கலிலியோ விண்கலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலிலியோ (Galileo) என்பது வியாழன் (ஜுபிட்டர்) கோளையும் அதன் சந்திரன்களையும் ஆராய்வதற்காக நாசாவினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலம் ஆகும். வானியலாளர் கலிலியோ கலிலியின் நினைவாக அவரின் பெயர் சூட்டப்பட்ட இவ்விண்கலம் அக்டோபர் 18, 1989 இல் அட்லாண்டிஸ் மீள்விண்ணோடத்தினால் அனுப்பப்பட்டது. இது ஏவப்பட்டு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளின் பின்னர் பூமி மற்றும் வீனஸ் கோள்களைத் தாண்டி 1995, டிசம்பர் 7 ஆம் நாள் வியாழனை அடைந்தது.[1][2][3]
முதன்முதலாக ஒரு சிறுகோளை அண்டிச் சென்ற விண்கலம் கலிலியோ ஆகும். முதலாவது சிறுகோள் சந்திரனைக் கண்டுபிடித்தது. வியாழனின் சுற்றுவட்டத்தைச் சுற்றிவந்த முதலாவது விண்கலமும் இதுவாகும். அத்துடன் வியாழனின் வளிமண்டலத்துள் சென்ற முதலாவது விண்கலமும் இதுவே.

2003, செப்டம்பர் 21 இல், 14 ஆண்டுகள் விண்வெளியில் உலாவிய கலிலியோ திட்டம் கைவிடப்பட்டது. அன்று இவ்விண்கலம் வினாடிக்கு 50 கி.மீ. வேகத்தில் வியாழனின் வளிமண்டலத்தினுள் அனுப்பட்டு வியாழனுடன் மோதவிடப்பட்டது. பூமியில் இருந்து பாக்டீரியாக்கள் எதனாலும் அங்குள்ள சிறுகோள்கள் எதுவும் பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டே கலிலியோ கைவிடப்பட்டது. கலிலியோ கண்டுபிடித்த யுரோப்பா என்ற சந்திரனின் மேற்பரப்பின் கீழே உப்பு நீர் பெருங்கடல் ஒன்று இருப்பதாக நாசா அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.
Remove ads
வெளி இணைப்புகள்
- கலிலியோ இணையத்தளம் பரணிடப்பட்டது 2008-09-20 at the வந்தவழி இயந்திரம்
- கலிலியோ திட்டம் பரணிடப்பட்டது 2009-04-12 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads