ஏ. ஆர். நாப்

From Wikipedia, the free encyclopedia

ஏ. ஆர். நாப்
Remove ads

சர் ஆர்தர் ரோலண்ட் நாப் (Sir Arthur Rowland Knapp) (பிறப்பு: 1870 திசம்பர் 10 - இறப்பு: 1954 மே 22) இவர் ஓர் பிரித்தானிய அரசு ஊழியர் ஆவா., இவர் 1923 முதல் 1926 வரை சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவின் வருவாய் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மேலும் பிரித்தானிய பேரரசின் ஆணைக்குழுவின் தளபதியாகவும், விக்டோரியா மகாராணி நிறுவிய வீரத்தின் ஒரு வரிசையாக இந்திய நட்சத்திரத்தின் மிக உயர்ந்த ஆணையாகவும் மற்றும் விக்டோரியா மகாராணியால் நிறுவப்பட்ட வீரவணக்கத்தின் ஒரு வரிசையாகவும் இருந்தார்.

Thumb
ஆர்தர் ரோலண்ட் நாப்
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

ஆர்தர் நாப் 1870 இல் வூல்ஸ்டனில் லெப்டினன்ட் கர்னல் சார்லஸ் பாரெட் நாப் என்பவருக்குப் பிறந்தார். வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளி மற்றும் ஆக்சுபோர்டில் உள்ள ஒரு கிறித்துவ தேவாலயப் பள்ளியில் கல்வி பயின்றார். இவர் புளோரன்ஸ் ஆனி மூர் என்பவரை 1899 ஆகஸ்ட் 9 அன்று இந்தியாவின் சென்னையில் மணந்தார்.[1] இவரது மனைவி புளோரன்ஸ் புனித எட்மண்ட்ஸ் ஹால் ஆக்சுபோர்டு கல்லூரியின் முதல்வர் எட்வர்ட் மூர் என்பவரின் மகளாவார்.

இவரது மகள் மார்கரெட் எல்ப்ரெடா நாப் பிரபல அரச கடற்படை அதிகாரி மற்றும் கடற்படை புலனாய்வு இயக்குநர் அந்தோனி பசார்ட் என்பவரை மணந்தார். மேலும் இறையியலாளர் சர் அந்தோணி எப். பசார்ட் என்பவர் இவரது பேரன் ஆவார்.[2]

Remove ads

தொழில்

நாப் 1891 இல் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்ட உதவி ஆட்சியர் மற்றும் நீதிபதியாக பணியாற்றினார். 1899 ஆம் ஆண்டில், இவர் வருவாய்த்துறை வாரியத்தின் கீழ் செயலாளராக நியமிக்கப்பட்டார். நாப் 1919ஆம் ஆண்டில் பிரித்தானிய பேரரசின் ஆணைக்குழுவின் தளபதியாக நியமிக்கப்பட்டார்., 1922ஆம் ஆண்டில் விக்டோரியா மகாராணி நிறுவிய வீரத்தின் ஒரு வரிசையாக இந்திய நட்சத்திரத்தின் மிக உயர்ந்த ஆணையாகவும் [3] 1924இல் விக்டோரியா மகாராணியால் நிறுவப்பட்ட வீரவணக்கத்தின் ஒரு வரிசையாகவும் இருந்தார்.).

Remove ads

சட்டமன்றம்

1923ஆம் ஆண்டில், நாப் சென்னை சட்டமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டார் . இதில் 1923 முதல் 1926 வரை பணியாற்றினார்.

இறப்பு

நாப் 1954 மே 22 அன்று தனது 83 வயதில் இறந்தார்.

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads