எஸ். தங்கராசு
தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
எஸ். தங்கராசு (S. Thangarasu; 5 செப்டம்பர் 1949 – 6 சூன் 1994) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து 1984 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராக, பெரம்பலூர் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
Remove ads
இளமையும் கல்வியும்
தங்கராசு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கொளத்தூரில் 5 செப்டம்பர் 1949ஆம் ஆண்டு சுப்ரமணியம் என்பவருக்கும் மரியாயிக்கும் மகனாக பிறந்தார். பள்ளிக் கல்வியை அரியலூரில் முடித்தப் பின்னர் கல்லூரிக் கல்வியினை தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் பயின்றார். இவர் இளம் அறிவியலில் இயற்பியல் படித்து இறுதி தேர்வினை எழுதிய நிலையில், தேர்வு முடிவுகள் வரும் முன்பே தமிழக வேளாண்மை துறை அறந்தாங்கி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்தார்.
Remove ads
அரசியல் வாழ்க்கை
மாணவ பருவம் முதலே அரசியலில் ஈடுபட்டு வந்த தங்கராசு, 1980இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தார். இதன் பின்னர் 1984இல் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads