சம்பல்பூர் மாவட்டம்
ஒடிசாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சம்பல்பூர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சம்பல்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான, இம்மாவாட்டத்தில் உள்ள மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம், குறு நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். இம்மாவட்டத்தில் கலாசுனி வனவிலங்கு சரணாலயம் உள்ளது.
புவியியல்
இந்த மாவட்டம் மகாநதி நதிப் படுகையில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 6,702 கி.மீ. 2 (2,588 சதுர மைல்) ஆகும், இதில் மாவட்டத்தின் கிட்டத்தட்ட 60% அடர்ந்த காடுகளில் உள்ளது. இந்த மாவட்டம் கிழக்கில் தியோகர் மாவட்டமும், மேற்கில் பர்கர் மற்றும் ஜார்சுகுடா மாவட்டங்களும், வடக்கே சுந்தர்கர் மாவட்டமும் மற்றும் தெற்கில் சுபர்நாபூர் மற்றும் அங்குல் மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
சத்தீஸ்கருக்கும் ஒடிசாவிற்கும் இடையில் நகரம் சம்பல்பூர் நகரம் காணப்படுகிறது. இந்த நகரம் வைர வர்த்தக மையமாக அறியப்பட்டாலும் தற்போது இது முக்கியமாக அதன் ஆடைகளுக்காக, குறிப்பாக சம்பல்பூரி சேலைக்கு பெயர் பெற்றது.
Remove ads
வரலாறு
தொலமி (2 ஆம் நூற்றாண்டு) தனது புத்தகத்தில் மனாடா (மகாநதி நதி) மீது சம்பலகா என்று சம்பல்பூர் நகரை குறிப்பிடப்பட்டுள்ளார். ஒடிசாவின் மேற்கு பிராந்தியத்தின் கவர்ச்சியான இந்நகரம் பண்டைய நாகரிகத்தின் தொட்டிலாக இருந்தது. இது இந்தியாவின் கலாச்சார வரலாற்றில் ஒரு முக்கியமான அடையாளமாகும்.
சம்பல்பூர் மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் முன்னாள் சுதேச மாநிலமாகும். 1849 ஆம் ஆண்டில் இதன் ஆட்சியாளர் ஒரு நேரடி ஆண் வாரிசு இல்லாமல் இறந்தபோது, ஆங்கிலேயர்கள் தோல்வியுற்ற கோட்பாட்டின் கீழ் அரசைக் கைப்பற்றினர். இது பிரித்தானிய வங்காளத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் 1862 இல் மத்திய மாகாணங்களுக்கு மாற்றப்பட்டது. 1905 ஆம் ஆண்டில் இந்த மாவட்டம் மீண்டும் வங்காளத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் புல்ஜார் மற்றும் சந்தர்பூர்-பதம்பூர் ஆகிய துணைப்பிரிவுகள் மத்திய மாகாணங்களுடன் இருந்தன. வங்காளத்தின் ஒடிசா பிரிவு 1912 ஆம் ஆண்டில் பீகார் மற்றும் ஒரிசாவின் புதிய மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1936 இல் ஒடிசாவின் தனி மாகாணமாக மாறியது. 1947 இல் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, ஒடிசா ஒரு இந்திய மாநிலமாக மாறியது.
முந்தைய சம்பல்பூர் மாவட்டத்தில் நான்கு மாவட்டங்கள் இணைந்தருந்தன. அதாவது, நவீன சம்பல்பூர் மாவட்டம், பார்கர் மாவட்டம், ஜார்சுகுட மாவட்டம் மற்றும் தியோகர் மாவட்டம் என்பனவாகும். பின்னர் அவை நான்கு தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. 1993 ல் பர்கர் பிரிக்கப்பட்டது. மற்றும் ஜார்சுகுடா மற்றும் தியோகர் மாவட்டங்கள் 1994 இல் பிரிக்கப்பட்டன.
Remove ads
பொருளாதாரம்
சம்பல்பூர் மாவட்டத்தின் பொருளாதாரம் அடிப்படையில் விவசாயத்தையும், இரண்டாவதாக காடுகளையும் சார்ந்துள்ளது. வருவாய் உள்நாட்டு உற்பத்தி மற்றும் வாழ்வாதாரத்திற்காக மக்களைச் சார்ந்திருத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் காடுகள் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சம்பல்பூர் வனப்பிரிவின் ஒதுக்கப்பட்ட காடுகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் இந்த காடுகளை பெரிதும் நம்பியுள்ளனர். கடந்த காலத்தில் சம்பல்பூர் வைர வர்த்தகத்தின் சிறந்த மையமாக இருந்து வருகிறது. கெண்டு இலை (டயோஸ்பைரோஸ் மெலனாக்ஸிலோன்) சம்பல்பூரிலும் தயாரிக்கப்படுகிறது. கெண்டு இலை சம்பல்பூரின் மிக முக்கியமான மரம் அல்லாத வனப் பொருட்களில் ஒன்றாகும். இது ஒடிசாவின் பச்சை தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. சமீபத்தில் மாவட்டத்தில் தொழில்மயமாக்கல்தொடங்கப்பட்டுள்ளது மற்றும் சக்தி, அலுமினியம் மற்றும் எஃகு ஆகியவற்றின் பிரதான தொழில்கள் நிறுவப்பட்டுள்ளன. உலகளவில் புகழ்பெற்ற ஜவுளி எல்லைக்குட்பட்ட வடிவங்கள் மற்றும் உள்நாட்டில் பாந்தா என அழைக்கப்படும் துணிகளுக்கு இந்த இடம் பிரபலமானது. சம்பல்பூர் கை தறி ஜவுளி வேலைகளுக்கு பிரபலமானது. சம்பல்பூரி டெக்ஸ்டைல் என்று பிரபலமாக அறியப்படுகிறது. அதன் தனித்துவமான முறை, வடிவமைப்பு மற்றும் அமைப்பு ஆகியவற்றால் இது சர்வதேச புகழைப் பெற்றுள்ளது. ஜவுளி தவிர, சமபல்பூரில் ஒரு பழங்குடி பாரம்பரியமும் அற்புதமான வனப்பகுதிகளும் உள்ளன. சம்பல்பூர் நகரத்தை தலைமயிடமாகக் கொண்ட மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம், பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு பணி வழங்குகிறது.
2006 ஆம் ஆண்டில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் நாட்டின் 250 மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக (மொத்தம் 640 இல் ) சம்பல்பூரை அறிவித்தது. தற்போது ஒடிசாவில் உள்ள 19 மாவட்டங்களில் இது பின்தங்கிய பிராந்திய மானிய நிதி திட்டத்திலிருந்து (பிஆர்ஜிஎஃப்) நிதியை பெறுகிறது.[2]
புள்ளி விபரங்கள்
2011 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி சம்பல்பூர் மாவட்டத்தின் மக்கள் தொகை1,041,099 ஆகும்.[3] இந்த சனத்தொகை சைப்ரஸ் தேசத்திற்கு[4] அல்லது அமெரிக்க மாநிலமான ரோட் தீவுக்கு சமமானதாகும்.[5] இது இந்தியாவில் 640 மாவட்டங்களில் 433 வது இடத்தைப் பெறுகிறது. மாவட்டத்தில் சதுர கிலோமீட்டருக்கு (410 / சதுர மைல்) 158 மக்கள் அடர்த்தி உள்ளது.[3] 2001–2011 காலப்பகுதியில் சனத்தொகை வளர்ச்சி விகிதம் 11.63% ஆக இருந்தது. சம்பல்பூரில் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 973 பெண்கள் என்ற பாலின விகிதம் காணப்படுகிறது. மக்களின் கல்வியறிவு விகிதம்76.91% ஆகும்.[3]
Remove ads
உட்பிரிவுகள்
இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு குச்சிண்டா, ரேங்காலி, சம்பல்பூர், ரேடாகோல், ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]
இந்த மாவட்டம் சம்பல்பூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]
போக்குவரத்து
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads