ஒட்டகப் பால்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒட்டகப் பால் பாலைவன நாடோடி பழங்குடியினரின் பிரதான உணவுகளில் ஒன்று. ஒரு நாடோடி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஒட்டக பால் மட்டுமே குடித்து வாழ முடியும் [1][2][3][4] ஒட்டக பாலில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், மற்றும் இம்யுனோக்ளோபுலின்ஸ் அதிகமாக உள்ளன.[5] மேலும் பசுவின் பாலுடன் ஒப்பிடும்போது, கொழுப்பு மற்றும் லாக்டோஸ் குறைந்த அளவும் பொட்டாசியம், இரும்பு, மற்றும் வைட்டமின் சி அதிகமாகவும் உள்ளன.[6]

ஒட்டகப்பால் பண்ணைகள் உலகின் வறட்சியான பகுதிகளில் மாட்டுப் பண்ணைகளுக்கு மாற்றாக உள்ளன. வறண்ட பகுதிகளில் மாடுகளுக்குத் தேவையான நீரையும் வெப்பநிலையைக் குறைப்பதற்கான மின்சாரச் செலவுகளும் கூடுதலாக ஆகும் என்பதால் ஒட்டகப் பால் பண்ணைகள் இப்பகுதிகளில் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், சோமாலியா முதலான நாடுகளில் ஒட்டகப்பால் பேரங்காடிகளில் கிடைக்கிறது. பல நாடுகளில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கும் ஒட்டகப்பால் கொடுக்கப்படுகின்றது.
Remove ads
உற்பத்தித் திறன்
பாக்கித்தானிய, ஆப்கானிய ஒட்டகங்கள் நாளொன்றுக்கு 30 இலிட்டர் வரை பால் கறக்கும். நாளொன்றுக்கு இரட்டைத்திமில் ஒட்டகங்கள் 5 லிட்டரும் அரேபிய ஒட்டகங்கள் சராசரியாக 20 இலிட்டர்களும் கறக்கும்.[1]
இந்தியா
இந்தியாவின் வறண்ட பகுதிகளில் இராய்க்கா முதலான இனங்கள் ஒட்டகப்பாலைப் பயன்படுத்துகின்றனர். மேலும் ஆயுர்வேத மருத்துவ முறையிலும் ஒட்டகப்பால் பற்றிய குறிப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இராசத்தானின் பிகானேரில் உள்ள தேசிய ஒட்டக ஆராய்ச்சி நிலையத்தில் ஒட்டகப்பாலின் மருத்துவப் பயன்கள் உள்ள பல்வேறு பயன்கள் பற்றிய ஆய்வுகள் நடைபெறுகின்றன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads