ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 27 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அம்பகாமம், இந்துபுரம், கற்சிலைமடு, கனகரத்தினபுரம், கணேசபுரம், கருவேலங்கண்டல், கதலியார்சமலங்குளம், கூழாமுறிப்பு, மணவாளன்பட்டமுறிப்பு, மாங்குளம், முத்தையன்கட்டுக்குளம், முத்துவிநாயகபுரம், ஒட்டுசுட்டான், ஒலுமடு, ஒதியமலை, பழம்பாசி, பண்டாரவன்னி, பனிக்கன்குளம், பேராறு, பெரிய இத்திமடு, பெரியகுளம், புளியங்குளம், தச்சடம்பன், தட்டயமலை, தண்டுவான், திருமுறிகண்டி, வித்தியாபுரம் ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவு என்பனவும்; மேற்கில் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு என்பனவும்; தெற்கில் வவுனியா மாவட்டமும், கிழக்கில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவும் எல்லைகளாக உள்ளன.
இப்பிரிவு --- சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].
Remove ads
குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads