எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெனிவாவின் இராபர்ட்டு (1342 – 16 செப்டம்பர் 1394) என்னும் இயற்பெயர் கொன்ட எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட் என்பவர் பிரென்சு கர்தினால்களால் ஆறாம் அர்பனுக்கு எதிராக திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். இவர் கத்தோலிக்க திருச்சபையால் எதிர்-திருத்தந்தையாக கருதப்படுகின்றார். அவிஞ்ஞோனிலிருந்து ஆட்சி செய்த முதல் எதிர்-திருத்தந்தை இவர் ஆவார்.

ஜெவிவானின் கோமகனான மூன்றாம் அமதேயுஸின் மகனாக 1342இல் இவர் அன்னேசி நகரில் பிறந்தார்.[1] இவர் 1361இல் தெயூவேனின் ஆயராகவும், 1368இல் கம்பரயின் பேராயராகவும், 30 மே 1371இல் கர்தினாலாகவும் உயர்த்தப்படார்.[2]
வடக்கு இத்தாலியின் 1377முதல் திருத்தந்தை நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சியினை அடக்க பாடுபட்டார்.[3]
இஃபான்டி என்னும் இடத்தில் 20 செப்டம்பர் 1378 அன்று பிரென்சு கர்தினால்களால் ஆறாம் அர்பனுக்கு எதிராக திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டார்.[4] மேற்கு சமயப்பிளவின் முதல் எதிர்-திருத்தந்தை இவர் ஆவார். [5]
பர்கண்டி,[6] பிரான்சு, நேபல்சு, இசுக்காட்லாந்து மற்றும் சவாய் ஆகிய நாடுகள் இவரை ஆதரித்தனர்.[7]
இத்தாலியில் இவர் ஏற்கப்படாததால் இவர் அவிஞ்ஞோனுக்கே திரும்பினார். அங்கு இவர் பிரென்சு அரசின் தயவில் வாழவேண்டியதாயிற்று. இவர் சில நல்ல கர்தினால்களை நியமித்ததாலும், காசுக்கு திருச்சபையின் பதவையினை விற்றல் முதலிய கெட்ட செயல்களில் ஈடுபட்டார்.
16 செப்டம்பர் 1394 அன்று இவர் அவிஞ்ஞோனில் இறந்தார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads