ஒடிசா நாள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒடிசா நாள் (ஒடியா மொழி:ଓଡ଼ିଶା ଦିବସ) என்பது ஒடிசா மாநிலத்தின் உருவாக்கத்தை நினைவுகூரும் நாள் ஆகும். இதை உத்கல திபசா என்றும் ஒடியா திபசா என்றும் அழைப்பர். இது ஆண்டுதோறும் ஏப்ரல் முதலாம் நாளில் கொண்டாடப்படுகிறது.[1] [2]
1568ஆம் ஆண்டு முகுந்த தேவ் மன்னரின் வீழ்ச்சிக்கு பிறகு பல பகுதிகளாக சிதறிக் கிடந்த ஒடிசா மாநிலத்தை மொழியை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைக்க வேண்டும் என பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக அன்றைய ஆங்கிலேய அரசு 1936ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று ஒடிசாவை தனி மாநிலமாக அறிவித்தது.
புதிதாக உருவாக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் கட்டக், புரி, பாலேஸ்வர், சம்பல்பூர், கோராபுட், கஞ்சாம் ஆகிய மாவட்டங்கள் இருந்தன. ஜான் ஆஸ்டின் ஹப்பக் என்பவர் ஒடிசாவின் முதல் ஆளுநர் ஆனார்.[3][4] இன்றையா ஒடிசாவில் 30 மாவட்டங்கள் உள்ளன.
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads