எஸ். வி. சேகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் அல்லது எஸ். வி. சேகர் (பிறப்பு: 26 திசம்பர், 1950) தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். 2006 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க-வின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், பிறகு அக்கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.[1] இவருடைய நாடக வசனங்கள் நகைச்சுவைக்காக அறியப்பட்டாலும், அவற்றில் தொனிக்கும் நெருடலான இரட்டை அர்த்தங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. 1974-இல் முதல் இவர் தன்னுடைய கலைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
Remove ads
கல்வி மற்றும் தொழில்
எஸ். வி. சேகர், இயந்திரவியல் துறையில் பட்டையப்படிப்பும், காற்று பதனாக்க கருவி மற்றும் குளிர்சாதன பெட்டி சரிசெய்தல் போன்றவற்றிலும் பட்டயம் பெற்றுள்ளார். இவர் ஒலிப்பதிவாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், நிகழ்படமெடுப்பது, தொகுத்தல், இயக்குதல், என பல்வேறு தொழில்களை செய்துள்ளார். "நாரதர்" தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.[சான்று தேவை]
வானொலி நிகழ்ச்சிகள் தயாரிப்பு, நாடகங்களுக்காக சிறப்பு ஒலிகள் தயாரிப்பு, நாடக சம்பத்தப்பட்ட விசயங்களில் கைதேர்ந்தவர் என்று அறியப்பட்டவர். இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி பயிற்சிபெறுபவர்களின் கூட்டமைப்பிலிருந்து, சிறந்த அனைத்திந்திய நிகழ்ச்சி தயாரிப்பாளர் விருது–ஐ தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பெற்றிருக்கிறார்.[சான்று தேவை] இலங்கை வானொலிக்காக 275 க்கும் மேற்பட்ட ஒலிச்சித்திரங்களை தயாரித்திருக்கிறார்.
இவர் திரைப்படங்களுக்கான மத்திய தணிக்கை குழுவில் மாநில தலைவராக பணியாற்றியிருக்கிறார்.[சான்று தேவை]
Remove ads
நாடகத்துறை
1974–இல் நாடகப்ரியா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினார். இவர் இதுவரையிலும் சுமார் 24 நாடகங்களை தயாரித்து, 5400 முறைக்கும் மேலாக மேடையேற்றியுள்ளார். இவர் அறிமுகப்படுத்தியவர்கள் சிலர், கிரேசி மோகன், கோபு-பாபு, கிருஷ்ணகுமார், நிலா. இவர் கதாநாயகனாகவும், முக்கிய பாத்திரங்களிலும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
முதன் முதலாக முழுதும் வெளிநாட்டில் வெளிநாடுகளில் (அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், கொரியா, இந்தோனேசியா) எடுக்கப்பட்ட "அமெரிக்காவில் அருக்கானி" தொலைக்காட்சி தொடரை இயக்கி தயாரித்தவர்.[சான்று தேவை]
தன்னுடைய "பெரியதம்பி" நாடகத்தை அமெரிக்காவின் நியூஜெர்சியிலும், வாஷிங்டனிலும், குவைத்திலும் நடத்தினார். அதுமட்டுமின்றி அமெரிக்கா, கனடா, துபாய், அபுதாபி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாங்காக், ஆகிய நாடுகளில் தன் குழுவுடன் தன் நாடகங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். அமெரிக்காவில் 32 நாட்களில் தன் நாடகக்குழுவினருடன் 28 முழுநீள நாடகக்காட்சிகளை நடத்தி உள்ளார்.
Remove ads
பாராட்டுகளும் விருதுகளும்
- தமிழக அரசு விருதுகள்
- கலைவாணர் பதக்கம் (1991)
- கலைமாமணி பட்டம் (1993)
- பிற விருதுகள்
- மைலாப்பூர் அகாதமியின் சிறந்த நகைச்சுவையாளர் விருது – தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு [சான்று தேவை]
- விஸ்டம் பத்திரிகையின் சிறந்த நகைச்சுவையாளர் விருது (1990)[சான்று தேவை]
நாடக சபாக்களாலும்[யார்?] நிறுவனங்களாலும் இவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்களில் சில:
- நாடக சூப்பர் ஸ்டார்,
- காமெடி கிங்,
- சிரிப்பலை சிற்பி,
- நாடக வசூல் சக்ரவர்த்தி,
- நகைச்சுவை தென்றல்,
- நகைச்சுவை இளவரசன்,
- நகைச்சுவை நாயகன்,
- சிரிப்புச்செல்வன்,
- நகைச்சுவை வேதநாயகன்,
- வாணி கலாசுதாகர நாடக கலாசாரதி,
- நாடகரத்னா
சில குறிப்புகள்
- 15 ஆண்டுகளாக சின்னத்திரை நடிகர்கள் சங்க தலைவராக இருந்து வருகிறார்.[சான்று தேவை]
- பிராமணர்கள் ஒற்றுமைக்காக பெடரேசன் ஆப் ப்ராமின் அசோசியேசன்ஸ் சதர்ன் ரீஜியன்(Federation of Brahmin Associations Southern region (FEBAS)) என்ற அமைப்பை துவக்கியுள்ளார். [சான்று தேவை]
நாடகங்கள்
- வால்பையன்
- பெரியப்பா
- காட்டுல மழை
- காதுல பூ
- அதிர்ஷ்டக்காரன்
- அல்வா
- ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி
- சின்னமாப்ளே பெரியமாப்ளே
- "அன்னம்மா பொன்னம்மா"
- "கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்"
- "ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது"
- "யாமிருக்க பயமேன்"
- "பெரிய தம்பி"
- "இது ஆம்பளைங்க சமாசாரம்"
- "மனைவிகள் ஜாக்கிரதை"
- "சிரிப்பு உங்கள் சாய்ஸ்"
- "குழந்தை சாமி"
- "வண்ணக் கோலங்கள்"
- "யெப்பொவும் நீ ராஜா"
- "சாதல் இல்லயேல் காதல்"
- "மகாபாரதத்தில் மங்காத்தா"
- "அமெரிக்காவில் அருக்காணி"
- "எல்லாரும் வாங்க"
- "எல்லாமே தமாஷ் தான்"
- "நம் குடும்பம்"
- "காட்டுல மழை"
- "காதுல பூ"
Remove ads
திரைப்படங்கள்
- பூவே பூச்சூடவா
- சகாதேவன் மகாதேவன்
- மணல் கயிறு
- கதாநாயகன்
- ஜீன்ஸ்
- "வறுமையின் நிறம் சிகப்பு"
- "சிதம்பர ரகசியம்"
சர்ச்சைகள்
பெண் பத்திரிகையாளர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துகளை முகநூலில் பகிர்ந்ததற்காக, இவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உட்பட, 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவுக் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.[2] மே 2018 அன்று, மெட்ராஸ் உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் மறுத்தது[3]. உயர் நீதிமன்றம் ஜாமீனை மறுத்த பின்னரும் கூட, காவல்துறையினர் சேகரைத் கைது செய்து வைப்பதில் இருந்து விலகி இருந்தனர். அவர் போலீஸ் பாதுகாப்புடன் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் காணப்பட்டார். பின்னர் அவருக்கு 2018 ஜூன் மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது[4][5]. இந்த வழக்கில் ஒரு மாதம் சிறைத் தண்டனையும் பதினைந்தாயிரம் அபராதமும் விதித்துச் சிறப்பு நீதிமன்றம் 2024 பிப்ரவரியில் தீர்ப்பளித்தது; தண்டனையைச் சென்னை உயர்நீதிமன்றமும் 2025 ஜனவரியில் உறுதி செய்தது.[6][7]
பதற்றம் மூட்டும் பேச்சு மற்றும் இந்தியாவின் கொடியை மதநம்பிக்கைகளுடன் ஒப்பிட்டு அவமதிப்பு
ஆகஸ்ட் 03, 2020 அன்று சேகர் பதற்றம் மூட்டும் பேச்சை வழங்கினார்[8]. இந்தியாவின் கொடிக்கு ஒரு மத சாயம் வழங்கப்பட்டது[9]. இது சமூக கண்டனங்களுடன் பொலிஸ் புகாரும் பதிவு செய்யப்பட்டது[8][10]. செப்டம்பர் 2020 அன்று, கைது செய்யக்கூடாது என்று காவல்துறையினரை பரிசீலிக்க அவர் நிபந்தனையின்றி நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது[9].
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads