடுப்பதிலும் சிரமம்
- வாசிப்பு அல்லது எழுதுதல் உள்ளிட்ட பணிகளை முடிக்க நீண்ட நேரம் செலவிடுதல்
- வாசிப்பைத் தவிர்த்தல்
- ஒரு வார்த்தையின் பகுதி அல்லது ஒரு வாக்கியத்தின் பகுதி அல்லது பகுதிகளை தவறவிடுதல்.
- இளமைப் பருவம் மற்றும் முதிர்வயது வரை இந்த சிக்கல்கள் நீடிக்கும். கதைகளைச் சுருக்கமாகக் கூறுதல், மனப்பாடம் செய்தல், சத்தமாக வாசிப்பது அல்லது வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்வது போன்ற சிரமங்களும் இதில் அடங்கும். எழுத்துமயக்க குறைபாடுள்ள பெரியவர்களால் பெரும்பாலும் நல்ல புரிதலுடன் படிக்க முடியும், இருப்பினும் அவர்கள் கற்றல் சிரமம் இல்லாமல் மற்றவர்களை விட மெதுவாகப் படிக்க முனைகிறார்கள்.
Remove ads
தீர்வு
குழந்தையின் வாசிப்பு நிலை வயதிற்கு எதிர்பார்க்கப்படும் அளவை விடக் குறைவாக இருந்தால் அல்லது எழுத்துமயக்க குறைபாட்டின் பிற அறிகுறிகளை கவனித்தால் மருத்துவரிடம் அழைத்துப்போவது அவசியமாகும். இக்குறைபாடு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படாமல் போகும்போது, குழந்தைப் பருவ வாசிப்பு சிரமங்கள் முதிர் வயது வரை தொடரும்.
எழுத்துமயக்க மொழிசார் குறைபாடுகளை முழுமையாகத் தீர்க்க இயலாவிட்டாலும், கணிசமான அளவு நிவர்த்தி செய்ய முடியும். சராசரி மாணவர்களுக்குப் பயன்படுத்தப்படும் அதே கற்பித்தல் முறையை இக்குறையுடைய மாணவர்களுக்குப் பயன்படுத்திக் கற்பிப்பதால் பயன் இல்லை. சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் கற்பித்தல் வேண்டும்.
மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads