பராக் ஒபாமா

2009 முதல் 2017 வரை இருந்த முதல் அமெரிக்க அதிபர் From Wikipedia, the free encyclopedia

பராக் ஒபாமா
Remove ads

பராக் உசைன் ஒபாமா (Barack Hussein Obama, பிறப்பு: ஆகத்து 4, 1961), அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார்.[1] அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

விரைவான உண்மைகள் பராக் ஒபாமாBarack Obama, துணை அதிபர் ...

கொலம்பியா பல்கலைக்கழகத்திலிருந்தும் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியிலிருந்தும் பட்டங்களைப் பெற்ற ஒபாமா அரசியல் உலகத்தில் சேர்வதற்கு முன்பு சிக்காகோவின் தெற்கு பகுதியில் சமுதாய ஒருங்கிணைப்பாளராகவும் (community organizer) பொதுச் சட்ட வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1997இல் இலினொய் மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 2004 வரை பதவியில் இருந்தார். 1992 முதல் 2004 வரை சிக்காகோ பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 2000இல் அமெரிக்கக் கீழவை தேர்தலில் தோல்வி அடைந்து 2003 ஜனவரியில் மேலவையை சேர்வதற்கு பிரச்சாரத்தை தொடங்கினார். இலினொய் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுதே, 2004ல் மக்களாட்சிக் கட்சி தேசிய சம்மேளனத்தில் இவர் ஆற்றிய சிறப்புரை தேசிய அளவில் கவனம் பெறச்செய்தது. பின்னர் நவம்பர் 2004 இல் அமெரிக்க மேலவை தேர்தலில் 70% வாக்குகளைப் பெற்று மேலவையைச் சேர்ந்தார்.

2004இல் மக்களாட்சிக் கட்சி மேலவையில் சிறுபான்மையாக இருந்த காலத்தில் ஒபாமா பதவியில் ஏறினார். நடுவண் அரசின் ஆயுதங்கள் கட்டுப்பாட்டை உறுதியாக்க சட்டத்தை படைத்தார். 2006இல் மக்களாட்சி கட்சி பெரும்பான்மை பெற்றதற்கு பிறகு தேர்தல் மோசடி, காலநிலை மாற்றம், அணுசக்தி தீவிரவாதம், முன்னாள் படையினர்களுக்கு நல்வாழ்வு போன்ற பிரச்சனைகளை தொடர்புடைய சட்டங்களை எழுதினார். பெப்ரவரி 2007இல் குடியரசுத் தலைவர் தேர்தல் போட்டியை அறிவித்த ஒபாமா ஈராக் போரை முடிவுக்கு கொணர்தல், ஆற்றல் சுதந்திரம் அடைதல், வெளி அமைப்புகளால் அரசியல்வாதிகள் மீது தாக்கம் குறைதல், அனைவருக்கும் சுகாதார திட்டம் முதலியன தனது முக்கிய நோக்கங்கள் என்று கூறுகிறார்.

Remove ads

வாழ்க்கை வரலாறும் தொழிலும்

ஹொனலுலுவில் ஹவாய் பல்கலைக்கழகத்தில் (University of Hawaii) முதலாக சந்தித்த கென்யாவைச் சேர்ந்த பராக் ஒபாமா சீனியர், கேன்சஸ் மாநிலத்தை சேர்ந்த வெள்ளை இன ஆன் டன்ஹமுக்கு பிறந்தார் பராக் ஒபாமா[2]. இரண்டு வயதில் தாயாரும் தந்தையாரும் மணமுறிவு செய்து தந்தையார் கென்யாவுக்கு திரும்பினார்[3]. பின்னர் ஆன் டன்ஹம் இந்தோனேசியாவை சேர்ந்த லோலோ சுட்டோரோவை திருமணம் செய்து பராக் ஒபாமா தனது ஆறாவது அகவையிலிருந்து பத்தாவது அகவை வரை ஜகார்த்தாவில் வசித்தார். ஐந்தாவது படிப்பதற்கு முன்பு 1971இல் ஹொனலுலுக்கு திரும்பி உயர்பள்ளியிலிருந்து பட்டம் பெறுவது வரை பாட்டி தாத்தாவுடன் வசித்தார். ஒபாமா சொந்த தந்தையாரை இன்னும் ஒரே ஒரு முறை பார்த்து 1982இல் அவர் சாலை விபத்தில் உயிர் இழந்தார். தாயார் ஆன் டன்ஹம் 1995இல் சூல்பைப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். 2008இல் நவம்பர் 3 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு ஒபாமாவின் பாட்டியும் இறந்தார். பதின்ம வயதினராக இருக்கும்பொழுது சாராயத்தையும் போதை பொருட்களையும் பயன்படுத்தினார் என்று ஒபாமா கூறியுள்ளார்.[4].

உயர்பள்ளியில் பட்டம் பெற்று லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு நகர்ந்து ஆக்சிடென்டல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளாக ஒபாமா படித்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றி 1983இல் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். நியூயார்க் நகரிலேயே இன்னும் இரண்டு ஆண்டுகளாக வசித்து வணிக பன்னாட்டு நிறுவனம், நியூயார்க் பொது ஆராய்ச்சி குழுமம் ஆகிய அமைப்புகளில் வேலை செய்தார்[5]. நான்கு ஆண்டுகளாக நியூயார்க் நகரில் வசித்து சிக்காகோவின் தெற்கு பகுதிக்கு இடமாற்றி கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு துணையாக சமுதாய ஒருங்கிணைப்பு அமைப்பின் நிர்வாகியாக பணியாற்றினார். 1985 முதல் 1988 வரை இவரின் கண்காணிப்பில் இவ்வமைப்பு வளர்ந்து சிக்காகோ மக்களுக்கு கல்லூரி தயார்செயல், தொழில் பயிற்சி, மற்றும் குத்தகையாளர் உரிமைக்காக திட்டங்களை உருவாக்கியுள்ளன[6].

1988இல் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியை சேர்ந்த ஒபாமா ஒரு ஆண்டுக்கு பிறகு ஹார்வர்ட் சட்ட விமர்சனம் (Harvard Law Review) என்ற புகழ்பெற்ற சட்ட தொடர்பான இதழின் பதிப்பாசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டு பின்பு இவ்விதழின் முதல் கருப்பின தலைவராக உறுதி செய்யப்பட்டார்[7]. இதனால் 1991இல் சட்டப் பட்டத்தை பெறுவதற்கு பிறகு அமெரிக்க இன உறவு பற்றி நூலை எழுதுவதற்கு ஒரு பதிப்பகம் இவருடன் ஒப்பந்தம் செய்தது. 1995இல் "ட்ரீம்ஸ் ஃப்ரம் மை ஃபாதர்" (Dreams From My Father) என்ற தலைப்பில் இந்த நூல் வெளிவந்தது. பின்னர் சிக்காகோக்கு திரும்பி 1992இல் சிக்காகோ சட்டக் கல்லூரியில் பணியாற்ற ஆரம்பித்தார். 1993இல் ஒரு சட்ட நிறுவனத்தையும் சேர்ந்து 1996 வரை மனித உரிமை தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞராக பணி புரிந்தார் [8]. இந்த சட்ட நிறுவனத்தில் இருக்கும் பொழுது எதிர்கால மனைவி மிசெல் ஒபாமாவை முதலாக சந்தித்தார்; மிசெல்லை 1992இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு இன்று வரை இரண்டு பெண் குழந்தைகள், மலியா (பி. 1998) மற்றும் சாஷா (பி. 2001) பிறந்தனர்.

Remove ads

இலினொய் சட்டமன்றத்தில் (1997-2004)

சிக்காகோவின் தெற்கு பகுதி உள்ளிட்ட 13ஆம் தேர்தல் மாவட்டத்தின் சார்பில் 1996இல் ஒபாமா இலினொய் மாநில மேலவைக்கு (செனட் அவை) தேர்ந்தெடுக்கப்பட்டார்[9]. பின்னர் நெறிமுறைகள் மற்றும் உடல்நலம் தொடர்பான இவர் எழுதிய சட்டங்களை இரண்டு அரசியல் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவளித்தனர்[10]. ஏழை மக்களுக்கு வரி குறைத்தல், நிதியுதவி (welfare) முறையை சீரமைப்பு செய்தல், குழந்தை உடல்நலம் தொடர்பான சட்டங்களை ஆதரவளித்தார். 2001இல் நிர்வாகச் சட்டங்கள் தொடர்பான கூட்டுச் சங்கத்தின் உறுப்பினராக இருந்து கடன் மற்றும் அடைமானம் கட்டுப்பாட்டை உறுதி ஆக்க சட்டங்களை ஆதரவளித்தார். 2003இல் காவல்துறையால் செய்த இனத்தை பொறுத்து தீர்ப்பை நிறுத்த சட்டத்தை படைத்தார்.

1998இலும் 2002இலும் மீண்டும் இலினொய் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000இல் அமெரிக்கக் கீழவைக்கு போட்டி நடத்தி முதல்கட்டத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.[11][12] ஜனவரி 2003இல் இலினொய் செனட் அவையில் மக்களாட்சிக் கட்சி பெரும்பான்மை அடைந்து ஒபாமா மருத்துவம் மற்றும் மனித நல செயற்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நவம்பர் 2004இல் அமெரிக்க மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு இலினொய் சட்டமன்றத்திலிருந்து விலகியுள்ளார்.[13]

Remove ads

2004 மேலவை போட்டி

நடு 2002வில் முதலாக அமெரிக்க மேலவைக்கு போட்டி செய்ய சிந்தித்துப் பார்த்து ஜனவரி 2003இல் மேலவைப் பிரச்சாரத்தை அறிவித்துள்ளார் ஒபாமா[14]. அன்று பதவியில் இருந்த பீட்டர் ஃபிட்ஸ்ஜெரல்ட் மீண்டும் போட்டி செய்யமாட்டார் என்று கூறி மொத்தமாக 15 fat lady with chickenஇப்பதவிக்கு போட்டி நடத்தியுள்ளனர். மார்ச் 2004இல் நடந்த மக்களாட்சிக் கட்சி முதல்கட்ட தேர்தலில் 52% வாக்குகளை பெற்றார். ஜூன் 2004இல் எதிர்ப்பார்த்த குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜாக் ரயன் போட்டியை விட்டார்[15].

பாஸ்டன், மாசசூசெட்ஸில் ஜூலை 2004இல் நடந்த மக்களாட்சிக் கட்சி தேசிய சம்மேளனத்தில் இவர் எழுதி ஆற்றிய சிறப்புரை காரணமாக முதலாக நாட்டு அளவில் கவனம் பெற்றார்[16] . இச்சிறப்புரையில் ஜார்ஜ் வாக்கர் புஷ் நிர்வாகத்தின் ஈராக் போர் தொடர்பான கொள்கைகளை கண்டனம் செய்து அமெரிக்கப் படையினர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தார். அமெரிக்க வரலாற்றை குறிப்பிட்டு அமெரிக்க அரசில் இருந்த அரசியல் கட்சி அடிப்படையில் பிரிவுகளை கண்டனம் செய்து அமெரிக்க மக்களை ஒன்றுசேர அறிவித்தார். இது தொடர்பாக ஒபாமா கூறுவன, "முற்போக்குவாத அமெரிக்காவும் பழமைவாத அமெரிக்காவும் இல்லை; ஒரே ஐக்கிய அமெரிக்க தான்" ("There is not a liberal America and a conservative America, there's the United States of America.")[17] நவம்பர் 2004 தேர்தலில் ஆலன் கீசுக்கு எதிராக போட்டியிடுத்த ஒபாமா 70% வாக்குகளை பெற்று மேலவை பதவியில் ஏறினார்.

மேலவை உறுப்பினர், 2005-2008

ஜனவரி 4, 2005இல் உறுதி செய்யப்பட்டு ஒபாமா ஐந்தாவது கருப்பின மேலவை உறுப்பினராகவும் மூன்றாவது தேர்தலை வென்ற மேலவை உறுப்பினராகவும் ஜனவரி 4, 2005 ஒபாமா உறுதி செய்யப்பட்டார்[18]. 2007இல் இவர் செய்த வாக்குகளை ஆராய்ச்சி செய்து தேசிய சஞ்சிகை (National Journal) இதழ் இவரை மேலவையில் மிக முற்போக்குவாத உறுப்பினராக அறிவித்துள்ளது. காங்கிரஸ்.ஆர்க் இணையத்தளம் இவரை 2008இல் 11ஆம் மிக வலிமையான மேலவை உறுப்பினர் என்று அறிவித்துள்ளது[19].

சட்டம் இயற்றல்

Thumb
மேலவை உறுப்பினர் டாம் கோபர்ன் உடன் ஒபாமா

2005இலும் 2006இலும் சட்டவிரோதமான குடியேற்றலுக்கு எதிராக ஒரு சட்டத்தை படைத்து இன்னொரு ஆதரவளித்தார்[20][21]. ஜான் மெக்கெய்ன் உள்ளிட்ட வேறு சில செனட்டர்களுடன் ஒபாமா படைத்த இரண்டு சட்டங்கள் நடுவண் அரசின் செலவை பொது மக்களால் அடையகூடிய மாதிரி ஆக்கியுள்ளன. ஒபாமா முக்கிய புரவலரான "கொங்கோ மக்களாட்சிக் குடியரசு உதவி, பாதுகாப்பு மற்றும் மக்களாட்சி சட்டம்" டிசம்பர் 2006இல் சட்டமானது. திறந்த அரசு[22], ஈராக் போர் முடிவு[23], குழந்தைகளுக்கு உடல்நலக் காப்பீடு போன்ற தலைப்புகள் தொடர்பான சட்டங்களுக்கு ஆதரவளித்தார்.

செயற்குழுக்கள்

Thumb
ஒபாமா ரிச்சர்ட் லுகார் உடன் ரஷ்யாவில் ஆயுத கலக்கம் மையத்தை சென்று பார்க்கிறார்

மேலவையில் வெளியுறவு, சூழ்நிலை மற்றும் பொது வேலைகள், முன்னாள் படையினர்களின் நிகழ்வுகள் தொடர்பான செயற்குழுக்களில் டிசம்பர் 2006 வரை ஒபாமா உறுப்பினராக பணியாற்றினார்[24]. ஜனவரி 2007இல் சூழ்நிலை செயற்குழுவிலிருந்து விலகி உடல்நலம், தொழில், கல்வி மற்றும் ஓய்வூதியம் செயற்குழுவையும் உள்நாட்டு பாதுகாப்பு செயற்குழுவையும் சேர்ந்தார். ஐரோப்பிய நிகழ்வுகள் தொடர்பான குறுஞ்செயற்குழுவின் தலைவர் ஆவார். வெளியுறவு செயற்குழுவில் உறுப்பினராக பணியாற்றியதன் காரணமாக அரசு சார்பில் கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, மற்றும் ஆப்பிரிக்காவுக்கு பயணம் செய்துள்ளார்[25][26][27][28].

Remove ads

2008 குடியரசுத் தலைவர் பிரச்சாரம்

2007இல் பெப்ரவரி 10ஆம் தேதி இலினொய் மாநிலத்தின் தலைநகரம் ஸ்பிரிங்ஃபீல்டில் குடியரசுத் தலைவர் போட்டியை ஒபாமா தொடங்கினார்[29][30]. பிரச்சாரம் முழுவதிலும் ஆற்றல் சுதந்திரம், ஈராக் போர் முடிவு, மற்றும் பலருக்கும் உடல்நலப் பாதுகாப்பு இவரின் மூன்று முன்னுரிமைகளாக தெரிவித்துள்ளார்[31]. முதல் 6 மாதங்களில் ஒபாமாவின் பிரச்சாரம் $58 மில்லியன் நன்கொடைகளை குவித்தது. ஜனவரி 2008இல் தொடங்கிய மக்களாட்சிக் கட்சி மாநில முதல்கட்ட தேர்தல்களில் ஒபாமா இலரி கிளின்டனுக்கு எதிராக ஒரே அளவிலான போட்டி செய்தார். முதலாக நடந்த அயோவா, நெவாடா, தென் கரொலைனா மாநிலங்களில் முதல்கட்ட போட்டிகளில் வெற்றி பெற்று நியூ ஹாம்சயர் மாநிலத்தில் இலரிக்கு ஒரே அளவில் வாக்குகளை பெற்றார்.

மார்ச் 2008இல் ஒபாமா சேர்ந்த தேவாலயத்தின் முன்னாள் அறவுரையாளராக இருந்த ஜெரமையா ரைட் அமெரிக்காவை கண்டனம் செய்ததை ஏபிசி தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பு செய்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் ஒபாமா ரைட்டை கண்டனம் செய்து 20 ஆண்டுகளாக சேர்ந்த தேவாலயத்தை விட்டார்[32].

Thumb
ஸ்பிரிங்ஃபீல்ட், இலினொய் நகரில் ஒபாமா குடும்பத்துடன் குடியரசுத் தலைவர் பிரச்சாரத்தை அறிவிப்பு செய்கிறார்

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒபாமாவும் இலரியும் ஒரே அளவிலாக மாநில முதல்கட்ட தேர்தல்களில் வாக்குகளை பெற்றனர். இதனாலும் இவர் இரண்டும் ஒரே அளவில் சம்மேளன பிரதிநிதிகளின் (convention delegates) ஈடுபாட்டை பெற்றனர். ஜூன் 3 ஆம் தேதி ஒபாமா பரிந்துரைக்கப்பட வேண்டிய அளவில் பிரதிநிதிகளின் ஈடுபாட்டை பெற்றார்[33][34]. இதனால் ஜூன் 7 ஆம் தேதி இலரி கிளின்டன் தனது பிரச்சாரத்தை நிறுத்தி ஒபாமாவிற்கு ஆதரவளித்தார். இதற்கு பிறகு ஒபாமா குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன்க்கு எதிராக போட்டி செய்ய ஆரம்பித்தார்.

ஆகஸ்ட் 23ஆம் தேதி டெலவெயர் மாநிலத்தின் சார்பில் மேலவை உறுப்பினர் ஜோ பைடனை துணைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்[35]. டென்வர், கொலராடோவில் நடந்த மக்களாட்சிக் கட்சி தேசிய சம்மேளனத்தில் ஒபாமா மக்களாட்சிக் கட்சி வேட்பாளராக உறுதி செய்யப்பட்டார்.

Remove ads

அரசியல் கருத்துகள்

Thumb
இராணுவ தளபதி டேவிட் பெட்ரேயஸ் உடன் ஒபாமா பாக்தாத்தை உலங்கு வானூர்த்தியிலிருந்து பார்க்கிறார்.

முதலாகவே புஷ் நிர்வாகத்தின் ஈராக் போர் தொடர்பான கொள்கைகளுக்கு எதிராக இருந்தார் ஒபாமா[36]. அக்டோபர் 2002இல் புஷ்சும் சட்டமன்றமும் ஈராக் போர் தொடங்க ஒப்பந்தம் செய்த நாள் ஒபாமா சிக்காகோவில் முதலாம் ஈராக் போர்-எதிர்ப்பு கூட்டத்தில் சொற்பொழிவு தெரிவித்தார்[37]. 2005இல் பாகிஸ்தானின் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில் நடந்த அல் கைடா தலைவர்களின் சந்திப்பு அமெரிக்க உளவு துறைக்கு தெரிந்து அமெரிக்க அரசு அச்சந்திப்பு மீது தாக்குதல் செய்யவில்லை என்பது மிகப்பெரிய தவறு என்று ஒபாமா கூறி இவர் குடியரசுத் தலைவராக இருந்தால் பாகிஸ்தான் ஆதரவு இல்லாத இருந்தாலும் அந்த மாதிரி வாய்ப்பை தவற விடமாட்டார் என்று தெரிவித்துள்ளார்[38]. நவம்பர் 2006இல் ஈராக்கிலிருந்து படையினர்களை பின்வாங்கி சிரியா மற்றும் ஈரான் நாடுகளுடன் தந்திரமாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளார்[39]. ஈரானை அணு ஆயுதங்கள் படைப்பை நிறுத்தவேண்டும் என்றால் அந்நாட்டுடன் முதலாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கருதுகிறார்[40].

"ஒரு பால் ஈர்ப்புடையோரின் வாழ்க்கை முறையையும் திருமணத்தையும் சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அங்கீகரிக்கப்படவேண்டும். அவர்களுடைய உரிமைகள் காக்கப்படவேண்டும். அவர்களும் மனிதர்களே!’"[41]

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா

குடியரசுத் தலைவராக இருந்தால் பில்லியன் கணக்கில் அரசு செலவும் ஆயுதப் படைப்பையும் குறைப்பார் என்று தெரிவித்துள்ளார் ஒபாமா. உலக முழுவதிலும் அணு ஆயுதங்கள் படைப்பை தடை செய்ய ஆதரவளிக்கிறார்[42]. வெளிநாட்டுக் கொள்கைகள் மூலமாக உலகத்தை வழிநடத்தவேண்டும் என்பது ஒபாமாவின் கருத்து[43]. தார்ஃபூர் போர் காரணமாக வணிக நிறுவனங்களை சூடான் நாட்டுடன் வியாபாரம் செய்ய கூடாது என்று அறிவுறுத்துகிறார்[44].

பொருளாதாரக் கொள்கைகளை பொறுத்து ஃபிராங்கிளின் ரோசவெல்ட் 1930களில் தொடங்கிய நியூ டீல் பொது நலம் கொள்கைகளை ஆதரவளிக்கிறார்[45]. சூறாவளி கதிரீனா பற்றி பேசும் பொழுது இரண்டு அரசியல் கட்சிகளும் ஏழை மக்களுக்கு உதவி செய்து அமெரிக்க சமூகத்தில் பொருளாதாரப் பிரிதலை சீர்ப்படுத்தவேண்டும் என்று அறிவித்துள்ளார்[46]. அனைவருக்கும் சுகாதார திட்டத்தை குடியரசுத் தலைவர் பிரச்சாரத்தை தொடங்கியதற்கு பிறகு ஆதரவளித்தார். ஒபாமாவின் பொருளாதாரத் திட்டம் அமெரிக்க வரி சட்டங்களை மாற்றி இரண்டரை லட்சத்துக்கு மேலும் சம்பாதிக்கிற மக்களுக்கு புஷ் கொடுத்த வரி குறைதலை முன்நிலை ஆக்கி 50,000 டாலர்களுக்கு குறைந்த அளவில் சம்பாதிக்கிற முதுமை மக்களுக்கு பல வரிகளும் நீக்கும்[47]. இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் மேல் சார்ந்திருக்க வேண்டாம் என்று வேறு ஆற்றல் வகைகளை கண்டுபிடிக்க முதலிடுக்க ஆதரவளிக்கிறார்[48].

Remove ads

குடும்பமும் வாழ்க்கையும்

1989இல் ஒபாமா வேலை பார்த்துக்கொண்டிருந்த சட்ட நிறுவனத்தில் முதலாக தனது மனைவி மிசெல் ராபின்சனை முதலாக சந்தித்து அக்டோபெர் 3, 1992 திருமணம் செய்தனர். அவர்களின் முதல் பெண் குழந்தை மலியா 1998இல் பிறந்தார்[49]. இரண்டாவது பெண் குழந்தை சாஷா 2001இல் பிறந்தார்[50]. ஒபாமாவின் விரிவுபட்ட குடும்பத்தில் கென்யர்கள், இந்தோனேசியர்கள், வெள்ளை இன அமெரிக்கர்கள், மற்றும் சீனர்கள் உள்ளனர்[51]. தனது தாயாரின் முன்னோர்கள் அமெரிக்க பழங்குடி மக்கள் என்று இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

Thumb
ஜிபூட்டியில் அமெரிக்கப் படையினருடன் ஒபாமா கூடைப்பந்தாட்டம் விளையாடுகிறார்[52]

ஒபாமாவின் நூல்களை விற்று சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி சிக்காகோவின் ஹைட் பார்க் பகுதியிலிருந்து கென்வுட் பகுதியில் ஒரு $1.6 மில்லியன் வீட்டுக்கு நகர்ந்தனர். இந்த வீட்டை வாங்கும்பொழுது அந்த நிலத்தின் ஒரு பகுதியை டோனி ரெஸ்கோ என்பவர் இடம் இருந்து வாங்குதல் பின்பு ஒரு சிறிய சர்ச்சையாக முளைத்தது, ஏனென்றால் இதற்கு பின்பு ரெஸ்கோ அரசியல் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு செய்யப்பட்டார்[53]. 2007இல் ஒபாமாவின் வருமானம் $4.2 மில்லியன் மொத்தமானது; இதில் பெரும்பான்மை நூல் விற்பனையிலிருந்து வந்தது[54].

உயர்பள்ளியில் கூடைப்பந்தாட்டம் விளையாடியுள்ள ஒபாமா இன்று வரையும் ஓய்வுழையாக விளையாடுகிறார்[55]. தனது குடியரசுத் தலைவர் பிரச்சாரத்துக்கு முன்பு சிகரெட்டு பிடிப்பதை நிறுத்தியுள்ளார்[56] .

ஒபாமா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். தனது தாயார் கிறிஸ்தவராக வளந்தார், தந்தையார் முஸ்லிமாக வளந்தார், ஆனால் திருமணம் செய்வதற்கு முன்பே நாத்திகர்களாக நம்பிக்கை மாற்றியுள்ளனர். இருபது வயதுகளில் இருக்கும் பொழுது ஆபிரிக்க அமெரிக்க தேவாலயங்களுடன் சமூக சேவை செய்து ஆபிரிக்க அமெரிக்க கிறிஸ்தவ மரபின் பெறுமதியை கண்டுபிடித்தார் என்று கூறுகிறார்[57][58]

Remove ads

பொது மக்களின் எண்ணம்

Thumb
ஜூலை 24, 2008 பெர்லின் நகரில் சொற்பொழிவு கொடுக்கிற ஒபாமா

கென்யாவை சேர்ந்த தந்தையார், வெள்ளை இன தாய்க்கு பிறந்து, ஹொனொலுலுவிலும் ஜக்கார்த்தாவிலும் வளந்து, ஐவி லீக் பல்கலைக்கழகத்தில் படித்த ஒபாமாவுடைய வாழ்க்கை வரலாற்றுக்கும் 1960களில் சமூக உரிமை இயக்கத்தில் கவனம் பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்க அரசியல்வாதிகளுடைய வாழ்க்கை வரலாற்றுகளுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன[59]. இதனால் ஒபாமா முதலாக புகழுக்கு வந்த பொழுது சில கருப்பின எழுத்தாளர்கள் இவருக்கு உண்மையாக கருப்பின மக்களின் அனுபவத்தை தெரியுமா என்று யோசனையை கூறியுள்ளனர்[60]. இதுக்கு பதிலாக, வெள்ளை மக்கள் கருப்பின அரசியல்வாதியை ஆதரவளித்தால் ஏதோ ஒன்று தவறானது என்று இன்னும் நினைக்கிறோம் என்று ஒபாமா கூறினார். ஒபாமா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர், ஆனால் ஜூலை 2008இல் நியூஸ்வீக் சஞ்சிகை நடத்திய வாக்களிப்பின் படி அமெரிக்க மக்களில் 26% ஒபாமா ஒரு முஸ்லிம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர்[61].

பொது மக்கள் எண்ணத்தில் வாஷிங்டனில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு வேறுபடியாக, இளமையான அரசியல்வாதி ஒபாமா. இதனால் அமெரிக்க இளையோர் இடம் இருந்து ஒபாமாவுக்கு அதிகமான ஆதரவு வருகிறது[62]. ஆனால் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் ஒபாமாவின் இளமை காரணமாக அனுபவம் இல்லாதவர் என்று அறிவிக்கின்றனர். மஹ்மூத் அஹ்மதிநெஜாத் போன்ற அமெரிக்காவுக்கு எதிரான உலகத் தலைவர்களுடன் நிபந்தனை இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவித்தது காரணமாக ஒபாமாவுக்கு வெளிநாடு உறவில் போதுமான அனுபவம் இல்லை என்று குடியரசுக் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்[63].

செப்டம்பர் 2008இல் 22 நாடுகளில் பிபிசி நடத்திய வாக்களிப்பில் அந்த நாடுகளின் மக்கள் ஒபாமாவை ஜான் மெக்கெய்ன் விட ஆதரவளிக்கின்றனர் என்று தெரியவந்தது[64]. ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கும் வெளிநாடுகளுக்கும் உறவு மேம்படுத்தப்பட்டு வரும் என்று வாக்களித்த மக்களில் பெரும்பான்மை கருதுகின்றனர். இந்தியாவில் மெக்கெய்ன் விட ஒபாமாவை 9% மக்கள் ஆதரவளிக்கின்றனர்.

Remove ads

நற்குணம்

10.12.2013 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முன்னாள் தென்னாப்பிரிக்காவின் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவு அஞ்சலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் தாமாக முன்வந்து கைகுலுக்கினார்.

1961ம் ஆண்டுமுதல் தங்களின் ராஜாங்க உறவுகளை முறித்துக்கொண்ட கியூபாவும், அமெரிக்காவும் இதுவரை பரம எதிரிகளாகவே இருந்துவருகின்றன.[65]

படைப்புகள்

  • ஒபாமா, பராக் (1995). Dreams from My Father: A Story of Race and Inheritance. திரீ ரிவர்ஸ் பதிப்பு. ISBN 0307383415.
  • ஒபாமா, பராக் (17 அக்டோபர் 2006). The Audacity of Hope: Thoughts on Reclaiming the American Dream. க்ரௌன் பதிப்புக் குழுமம் / திரீ ரிவர்ஸ் பதிப்பு. ISBN 0307237699.
  • ஒபாமா, பராக் (27 மார்ச் 2007). Barack Obama in His Own Words. பப்லிக் அஃபேர்ஸ். ISBN 0786720573.
  • நேஷனல் அர்பன் லீக் (17 ஏப்ரல் 2007). The State of Black America 2007: Portrait of the Black Male (பராக் ஒபாமாவால் முன்னுரை ed.). பெக்கம் பதிப்புக் குழுமம். ISBN 0931761859.
  • ஒபாமா, பராக் (ஜூலை-ஆகஸ்ட் 2007). "Renewing American Leadership". ஃபோரின் அஃபேர்ஸ் 86 (4). http://www.foreignaffairs.org/20070701faessay86401/barack-obama/renewing-american-leadership.html. பார்த்த நாள்: 2008-01-14.
  • ஒபாமா, பராக் (1 மார்ச் 2008). Barack Obama: What He Believes In - From His Own Works. ஆர்க் மேனர். ISBN 1604501170. {{cite book}}: Text "coauthors:மேலவை" ignored (help)
  • ஒபாமா, பராக் (13 ஜூன் 2008). Barack Obama vs. John McCain - Side by Side Senate Voting Record for Easy Comparison. ஆர்க் மேனர். ISBN 1604502495. {{cite book}}: Check date values in: |date= (help); Unknown parameter |coauthors= ignored (help)
  • Change We Can Believe In: Barack Obama's Plan to Renew America's Promise (பராக் ஒபாமாவால் முன்னுரை ed.). திரீ ரிவர்ஸ் பதிப்பு. 9 செப்டம்பர் 2008. ISBN 0307460452. {{cite book}}: Check date values in: |date= (help)
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads