எஸ். தட்சிணாமூர்த்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எஸ். தட்சிணாமூர்த்தி (சுசர்லா தட்சிணாமூர்த்தி சாஸ்திரி, இளையவர், நவம்பர் 11, 1921 - பெப்ரவரி 9, 2012) ஓர் இந்திய இசைக் கலைஞர் ஆவார். திரைப்பட இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், கருநாடக சங்கீத வித்துவான், வயலின் வாத்தியக் கலைஞர், இசைத்தட்டுத் தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர்.[1] தமிழ், தெலுங்கு, இந்தி, சிங்களம் மொழித் திரைப்படங்களுடன் ஹாலிவூட் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.[1][2]
இவரது தாத்தாவான சுசர்லா தட்சிணாமூர்த்தி சாஸ்திரி சீனியர் கருநாடக மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகப்பிரம்மம் தியாகராஜர் சுவாமிகளின் நேரடி சிஷ்ய பரம்பரையில் வந்தவராவார்.[2]
Remove ads
இளமைக்காலம்
எஸ். தட்சிணாமூர்த்தி 1921 நவம்பர் 11-ஆம் நாள் ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள பெதகல்லேபள்ளி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை சுசர்லா கிருஷ்ணபிரம்ம சாஸ்திரி ஒரு சங்கீத ஆசிரியராவார். தாயார் அன்னபூரணம்மா. ஆந்திரா பல்கலைக் கழகத்தில் கருநாடக இசையில் இளங்கலை பட்டம் பெற்றார்.[1]
தொழில் வாழ்க்கை
1938 ஆம் ஆண்டில் ஹெச். எம். வி. இசைத்தட்டுக் கம்பெனியில் ஆர்மோனியம் வாசிக்கும் கலைஞராக பணியில் அமர்ந்தார். பின்னர் அனைத்திந்திய வானொலி நிலையத்தில் 'ஏ' தர இசை வித்துவானாக பணியாற்றினார். பின்னர் தென்னிந்திய பகுதிக்கான இயக்குநராகப் பதவியுயர்வு பெற்றார்.
பின்னர் திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கி தெலுங்கு, தமிழ், கன்னடம், சிங்களம் ஆகிய மொழிப் படங்களுக்கு இசையமைத்தார். ஹாலிவூட்டில் ஜங்கிள் மூன் மென் (1955) உட்பட பல திரைப்படங்களுக்கு ரீரிக்கார்டிங் எனப்படும் பின்னணி இசை வழங்கினார்.[1]
Remove ads
இறப்பு
நீரிழிவு நோய் காரணமாக 1972 ஆம் ஆண்டில் ஒரு கண்ணில் பார்வையை இழந்தார். பின் 1987 ஆம் ஆண்டில் மறு கண்ணிலும் பார்வையை இழந்தார். 2012 பெப்ரவரி 9-ஆம் நாள் மூச்சுத் திணறல் காரணமாகச் சென்னையிலிருந்த அவரது இல்லத்தில் காலமானார்.[3]
பணியாற்றிய தமிழ்த் திரைப்படங்கள்
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads