எஸ். நடராஜன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எஸ். நடராஜன் இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவர். இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக, செய்தி வாசிப்பவராக, நிகழ்ச்சி தயாரிப்பாளராக, நேர்முக வர்ணனையாளராக 30 ஆண்டுகளுக்கு மேலாகவும், ஒளிபரப்புத்துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணியாற்றியவர்.
Remove ads
வாழ்க்கைச் சுருக்கம்
நடராஜன் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புன்னாலைக்கட்டுவன் என்னும் ஊரில் சோமசுந்தர ஐயர், மனோன்மணி ஆகியோருக்குப் பிறந்தவர்.[1] தந்தை உள்ளூர் அஞ்சல் நிலையப் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றியவர். நடராஜன் புன்னாலைக்கட்டுவன் அரசினர் பாடசாலை, ஏழாலை விக்கினேசுவரா வித்தியாலயம், உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.[1] 1951 இல் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்து, வரி உத்தியோகத்தராகப் பதவி உயர்வு பெற்றார்.
Remove ads
அறிவிப்புத் துறையில்
இலங்கை வானொலியில் வீ. ஏ. கபூர் தயாரித்து வழங்கிய வளரும் பயிர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் சிறுவர் மலர் நிகழ்ச்சியின் வானொலி மாமாவாக இருந்து அந்நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார். 1960 ஆம் ஆண்டில் பகுதி நேர ஒலிபரப்பாளரானார். அந்நாட்களில் இருந்து செய்திகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து செய்திகளை வாசித்தும் வந்தார். பலதும் பத்தும், முத்தி நெறி, செய்தியின் பின்னணியில், வெளிநாட்டுச் செய்தி விமரிசனம், தொழிலாளர் வேளை, சைவநீதி போன்ற நிகழ்ச்சிகளையும் தயாரித்து வந்தார்.[1]
நல்லூர் முருகன் ஆலயம், திருக்கேதீஸ்வரம், செல்லசந்நிதி முருகன் ஆலயம் போன்றவற்றின் உற்சவ காலங்களிலும், ஆடிவேல் திருவிழாக்காலத்திலும் நேர்முகவர்ணனை வானொலியில் வழங்கியவர்.
Remove ads
பட்டங்கள்
- சைவ நன்மணி (இந்து சமயக் கலாசார அமைச்சு)[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads