டி. ஆர். ரகுநாத்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டி. ஆர். ரகுநாத் (T. R. Raghunath, திமாச்சிபுரம் ராஜகோபால் ரகுநாத், 16 சூலை 1912 – 2 சனவரி 1990) தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். கிட்டத்தட்ட 30 திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் ராஜா சந்திரசேகரின் தம்பி ஆவார்.[3]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
ரகுநாத் 1935 ஆம் ஆண்டில் ஞானசௌந்தரி திரைப்படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றினார். சிறினிவாசா சினிடோனுக்காக 1936 இல் தாரா சசாங்கம் திரைப்படத்தில் ஒலிப்பதிவாளராகப் பணியாற்றினார். அதே ஆண்டில் கிழட்டு மாப்பிள்ளை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 1940களில் ம. கோ. இராமச்சந்திரன் இவரது சில திரைப்படங்களில் சிறு வேடங்களில் தோன்றி நடித்தார். 1960 இல் ம. கோ. இராமச்சந்திரன் நடித்த ராஜா தேசிங்கு திரைப்படத்தை இயக்கினார்.[1] கண்ணகி (1942) திரைப்படத்தில் டி. ஆர். ரகுநாத் நடனக் காட்சியை அமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் மாதவியாக நடித்த எம். எஸ். சரோஜாவைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்டார்.[4]
ரகுநாத் பின்னர் கற்பகம் கலையகத்தில் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றினார், அதன் பிறகு அவர் இந்தியத் திரைப்படப் பிரிவின் மதராசுக் கிளையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[1]
Remove ads
இயக்கிய திரைப்படங்கள்
Remove ads
திரைக்கதைகள்
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads