ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மக்கள் அவை (House of Commons) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் கீழவை ஆகும். மற்ற பிரபுக்கள் அவை போலவே இதுவும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் கூடுகிறது. காமன்சு அவை அல்லது அவுஸ் ஆப் காமன்சு எனப்படும் இந்த மக்களவை பொதுமக்களால் மக்களாட்சித் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 650 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவைத் தொகுதிகளின் சார்பாளர்களாக தேர்தல்களில் முதலில் வந்தவர் வெற்றி என்ற முறைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை பதவி வகிக்கின்றனர
1911இல் இயற்றப்பட்ட நாடாளுமன்ற சட்டத்தின்படி பிரபுக்கள் அவையினால் சட்டத்தை நிராகரிக்கும் அதிகாரம் நீக்கப்பட்டது; மேலவையால் சட்டமியற்றலை தாமதப்படுத்தவே இயலும். பிரதமரின் கீழியங்கும் மேன்மைதாங்கிய அரசியின் அரசு மக்களவைக்கே முதன்மையாக பொறுப்பானது. மக்களவையின் பெரும்பாலோனோரின் ஆதரவு உள்ளவரையிலேயே நாட்டின் பிரதமர் ஆட்சி செய்ய இயலும்.
Remove ads
வெளி இணைப்புகள்
- மக்களவையின் அலுவல்முறை வலைத்தளம்
- யாடாளுமன்ற ஆவணக் காப்பகம்
- உங்களது எம்பி பற்றி பரணிடப்பட்டது 2014-11-12 at the வந்தவழி இயந்திரம்
- யாடாளுமன்ற நேரலைத் தொலைக்காட்சி (காண சில்வர்லைட் தேவை)
- மக்களவை கூடத்தில் சுற்றுலா போட்காஸ்ட், ஒளிப்படங்களுடன் பரணிடப்பட்டது 2020-01-28 at the வந்தவழி இயந்திரம்
- மக்களவை டெமாக்கிரசி லைவ் காட்சி பிபிசி செய்திகளில்
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads