தாயகம் (திரைப்படம்)
ஏ. ஆர். இரமேஷ் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாயகம் திரைப்படம் ஏ. ஆர். இரமேஷ் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளியான அதிரடித் தமிழ்ப் படமாகும். விஜயகாந்த், அருண் பாண்டியன், நெப்போலியன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தேவா இசையமைப்பில் 15 ஜனவரி 1996-இல் வெளிவந்தது. வசூலில் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. [1][2] இத்திரைப்படம் தெலுங்கில் மாத்ருபூமி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[3]
Remove ads
கதை
மரண தண்டனை பெற்ற மூன்று கைதிகள் சிறையிலிருந்து தப்பித்து, அப்துல் சலிம் (லஷ்மி ரத்தன்) எனும் விஞ்ஞானி பயணிக்கும் விமானத்தை கடத்துகின்றனர். ஏனெனில் அவர் ஒரு அதிசய கண்டுபிடிப்பான ஒரு மருந்தை தனக்கு சொந்தமாக்கி கொள்ள கடத்துகின்றனர். விமான ஒட்டி (நெப்போலியன்) கடத்தல்காரர்களின் கட்டளைகிணங்க விமானத்தை காஷ்மீர் மலை மீது இறக்குகிறார். அங்கே, ஸ்னொபியர் (மன்சூர் அலிகான்) எனும் தீவிரவாதிகளின் தலைவன் மருந்தை பெறுவதற்காக பயணிகளை கொல்வதாக மிரட்டுகிறான். அவர்களை மீட்பதே மீதி கதை.
Remove ads
நடிகர்கள்
- சக்திவேலாக விஜயகாந்த்
- பயில்வானாகஅருண் பாண்டியன்
- நெப்போலியன்
- சகிலாவாக ரஞ்சிதா
- மோகினி
- ஸ்னோபியராக மன்சூர் அலி கான்
- அப்துல் சலிம் ஆக லஷ்மி ரத்தன்
- சுனிலாக கசான் கான்
- சக்திவேல் தந்தையாக பீலி சிவம்
- விவேக்
- தியாகு
- பாலு ஆனந்த்
- ஏஞ்சலாவாக பேபி ஜெனிபர்
விருதுகள்
இத்திரைப்படம் வெளியானபோது பின்வரும் விருதுகளை பெற்றது:
- தமிழ் மாநில திரைப்பட விருதில் சிறந்த நடிகருக்கான சிறப்புவிருது விஜயகாந்துக்கு கிடைத்தது.
- தமிழ்மாநில திரைப்படவிருதில் சிறந்த கவிஞர் விருது பிறைசூடனுக்கும் கிடைத்தது.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கான பின்னணி இசையையும் பாடலுக்கும் தேவா இசையமைத்திருந்தார். 1996-இல் பாடல்கள் வெளியானது, இதிலுள்ள 5 பாடல்களை கவிஞர் பிறைசூடன் எழுதியிருந்தார். [4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads