ஒதகன்தெங்கர்
மங்கோலியாவின் காங்காய் மலைகளில் உள்ள மிக உயரமான சிகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஓதகன்தெங்கர் (மொங்கோலியம்: Отгонтэнгэр, பொருள். "இளைய வானம்") என்பது மங்கோலியாவில் உள்ள கான்காய் மலைகளின் மிக உயரமான சிகரமாகும். இதன் உயரம் 4,008 மீ ஆகும். இது சவ்கான் மாகாணத்தில் அமைந்துள்ளது. கான்காய் மலைகளில் உள்ள மலைகளில் இதன் உச்சி மட்டுமே நிரந்தர பனிப்பாறையுடன் காணப்படுகிறது. இதன் தென் முகம் தான் மங்கோலியாவிலேயே மிகவும் விரிவான கிரானைட் சுவர் ஆகும்.
பௌத்த மதத்தை அறிமுகப்படுத்தியதிலிருந்து, மங்கோலியர்களின் புனித மலைகளில் பல கோபமான தெய்வங்கள் வசிப்பதாக மரபுவழி மங்கோலிய நம்பிக்கைகள் உள்ளன. வச்ரபானி குறிப்பாக ஓதகன் தெங்கருடன் தொடர்புடையவராகக் கருதப்படுகிறார்.
Remove ads
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads