இந்தியக் குடியியல் பணிகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தியக் குடியியல் பணிகள், பொதுவாக குடியியல் பணிகள் என்று அழைக்கப்படும், அரசுப்பணிகள் இந்திய அரசினால் விடுதலைக்குப் பிறகு 1947இல் பிரித்தானிய அரசில் விளங்கிட்ட இந்தியக் குடியுரிமைப் பணியின் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்ட உயரிய குடியியல் பணிகளாகும். இந்தியக் குடியியல் பணி அதிகாரிகள் இந்தியப் பிரதமரின் அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

அண்மைக் காலத்தில் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பணிவாழ்வுகள் இளைஞரை ஈர்த்தாலும்,அமைக்கப்பட்ட நாட்களிலிருந்து இன்றுவரை இப்பணிகள் அவர்களின் முதல் விருப்பாக இருந்து வருகிறது.அரசியலமைப்பு புதிய பணிச்சேவைகளை ஏற்படுத்த நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் கொடுத்துள்ளது. இதன்படியே இந்திய வனப் பணி மற்றும் இந்திய வெளியாட்டுப் பணி சேவைகள் அமைக்கப்பட்டுள்ளன. பரந்த,பன்முக நாடான இந்தியாவின் இயற்கைவளம்,பொருளியல் மற்றும் மனிதவளங்களை மேலாண்மை புரிய இக்குடியியல் பணிகள் பெரிதும் துணைநிற்கின்றன. நடுவண் மற்றும் மாநில ஆட்சியாளர்களின் வழிகாட்டுதலுக்குகிணங்க பல்வேறு குடியியல் பணியாளர்கள் நாட்டின் சிறப்பான ஆளுமைக்கு வழிவகுக்கின்றனர்.

Remove ads

அமைப்பு

நாட்டின் பல்வேறு வளங்களை மேலாளும் இப்பணியாளர்கள் மிகுந்த திறனும் தலைமைப் பண்பேற்கும் தன்மையும் கொண்டவர்களாக இருத்தல் மிகவும் தேவையானதாகும். இப்பணியாளர்களைப் பல்வேறு பணிகளில் கடினமான போட்டிகளுடைய தேர்வுகள் மூலம் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிந்தெடுக்கிறது. மாநில அளவிலான பணிகளுக்கு மாநிலத் தேர்வாணையங்கள் தெரிந்தெடுக்கின்றன.

இந்தியக் குடியியல் பணிகள் இரன்டு வகைப்படும் அவை:

  • அனைத்திந்தியப் பணிகள்
  • நடுவண் குடியியல் பணிகள்

அனைத்திந்தியப் பணிகள்

இவர்கள் நடுவண் மற்றும் மாநிலப் பணிகளில் தேவைக்கேற்ப அமர்த்தப்படுவர். இவர்களுக்கான பணி விதிகள் தனியானவை.பணிச்சேவைகளில் இவை உயரிய தகுதியில் உள்ளன.

நடுவண் குடியியல் பணிகள் - பிரிவு ஏ (குரூப் "ஏ")

இவர்கள் நடுவண் அரசின் துறைசார்ந்த பணிகளில் மட்டுமே அமர்த்தப்படுவர்.

  • இந்தியப் படைக்கலத் தொழிற்சாலைகள் பணி
  • இந்தியப் பொறியியல் பணி
  • இந்தியத் தொலைத்தொடர்புப் பணி (இ.தொ.ப)
  • இந்திய அஞ்சல் பணி (இ.அ.ப)
  • இந்திய அஞ்சல் & தொலைதொடர்புக் கணக்கு மற்றும் நிதி பணி (IP&TAFS)
  • இந்திய இரயில்வே பணி இயந்திரப்பொறியாளர்(IRSME)
  • இந்திய இரயில்வே பணி மின்னியல்பொறியாளர்(IRSEE)
  • இந்திய இரயில்வே பணி சமிக்ஞை பொறியாளர்(IRSSE)
  • இந்திய இரயில்வே கணக்கு பணி (IRAS)
  • இந்திய இரயில்வே போக்குவரத்து பணி (IRTS)
  • இந்திய இரயில்வே பணியாளர் பணி (IRPS)
  • இந்திய இரயில்வே வைப்பகப் பணி(IRSS)
  • இந்திய கணக்கு & தணிக்கைப் பணி (IA&AS)
  • இந்திய நில அளவியல் பணி
Remove ads

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads