ஏ. ஆர். இரமேஷ்

தமிழ் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia

ஏ. ஆர். இரமேஷ்
Remove ads

ஏ. ஆர். இரமேஷ் (A. R. Ramesh) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றியுள்ளார். 1990 களின் பிற்பகுதியில் தீவிரமாக திரைப்பட் துறையில் செயல்பட்ட இவர், அதிரடி மற்றும் காதல் படங்களை உருவாக்கினார்.

விரைவான உண்மைகள் ஏ.ஆர். இரமேசுA. R. Ramesh, பிறப்பு ...
Remove ads

தொழில்

இரமேஷ் விஜயகாந்த் நடித்த தாயகம் (1996) படத்தில் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியால் இவர் குறுகிய காலத்தில் மூன்று படங்களுக்கு ஒப்பந்தமானார். பின்னர் இவர் தினமும் என்னை கவனி (1997), இனி எல்லாம் சுகமே (1998) ஆகிய காதல் படங்களைத் உருவாக்கினார். இவை இரண்டுமே வணிக ரீதியாக எத்பார்த்த வெற்றியைத் தரவில்லை.[1] மேலும் இரமேஷ் ஒன்பது இயக்குநர்களுடன் இணைந்து பல நாயகர்கள் நடித்த சுயம்வரம் (1999) படத்தில் பணியாற்றினார். அப்படத்தில் பார்த்திபன், சுவலட்சுமி சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.[2] இரமேஷ் பின்னர் இண்டிபெண்டன்ஸ் டே (2000) என்ற இருமொழி அதிரடி படத்திலும் பணியாற்றினார், இது தமிழிலும், கன்னடத்திலும் இரண்டு ஆண்டு காலத்தில் படமாக்கப்பட்டது. அப்படத்தில் அருண் பாண்டியன் மற்றும் சாய்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். 2001 ஆம் ஆண்டில், ரகுவரன் நடிப்பில் அப்பா என்ற திரைப்படத் தயாரிப்பைத் தொடங்கினார், அதன் தயாரிப்பு பணி முடிவடையவில்லை.[3]

Remove ads

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads