ஐகாரக் குறுக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிக்கும் நிலையை அடைதல்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம்.
ஐகாரம் தன்னைச் சுட்டித் தனித்து எழுத்தாகக் கூறும்பொழுதோ பிறவற்றைச் சுட்டி ஓரெழுத்து ஒரு மொழியாகத் தனித்து நிற்கும் பொழுதோ இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். அந்த ஐகாரம் ஒரு சொல்லில் முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையாகவும் இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையாகவும் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்
தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்
நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்
-- நன்னூல்.95
எ.கா:
ஐந்து | - ஐகாரம் மொழிக்கு முதலில் | - 1 1/2 மாத்திரை |
வளையல் | - ஐகாரம் மொழிக்கு இடையில் | - 1 மாத்திரை |
மலை | - ஐகாரம் மொழிக்கு கடையில் | - 1 மாத்திரை |
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஐகாரம் குறைந்து ஒலிப்பதைக் காண்க.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads