ஏ. கே. சி. சுந்தரவேல்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ. கே. சி. சுந்தரவேல் (A.K.C.Sundaravel) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திருப்பத்தூர் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
பின்னர் 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை திருப்பத்தூர் நகரசபைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் சேர்ந்து, நகரச் செயலாளராகப் பதவி வகித்தார்.
Remove ads
குடும்பம்
விஜயலட்சுமி என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு ஒரு மகள் பிறந்தார்.
இறப்பு
இவரும், இவருடைய மனைவியும் ஏப்ரல் 06, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்தனர்.[3][4][5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads