ஏமி ஆடம்சு
அமெரிக்க நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏமி லூ ஆடம்சு (ஆங்கிலம்: Amy Lou Adam) (பிறப்பு: ஆகத்து 20, 1974) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் தனது நகைச்சுவை மற்றும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு பெயர் பெற்றவர், அத்துடன் உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் வருடாந்திர தரவரிசையில் மூன்று முறை இடம்பெற்றுள்ளார். மற்றும் ஆறு அகாதமி விருதுகள் மற்றும் ஏழு பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகளுக்கான பரிந்துரைகளுடன் கூடுதலாக இரண்டு கோல்டன் குளோப் விருதுகள் உட்பட பல்வேறு பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
இவர் அமெரிக்கன் ஹஸ்ல் (2013), அரைவல் (2016) போன்ற பல திரைப்படங்களிலும் அத்துடன் 2013 ஆம் ஆண்டு முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட மீநாயகன் படங்களில் லோயிஸ் லேன் என்ற கதாபாத்திரத்தை சித்தரித்து வெளியான மேன் ஆஃப் ஸ்டீல் (2013), பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016), ஜஸ்டிஸ் லீக் (2017) மற்றும் சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் (2021) போன்ற படங்களில் நடித்துள்ளார்.[1]
2014 ஆம் ஆண்டில் டைம் இதழில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக இவர் பெயரிடப்பட்டார், மேலும் போர்ப்ஸ் பிரபலங்கள் 100 பட்டியலிலும் இடம்பெற்றார்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
ஆமி லூ ஆடம்சு ஆகஸ்ட் 20, 1974 இல் விசென்சாவில் அமெரிக்க பெற்றோர்களான கேத்ரின் மற்றும் ரிச்சர்ட் ஆடம்ஸின் மகளாகப் பிறந்தார்.[2][3] இவருக்கு நான்கு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர்.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads