வேலூர் மாவட்டம்

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

வேலூர் மாவட்டம்
Remove ads

வேலூர் மாவட்டம் (Vellore district) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் வேலூர் ஆகும். 28 நவம்பர் 2019-இல் வேலூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு இராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் நிறுவப்பட்டது.[2][3]

வேலூர்
மாவட்டம்
Thumb
வேலூர்க் கோட்டை
Thumb
வேலூர் மாவட்டம்:அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் வேலூர்
பகுதி வட மாவட்டம்
ஆட்சியர்
வே. இரா. சுப்புலெட்சுமி,
இ.ஆ.ப.
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

திரு.ராஜேஷ் கண்ணன்[1]
இ.கா.ப.
மாநகராட்சி 1
நகராட்சிகள் 2
வருவாய் கோட்டங்கள் 2
வட்டங்கள் 6
பேரூராட்சிகள்
ஊராட்சி ஒன்றியங்கள் 6
ஊராட்சிகள் 743
வருவாய் கிராமங்கள்
சட்டமன்றத் தொகுதிகள் 5
மக்களவைத் தொகுதிகள் 1
பரப்பளவு 2030.11 ச.கி.மீ.
மக்கள் தொகை
1,614,242 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இ.சீ.நே.
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
632 xxx
தொலைபேசிக்
குறியீடு

0416
வாகனப் பதிவு
TN-23, TN-73, TN-83
பாலின விகிதம்
ஆண்-50.06%/பெண்-49.94% /
கல்வியறிவு
79.65%
சராசரி கோடை
வெப்பநிலை

39.5 °C (103.1 °F)
சராசரி குளிர்கால
வெப்பநிலை

15.6 °C (60.1 °F)
இணையதளம் vellore
Remove ads

வரலாறு

Thumb
வேலூர் மாவட்டத்தை திருப்பத்தூர் (left) மற்றும் இராணிப்பேட்டை (right) என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது

19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாகவே இது இருந்தது. 1989 இல் அந்த மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996 இல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது. இம்மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 15 ஆகஸ்டு 2019 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் நிறுவப்படும் என 15 ஆகஸ்டு 2019 அன்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.[4][5]

Remove ads

மாவட்ட நிர்வாகம்

வேலூர் மாவட்டம் வேலூர் மற்றும் குடியாத்தம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், 5 வருவாய் வட்டங்களும் கொண்டிருக்கும்.[6][7]

வருவாய் கோட்டங்கள்

  1. வேலூர் வருவாய் கோட்டம்
  2. குடியாத்தம் வருவாய் கோட்டம்

வருவாய் வட்டங்கள்

  1. வேலூர் வட்டம்
  2. குடியாத்தம் வட்டம்
  3. கே வி குப்பம் வட்டம்
  4. காட்பாடி வட்டம்
  5. பேரணாம்பட்டு வட்டம்
  6. அணைக்கட்டு வட்டம்

உள்ளாட்சி & ஊராட்சி நிர்வாகம்

மாநகராட்சி

  1. வேலூர் மாநகராட்சி

நகராட்சிகள்

  1. குடியாத்தம்
  2. பேரணாம்பட்டு

பேரூராட்சிகள்

  1. பெண்ணாத்தூர்
  2. திருவலம்
  3. பள்ளிகொண்டா
  4. ஒடுகத்தூர்

ஊராட்சி ஒன்றியங்கள்

  1. வேலூர் ஊராட்சி ஒன்றியம்
  2. காட்பாடி ஊராட்சி ஒன்றியம்
  3. குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம்
  4. பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம்
  5. கே வி குப்பம் ஊராட்சி ஒன்றியம்
  6. அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம்
Remove ads

அரசியல்

வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டம் பிரித்த பின்னர் தற்போது இம்மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகளும், 1 வேலூர் மக்களவைத் தொகுதியும் உள்ளது.

மேலதிகத் தகவல்கள் மக்களவை உறுப்பினர்கள், 17வது மக்களவைத் தொகுதி(2019-2024) ...

மக்கள்தொகை பரம்பல்

6,075 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 3,936,331 ஆகும். அதில் ஆண்கள் 1,961,688 ஆகவும்; பெண்கள் 1,974,643 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 13.20% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 944 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 648 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 79.17% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 432,550 ஆகவும் உள்ளனர்.[8]

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 3,397,857 (86.32 %), கிறித்தவர்கள் 111,390 (2.83 %), இசுலாமியர் 414,760 (10.54 %) ஆகவும் உள்ளனர்.

Remove ads

தொழில்கள்

வேலூர் மாவட்டத்தில் முக்கிய தொழிலாக நடைபெறுவது விவசாயம் ஆகும்.

சுற்றுலா

இம்மாவட்டம் இந்திய வரலாற்றிலும், தமிழக வரலாற்றிலும் இடம் பெற்றுள்ள இடங்களை உடையன என்பதால் சுற்றுலா முக்கியத்துவம் பெறுகிறது. வேலூர்க் கோட்டை, ஸ்ரீபுரம் பொற்கோயில், முத்துமண்டபம், ஏலகிரி மலை, அமிர்திகாடு, ஜவ்வாது மலை, வைணு பாப்பு வான் இயற்பியல் மையம் போன்றவைகள் உள்ளன. ஆசியாவிலேயே புகழ் பெற்ற சி.எம்.சி. மருத்துவமனையும், உலகச் சிறப்புமிக்க எஸ்.எல்.ஆர். மற்றும் டி.சி. தொழுநோய் ஆய்வு மையமும்,கரிகிரி, ஆசியாவிலேயே மிகப் பெரிய தொலை நோக்கிமையம், காவலூரிலும் உள்ளன.

தேவார இடங்கள்

திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோயில், திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோயில், தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில் என மூன்று தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் இந்த வேலூர் மாவட்டத்தில் உள்ளன.

முத்துமண்டபம்

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னனின் கல்லறை, முத்து மண்டபத்தில் உள்ளது. கண்டியில் கமிம் மன்னர்கள் மதுரை நாயக்க வம்சம் சார்ந்த, விஜயராசசிங்கன் கி.பி 1739- 1747 ஆம் ஆண்டு வரையிலும், ராசாதி ராச சிங்கன் கி.பி. 1782 - 1798 ஆம் ஆண்டு வரையிலும், கர்த்தி ராஜசிங்கன் கி.பி. 1747-1782 ஆம் ஆண்டு வரையிலும், விக்ரம ராச சிங்கன் கி.பி.1798-1815 ஆண்டு வரையிலும் ஆட்சி நடத்தினர்.விக்ரம் ராச சிங்கன் இலங்கையில் சிறப்பாக ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னன் என வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. ஆங்கில அரசு, இம் மன்னன் மீது, நான்கு முறை போர் தொடுத்தது. இப்போர்கள் கடுமையாக இருந்தன எனக் கூறப்படுகிறது. இறுதியில் அத்தமிழ் மன்னரும், அவரின் பட்டத்தரசிகளும் கப்பல் வழியே, தமிழகம் கொண்டு வரப் பெற்றனர். அதன் பின், 1818 ஆம் ஆண்டு, வேலுார்க் கோட்டையில் உள்ள தற்போதைய பதிவு அலுவலகம் அறையில் 16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டனர். விக்ரம ராச சிங்கன் 30-1-1832 ஆம் ஆண்டு மரணமடைந்தார். பின்னர், அவரது நினைவாக இங்கு கல்லறை அமைக்கப் பட்டது. இதுபோல, 1843ல் மரணமடைந்த மகன் ராங்கராசா கல்லறையும், அவரது மனைவி ராசலட்சுமிதேவி கல்லறையும், மன்னரின் கொள்ளுபேரன் நரசிம்மவராசா கல்லறையும் அருகில் அமைக்கப் பட்டன. நான்கு, ஐந்து,ஆறாவது கல்லறைகள் விக்ரமராச சிங்கரின் மற்ற மனைவிகனுடையவை எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஏழாவது கல்லறை விக்ரம ராசசிங்கரின் பட்டத்தரசிசாவித்திரி தேவி உடையது ஆகும். இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் கல்லறை முத்து மண்டபமாக, உரூபாய் ஏழு இலட்சம் மதிப்பில் தமிழக அரசால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த முத்து மண்டபம் பரப்பளவு 2.12 ஏக்கர் ஆகும். அதன் டவன் சர்வே எண் 1786 ஆகும். இத்தகவல்கள் அனைத்தும் தமிழக அரசின் ஆவணத்தின் வழி உருவாக்கப் பட்டன.[9]

Remove ads

வைணு பாப்பு வானாய்வகம்

வைணு பாப்பு வானாய்வகம் (Vainu Bappu Observatory) தமிழ்நாட்டின் காவலூரில் அமைந்துள்ளது. இது, இந்திய வானியற்பியல் நிலையத்தின் முதன்மை வானாய்வகம் ஆகும். இந்தியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி இங்கு இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute of Astrophysics) நிறுவப்பட்டுள்ளது. இது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்துவைக்கபட்டது. இந்திய இயற்பியலாளர், இந்திய வானியல் முன்னோடியான வைணு பாப்பு அவர்களின் வானியல் பங்களிப்புக்காக இப்பெயர் சூட்டப்பட்டது. இங்குள்ள 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். இது 1986-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு விடப்பட்டது[10].

Remove ads

இதையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads