ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பல் (எஸ்59)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பல் (எஸ்59) (INS Sindhuratna (S59)) சிந்துகோஷ் (Sindhughosh)[1] வகையைச்சார்ந்த நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இக்கப்பல் தற்சமயம் இந்தியாவின் கடல் பகுதியான மும்பை துறைமுகப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இக் கப்பல் மும்பையிலிருந்து 50 கி.மீ.,[2] தூரத்தில் சோதனைக்குப்பின் நிலைநிறுத்தப்பட்டது.[3] இக்கப்பல் ரஷ்யா நாட்டின் தயாரிப்பாகும்.[4]
Remove ads
தீ விபத்து
2014ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 26ம் தேதி, மும்பை கடல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இக்கப்பலில் சிறு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 முதல் 5 மாலுமிகள் காயம் அடைந்தார்கள். அவர்கள் விமானம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.[5][6][7]
இந்த விபத்தில் கடற்படை அதிகார்கள் இருவர் மரணம் அடைந்தார்கள். அவர்கள், இக்கப்பலில் மின் அதிகாரியாக இருந்த தளபதி கபிஷ் முவால் (Lt Commander Kapish Muwal), இக்கப்பலின் கண்காணிப்பு தளபதியாக இருந்த மனோ ரஞ்சன் குமார் (Lt Commander Kumar) என்பவரும் மரணமடைந்தார்கள்.[4] இக்கப்பலின் தலைமை தளபதி டி.கே.ஜோஷி (Devendra Kumar Joshi) பதவியிலிடுந்து விலகியுள்ளார்.[8]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads