ஐஓ (சந்திரன்)

From Wikipedia, the free encyclopedia

ஐஓ (சந்திரன்)
Remove ads

ஐஓ (Io, கிரேக்கம்: Ἰώ) என்பது வியாழன் கோளின் நான்கு கலிலிய சந்திரன்களில் மிக உட்புறமாக அமைந்துள்ள சந்திரன் ஆகும். இதன் விட்டம் 3,642 கி.மீ.. இது சூரியக் குடும்பத்தில் உள்ள சந்திரன்களில் நான்காவது பெரியதாகும்.மேலும் இது 8.9319 × 1022 கிலோ நிறையை உடையது.இது வடிவில் நீள்வட்ட உரவம் கொண்டதாகவும் வியாழனை சுற்றி நீண்டசுற்றுப்பாதையில் சுற்றிவருகிறது.இது கலிலியோ செயற்கைக் கோள்கள் மத்தியில் எடை மற்றும் அளவை பொறுத்து கேனிமெட்டுடன் மற்றும் காலிஸ்டோக்கு அடுத்தும் யூரோப்பாவிற்கு முன்னதாகவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் கண்டுபிடிப்பு, கண்டுபிடித்தவர்(கள்) ...

கிரேக்கத் தொல்கதைகளில் கடவுள்களின் அரசனான சியுசு என்பவனின் மனைவியான ஈராவின் தொன்மவியல் பாத்திரமான ஐஓ (நெருப்பு,எரிமலைகளுக்கான கடவுள்) என்பதை ஒட்டி இப்பெயர் சந்திரனுக்கு சூட்டப்பட்டது.மேலும் இது வியாழனின் முதலாவது சந்திரன் என பொருட்படும் வகையில் அதன் ரோமன் எண்ணுருவுடன் சேர்த்து வியாழன் I எனவும் அழைக்கப்படுகிறது.

இந்நிலவில் 100 க்கும் மேற்பட்ட மலைகள் உள்ளன. இந்த சிகரங்களில் சில எவரெஸ்டைசிகரத்தை விட உயரமாக இருக்கின்றன.சூரியக்குடும்பத்தின் மற்ற நிலவுகளை போல் நீர் அல்லது பனியால் இது சூழப்படாமல் இயோ உருகிய இரும்பு அல்லது இரும்பு சல்பைட் உட்புறத்தை சுற்றி சிலிகேட் பாறைகளை' கொண்டுள்ளது.மேலும் இதன் மேற்பரப்பில் அதிக அளவில் சல்பர் மற்றும் சல்பர் டை ஆக்சைடு பனி படர்ந்த சமவெளி பகுதிகளை கொண்டுள்ளது.

இயோ 17 மற்றும் 18 ம் நூற்றாண்டுகளில் வானியல் வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்கை கொண்டிருந்தது.இது மற்ற கலீலிய சந்திரங்களுடன் 1610 இல் கலிலியோ கலிலியால் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த கண்டுபிடிப்பு சூரிய இயக்க கெப்லர் விதிகளின் வளர்ச்சி மற்றும் ஒளியின் வேகத்தை அளவிடுதல் போன்றவற்றிற்கு தொடக்கமாய் இருந்தது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் பூமியில் இருந்து பார்க்கும் போது ஒரு ஒளிப்புள்ளியாகவே இது தெரிந்தது.அதன் பின்னர் நவீன தொலைநோக்கிகள் மூலம் இதன் நிலப்பரப்பானது அடர் சிவப்பு துருவ மற்றும் பிரகாசமான நில பகுதிகளினை கொண்டது என அறியப்பட்டது.1979 இல், இரண்டு வாயேஜர் விண்கலங்களும் அனுப்பிய புகைப்படங்களில் இருந்து இங்கு செயல்பட்டுகொண்டிருக்கும் பல எரிமலைகள் , பெரிய மலைகள் மற்றும் வெளிப்படையான பெரும் பள்ளங்கள் கொண்டது என அறியப்பட்டது. 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் கலிலியோ விண்கலம் இதை நெருக்கமாக ஆராய்ந்த போது அதன் உள்ளமைப்பு மற்றும் மேற்பரப்பு அமைப்பு பற்றிய தகவல்கள் பெறப்பட்டன.மேலும் இந்த விண்கலம் இயோ மற்றும் வியாழனின் காந்தபுலன்களுக்கிடையே இருக்கும் தொடர்பை அறிவித்தது.மேலும் இயோவின் சுற்றுப்பாதையில் ஒரு கதிர்வீச்சு வளையத்தின் மையம் உள்ளதை கண்டறிந்தது.இதன் அடிப்படையில் இயோ நாள் ஒன்றுக்கு சுமார் 3,600 REM கதிர்வீச்சு (36 SV) பெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் 2000 ல் காசினி-ஹைகென்ஸ் மற்றும் 2007 ல் "நியு ஹரிசான்" விண்கலங்கள் மூலமும்,புவியில் அமைந்துள்ள மற்றும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் புதிய தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன.

Remove ads

ஐஓவின் எரிமலைகள்

Thumb
330 கி.மீ க்கு எரிமலைக் குழம்பை வீசும் ஐஓவின் எரிமலை

நானூறுக்கும் அதிகமான எரிமலைகளைக் கொண்டுள்ள இச்சந்திரன் சூரியக் குடும்பத்தில் நிலவியல் ரீதியாக மிகவும் சுறுசுறுப்பான பொருள் ஆகும்[5][6]. ஐஓ (Io) சந்திரன் எமது சூரியக் குடும்பத்தில் பெருமளவு எரிமலைகளைக் கொண்டுள்ளது. கலிலியோ அனுப்பிய ஐஓ சந்திரனின் மேற்பரப்புப் படம் வியாழனின் இந்த சந்திரன் பூமியை விட 100 இற்கும் அதிக மடங்கு லாவாக்களை அதன் மேற்பரப்புக்கு வெளிவிடுகிறது. நாசாவின் கலிலியோ விண்கலம் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் ஐஓ என்ற இச்சந்திரனின் ஓட்டில் உள்ள பெரும் கற்குழம்பு (மக்மா) கடலில் இருந்தே இந்த லாவாக்கள் வெளியேறுகின்றன எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த எரிமலைகளில் இருந்து வெளியேறும் லாவா அதன் மேற்பரப்பிலிருந்து சுமார் 5௦௦ கி.மீ உயரம்வரை பீய்ச்சி அடிக்கப்படுகிறது.அதோடு மட்டுமல்லாது இந்த லாவா கடல் வியாழனின் மற்ற நிலவுகளால் ஈர்க்கப்படும் போது ஈர்ப்பு உராய்வால் மேலும் அதிகமாக வெப்பமடைகிறது. இந்தக் கொப்புளிக்கும் வெப்பக் கிடங்கு கிட்டத்தட்ட 50 கி.மீ. தடிப்புள்ளதாக அறிவியலாளர்கள் சயன்ஸ் இதழில் தெரிவித்துள்ளனர்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads