2012 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்

From Wikipedia, the free encyclopedia

2012 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்
Remove ads

2012 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் 2012, நவம்பர் 6, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இது அமெரிக்காவின் 57வது தேர்தலாகும். இத்தேர்தல் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமைபெற்ற வாக்காளர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவர்களே துணை குடியரசுத் தலைவரையும் 2012, திசம்பர் 17 அன்று தேர்ந்தெடுப்பர். தற்போதைய குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா, இரண்டாம் முறையாக மக்களாட்சி கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டார்.[1] குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ராம்னி அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இரு தரப்பிற்கும் மிக இறுக்கமான நிலையில் தேர்தல் முடிவுகள் இடம்பெறும் என மிக முக்கியமான ஊடகங்கள் தமது கருத்துக் கணிப்பில் தெரிவித்திருந்தன.[2] நவம்பர் 7, அதிகாலை 1:00 மணியளவில் வெற்றி பெறுவதற்குத் தேவையான மிகக் குறைந்த 270 வாக்காளர் குழுக்களை பராக் ஒபாமா பெற்றதை அடுத்து, குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ராம்னி தமது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

விரைவான உண்மைகள் அனைத்து 538 ஐக்கிய அமெரிக்க வாக்காளர் குழு வெற்றிபெற 270 வாக்குகள் தேவை, வேட்பாளர் ...

2012 குடியரசுத் தலைவர் தேர்தலுடன் ஐக்கிய அமெரிக்க செனட் தேர்தலும், பல்வேறு மாகாணத் தேர்தல்களும் நடைபெற்றன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads