ஐக்கிய நாடுகள் பட்டயம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஐக்கிய நாடுகள் பட்டயம் (Charter of the United Nations) 50 நாடுகள் கையொப்பம் இட்டு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை உருவாக்கிய ஒப்பந்த ஆவணமாகும்.[1] சூன் 26, 1945 அன்று ஐக்கிய அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள சான்பிரான்சிஸ்கோ போர் நினைவகம் மற்றும் நிகழ்த்து கலையரங்கத்தில் இந்த ஆவணத்தில் முதன்மை உறுப்பினர் நாடுகளாக விளங்கிய 51 நாடுகளில் 50 நாடுகள் கையொப்பமிட்டன. விடுபட்ட நாடான போலந்தும் பின்னர் கையொப்பமிட்டது. இந்த பட்டயம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர்களான சீனா, பிரான்சு, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா தவிர பிற பெரும்பாலான கையொப்பமிட்ட நாடுகள் பின்னேற்பு வழங்கியபின் அதே ஆண்டில் அக்டோபர் 24 முதல் செயலுக்கு வந்தது. இன்று 192 நாடுகள் ஐக்கிய நாடுகளின் உறுப்பினராக உள்ளன.

விரைவான உண்மைகள் கையெழுத்திட்டது, இடம் ...

இந்தப் பட்டயம் ஓர் அரசியலமைப்பு ஆவணமாகும்; அனைத்து ஒப்பமிட்ட உறுப்பினர்களும் இதன்படி நடக்கக் கடமை பெற்றவர்கள். மேலும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்குரிய கடமைகள் வேறெந்த உடன்பாட்டின்படி எழுந்த கடமைகளுக்கும் மேலானதாக பட்டயம் வரையறுக்கிறது.[1] உலகின் பெரும்பாலான நாடுகள் இந்தப் பட்டயத்திற்கு பின்னேற்பு வழங்கியநிலையில் முக்கியமான விலக்காக திருப்பீடம் (the Holy See) விளங்குகிறது; தான் நிரந்தர நோக்காளராகவே இருக்க தேர்ந்தெடுத்துள்ளது.[2]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads