சவ்கான் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சவ்கான் மாகாணம் (Zavkhan) (மொங்கோலிய மொழி: Завхан, Zawhan) மங்கோலிய நாட்டின் 21 மாகாணங்களில் ஒன்றாகும். நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இம்மாகணம் உலான் பத்தூர் நகரிலிருந்து 1,104 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சவ்கான் மாகாணத்தின் தலைநகரம் உலியாசுடை நகரம் ஆகும். கோவி-அல்டை மாகாணத்திற்கும் சவ்கானுக்கும் இடையில் தோன்றிப் பாய்கின்ற சவ்கான் ஆற்றின் பெயரே இம்மாகாணத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது.
Remove ads
சுற்றுச்சூழல்
மேற்கு கன்காய் மலைத்தொடர் மற்றும், கோவ்த் மாகாணத்தின் பரந்த ஏரி வடிநிலம் முதலான பகுதிகளை இந்நகரம் கோபி பாலைவனத்தின் தெற்குப் பகுதியில் இணைக்கிறது. இதனால் சவ்கானின் சுற்றுச்சூழல் உள்நாட்டில் "கோபி-கன்காய்" (Говь хангай) சுற்றுச்சூழல் எனக் கருதப்படுகிறது.
சவ்கான் மாகாணத்திலுள்ள மிக உயர்ந்த இடம் ஒட்கோண்டெங்கெர் பகுதியாகும். கன்காய் மலைத்தொடரின் மிக உயரமானது மற்றும் ஒரே மலையுச்சி என்ற இரண்டு சிறப்புக்களையும் கொண்ட இம்மலையுச்சியில் நிலையாக ஒரு வெப்ப நீரூற்று காணப்படுகிறது. உலியாசுடை நகரத்திற்கு 60 கிலோமீட்டர் கிழக்கில் 95,510 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இம்மலை ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். சவ்கான் மாகாணத்தின் இலச்சினையில் இம்மலையின் படத்தைக் காணலாம். மகாயாண பௌத்தத்தின் பழம்பெரும் போதிச்சத்துவர்களில் ஒருவரான வச்ரபானியுடன் ஒட்கோண்டெங்கெர் தொடர்புடையது ஆகும்.
சவ்கானின் மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் மகா பெரிய மணற்குன்றுகள் சவ்கானின் உட்புறம் நோக்கி 100 கிலோமீட்டர் அளவுக்கு நீட்சியடைந்தும் கோபி-அல்டை மாகாணத்திற்கு கீழாகவும் காணப்படுகின்றன. இம்மணற் குன்றுகளுடன் சவ்கானின் பெரிய ஏரியான பாயன் நூர் அமைந்துள்ளது.
Remove ads
காலநிலை
பெரும்பாலான பொழிவுகள் கோடை மாதங்களில் மழையாகப் பொழிகின்றன. அடுத்தடுத்த மே, செப்டம்பர் மாதங்களில் இம்மழையுடன் சிறிதளவு பனியும் கலந்து பொழிகிறது. குளிர்காலங்கள் பொதுவாக மிகவும் வறண்ட நிலையில் உள்ளன.
மங்கோலியாவின் மிகக்குளிரான வெப்பநிலை கொண்ட பகுதிகள் சவ்கானில் பதிவாகியுள்ளது. சவ்கானின் மிகப்பெரிய குடியிருப்புப் பகுதியான தோன்சோண்ட்செங்கெல் பகுதியில் மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலையாக -52.9 ° செல்சியசு வெப்பநிலை பதிவானது. இதேபோல புவியில் பதிவான அதிகப்பட்ச அழுத்தமானி அழுத்தம் 1085.7 எக்டோபாசுகல் அழுத்தமும் இங்குதான் பதிவாகியுள்ளது. 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 19[1] அன்றுதான் இவ்வழுத்தம் அங்கு பதிவான நாளாகும்.
Remove ads
வன உயிரினங்கள்
சவ்கானின் பரந்த சுற்றுச்சூழல் பகுதிகளில் அதிகமான கால்நடைகள் வசிக்கின்றன என்பதைத் தவிர இங்குள்ள அடர்த்தியான காடுகளில் வனவிலங்குகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளன. கோபி கரடிகள், மங்கோலியன் வகை கழுதைகள், காட்டு பன்றிகள், புள்ளி மான்கள், அர்காலி வகை காட்டு ஆடுகள், இபெக்சு வகை மலையாடுகள், மங்கோலியன் ஓநாய்கள், சரிவுவாழ் நரிகள், அணில்கள், கீரிப்பிள்ளைகள், யுரேசிய வகை பூனைகள், முயல்கள் காணப்பட்டது, மற்றும் இரண்டு மங்கோலியன் மற்றும் கருப்புவால் மறிமான்கள் போன்ற விலங்குகள் இக்கானகப் பகுதியில் காணப்பட்டன.
பனிச் சேவல்கள், காடைகள், அன்னப்பறவைகள், கழுகுகள், வல்லூறுகள், சிட்டு வல்லூறுகள் உள்ளிட்ட காட்டுப் பறவைகள், மலைப் பறவைகள் மற்றும் இடம்பெயர்ந்த பறவைகள் சவ்கான் சுற்றுச் சூழலில் காணப்பட்டன. மீன் பிடிக்கும் தொழில் சவ்கான் மாகாணத்தில் முக்கியமான ஒரு தொழிலாக நடைபெற்றது. கார் நூர், பாயன் நூர் ஏரிகளில் மீன் வளம் மிக்க ஏரிகளாக இருந்தன. இவற்றைத் தவிர மாகாணம் முழுவதும் பாய்ந்த நூற்றுக்கணக்கான சிற்றாறுகளிலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மீன்கள் கிடைத்தன.
மக்கள் தொகை
சவ்கானின் மக்கள்தொகைப் பெருக்கம் 1994 ஆம் ஆண்டில் பெருவரியாகத் தடுக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டிலிருந்த மக்கள் தொகைப் பெருக்கத்துடன் ஒப்பிடுகையில் 1995-2005 காலத்தில் 40,000 நபர்கள் குறைவாக மக்கள் தொகை இருந்தது. கால்கா இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையோராக இருந்தனர். கோட்கோய்டு, கசாக் சிறுபான்மையினரும் கனிசமான அளவில் இருந்தனர்.
Remove ads
பொருளாதாரம்
சவ்கான் பண்ணையாளர்கள் ஐந்து வகை கால்நடைகள் ஒவ்வொன்றையும் அதிக அளவு விலங்குகளாகப் பெருக்கி உற்பத்தி செய்தனர். இதனால் சவ்கானில் 2.1 மில்லியன் கால்நடைகள் உயிர் வாழ்ந்தன. இவற்றில் 1.03 மில்லியன் செம்மறி ஆடுகள், 8,61,000 வெள்ளாடுகள், 107000 மாடுகள் மற்றும் எருமைகள், 101000 குதிரைகள் மற்றும் 6300 ஒட்டகங்கள் உள்ளிட்டவை இவற்றில் அடங்கியிருந்தன[5].
இரும்பு, தங்கம், செப்பு, மாலிப்டினம், பாசுபரசு போன்ற தனிமங்களின் தனிமங்களின் கனிமங்கள் சவ்கான் மாகாணத்தில் அதிகளவில் கிடைத்தன. வைரங்களும் இப்பகுதியில் அதிகம் கிடைக்கிறது. சவ்கானின் இக்கனிம வளங்கள் யாவும் பயன்படுத்தப்படாமல் அப்படியே இருந்தாலும், 2012 இல் தங்கமலைக் கனிமத் திட்டம் என்ற பெயரில் சுரங்கம் ஒன்று இங்கு கட்டப்பட்டது[6]
Remove ads
போக்குவரத்து
நகருக்கு அருகாமையில் உள்ள பழைய உலியாசுடை விமான நிலையத்தில் இரண்டு சீர்படுத்தப்படாத ஓடு பாதைகள் உள்ளன. இங்கு விமானங்கள் ஏதும் முறையாக இயக்கப்படுவதில்லை, 2002 ஆம் ஆண்டிலிருந்து தோனோய் விமான நிலையம் என்றழைக்கப்படும் புதிய உலியாசுடை விமான நிலையத்தில் வழியாக்கப்படாத ஒரு பரவுத்தளம் பராமரிக்கப்படுகிறது. நகரத்திற்கு மேற்கே 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இவ்விமான நிலையத்தில் இருந்தும் உலான் படோரிலிருந்தும் தினசரி விமானங்கள் வந்து போகின்றன.
Remove ads
நிர்வாகத் துணைப்பிரிவுகள்
சவ்கானின் உள்மாவட்டங்கள்

மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads