அகாதமி விருது

சினிமா சாதனைகளின் சிறப்பிற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் From Wikipedia, the free encyclopedia

அகாதமி விருது
Remove ads

அகாதமி விருது, (ஆங்கிலம்: Academy Awards) ஆஸ்கார் விருது அல்லது ஓஸ்கார் விருது எனப் பரவலாக அறியப்படும் அகாதமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும்.

விரைவான உண்மைகள் அகாதமி விருது, விருது வழங்குவதற்கான காரணம் ...
Remove ads

வரலாறு

முதன்முதலாக அகாதமி விருதுகள் மே 16, 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் மேபைர் ஹோட்டலில் பெரிதாக நடந்தது.[1] மொத்தம் பதினைந்து விருதுகள் வழங்கப்பட்டன.

வெற்றியாளர்கள் நிகழ்ச்சிக்கு மூன்று மாதங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டனர். 1930ஆம் வருடம் வெற்றியாளர்கள் நிகழ்ச்சியின் இரவு 11 மணிக்கு பத்திரிகையில் வெளியிடப்பட்டன.

2010 ஆம் வருடம் வரைக்கும் மொத்தம் 2789 விருதுகள் வழங்கப்பட்டன.[2]

Remove ads

அகாதமி விருதுகள்

Remove ads

சிறப்பு அகாதமி விருதுகள்

இவ்விருதுகள் அகாடெமியின் சிறப்பு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுவதில்லை. இவ்விருதிற்கு தேந்தேடுக்கப்படுபவர் இவ்விருதை வாங்க மறுக்கலாம்.

  • சிறப்பு அகாதமி விருது: 1929 - தற்போது
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதமி விருது: 1931 - தற்போது
  • கோர்டன் இ. சாயர் விருது: 1981 - தற்போது
  • ஜீன் ஹேர்ஷோல்ட் ஹுமானிட்டேரியன் விருது: 1956 - தற்போது
  • இர்விங் ஜி. தல்பெர்க் நினைவு விருது: 1938 - தற்போது

அடிக்குறிப்புகள்

    மேற்கோள்கள்

    மேலும் படிக்க

    வெளி இணைப்புகள்

    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads