கன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கன்சர்வேடிவ் மற்றும் யூனியனிசக் கட்சி (Conservative and Unionist Party)[4] (பொதுவாக கன்சர்வேடிவ் கட்சி), பழமைவாதக் கட்சி என்று பொருள்படும் ஐக்கிய இராச்சியத்தின் ஓர் அரசியல் கட்சியாகும். இங்கிலாந்து அரசியலில் நடு-வலது பார்வை உடைய இக்கட்சி தற்போதைய வடிவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் துவக்கப்பட்டது.
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
1678 ஆம் ஆண்டு உருவான டோரி கட்சியின் மறுபிறப்பாக விளங்கிய இக்கட்சி இன்று சில நேரங்களில் டோரி கட்சி என்றே வழங்கப்படுகிறது. இக்கட்சி அரசியல்வாதிகளும் டோரிகள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களது பெயர் விளக்குவதைப்போலவே இக்கட்சியினர் புதுமைகளைப் புகுத்துவதை எதிர்க்கின்றனர். அரசுக் கட்டுப்பாடுகள் குறைந்து தனியார்த்துறை தழைப்பதே இவர்களது கொள்கையாகும்.
இருபதாம் நூற்றாண்டின் மூன்றில் இருபகுதி இவர்கள் ஆட்சியில் இருந்துள்ளனர். 2010ஆம் ஆண்டு நடந்துள்ள பொதுத்தேர்தலில் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மக்களவை (காமன்சு) யில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இக்கட்சி லிபரல் டெமக்கிராட் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. தற்போதைய கட்சித் தலைவராக போரிஸ் ஜான்சன் பதவி வகிக்கிறார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads