ஒசகோட்டே
கர்நாடக நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒசகோட்டே அல்லது ஹொசகோட்டே (Hoskote) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு ஊரக மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இங்கு 23 வார்டுகள் கொண்ட ஒசகோட்டே நகராட்சி உள்ளது. ஒசகோட்டே நகரம், பெங்களூருக்கு வடகிழக்கே 27 கி.மீ. தொலைவில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
Remove ads
வரலாறு
மராத்தியப் பேரரசின் படைகளுக்கும், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி படைகளுக்கும், முதலாம் ஆங்கிலேய மைசூர் போரின் தொடர்ச்சியாக ஒசகோட்டே நகரத்தில் 22-23 ஆகஸ்டு 1768 அன்று போர் நடைபெற்றது.
மக்கள்தொகை பரம்பல்
23 வார்டுகள் கொண்ட ஒசகோட்டே நகராட்சியின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 56,980 ஆகும். அதில் ஆண்கள் 29,261 ஆகவும்; பெண்கள் 27,719 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 956 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 86.22%% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6825 ஆகவுள்ளனர்.[1] ஹோஸ்கோட் மக்கள்தொகையில் இந்துக்கள் 74.86% ஆகவும், இசுலாமியர்கள் 22.24% ஆகவும், கிறித்தவர்கள் 2.30% ஆகவும், மற்றவர்கள் 0.60% ஆகவும் உள்ளனர். இங்கு கன்னடம் மற்றும் தமிழ் மொழிகள் பேசப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads