ஒன்றியக் குழு (பாக்கித்தான்)
பாக்கித்தான் நிர்வாக அமைப்பு From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒன்றியக் குழு அல்லது கிராமக் குழு (Union Council or Village Council), இவ்வமைப்பு தமிழ்நாட்டின் கிராம ஊராட்சி போன்றதே. இது பாகிஸ்தானின் நிர்வாகத்தின் 5 அடுக்கு கொண்ட அமைப்பின் அடிநிலையில் உள்ள ஒரு நிர்வாக அமைப்பாகும். ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட 11 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். ஒன்றியக் குழுவின் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள ஒரு செயலாளரை அரசின் சார்பாக நியமிக்கப்படுவர்.
ஒன்றியக் குழுவின் அமைப்பு
ஒன்றியக் குழுக்களை கிராமிய ஒன்றியக் குழுவாகவும், நகர்ப்புற ஒன்றியக் குழுவாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்றியக் குழுவின் தலைவர் (நசீம்), துணைத் தலைவர் (நயீப் நசீம்) மற்றும் 6 பொது உறுப்பினர்களை நேரடித் தேர்தல் மூலமும், 2 பெண் உறுப்பினர்கள், கிராமப்புறம் எனில் 1 விவசாயம் செய்யும் உறுப்பினரையும், (நகர்புறம் எனில் 1 தொழிலாளர் பிரிவு உறுப்பினரையும்), இளைஞர் சார்பாக 1 உறுப்பினர், மற்றும் இசுலாமியர் அல்லோதர் சார்பாக 1 உறுப்பினரும் நியமிக்கப்படுவார்.[1]
Remove ads
ஒன்றியக் குழுவின் நிதி ஆதாரங்கள்
- தொழில் வரி வசூலித்தல்
- சந்தைகளில் கால்நடைகள் விற்பனை வரி வசூலித்தல்
- சந்தை வரி வசூலித்தல்
- பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் அதன் மீதான கட்டணத்தை வசூலித்தல்.
பாகிஸ்தானின் நிர்வாக அடுக்குகள்
- பாகிஸ்தான் நடுவண் அரசு
- பாகிஸ்தான் மாகாணங்கள்
- மாவட்டங்கள்
- வருவாய் வட்டங்கள்
- ஒன்றியக் குழுக்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads