ஒரைசா சட்டைவா

From Wikipedia, the free encyclopedia

ஒரைசா சட்டைவா
Remove ads

பொது வழக்கில் நெல் எனப்படும்Oryza sativa ஒருவகைப் புல் தாவர இனமாகும். இது ஆங்கிலத்தில் நெல் என்றே கூறப்படுகிறது. இது பொதுவாக உலக முழுவதும் பயிரிடப்படும் நெல் வகையாகும். இது வரலாற்றியலாக முதலில் பண்படுத்திய நெல்வகையாகும். இது சீன யாங்சி ஆற்றுப் படுகையில் 13,500 முதல் 8,200 ஆண்டுகளுக்கு முன்பு விளைவிக்கப்பட்டது.[1][2][3][4]

விரைவான உண்மைகள் ஒரைசா சட்டைவா, உயிரியல் வகைப்பாடு ...
Thumb
ஒரைசா சட்டைவா

ஒரைசா சட்டைவா என்பது, பொவாசியே குடும்பத்தின் ஒரைசா பேரினத்தைச் சார்ந்ததாகும். இதன் மரபன்தொகை 12 குறுமவகங்களைக் கொண்டது; இதில் 430 Mbp அளவு மரபன்கள் உள்ளன. இது கூலத் தாவரவியலுக்கான வகைமை உயிரியாகும். இதை மரபன் திருத்தப் பயியாக மாற்றுவது எளிமையானது.

ஒரைசா சட்டைவா என்பது இரண்டு வகைச் சிற்றினத்தைச் சேர்ந்ததாகும். அவை சிறிய விதை ஜப்பானிக்கா அல்லது சினிக்கா நெல்வகை, பெரிய விதை இண்டிகா நெல்வகை ஆகியனவாகும். ஜப்பானிக்கா வறட்சியான நிலங்களில் பயிரிடப்படுகிறது. ஆசியா முழுவதும் மூழ்கிய தாவரமாகவும் ஊடுபயிராகவும் இண்டிகா பயிரிடப்படுகிறது. அரிசி வெள்ளை, கருப்பு, பழுப்பு , சிறிதளவு கருவெள்ளை நிறத்தில் இருக்கும். அரிசியில் சவ்வரிசி ஒரு வகை ஆகும். மேலும் சில நெல் வகைகளாக இந்தோனேசியா கருப்பு நெல்லும், தாய்லாந்தின் மல்லிகை கருப்பு நெல்லும் உள்ளன. வெப்பமண்டலத்தில் இதன் மூன்றாவது வகைச் சிற்றினமும் பேரளவில் பயிரிடப்படுகிறது. காட்டாக, இந்த வகையில் சிறியவிதை “தினவான்“, “உனாய்” வகைகள் நாதன் லூசா படிகட்டு பகுதிகளிலும், அதிக உயரமான பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றன.


ஒரைசா சட்டைவா நெல்வகையில் ஆறுபிரிவுகள் உள்ளன. அவை ஜப்பானிக்கா, நறுமண இண்டிக்கா, ஆசு, இரயடா, ஆசினா, கிளாசுமன் என்பனவாகும்; 1987 ஆம் ஆண்டில் தான் ஒரைசா சட்டைவா ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.

Remove ads

பெயரீடு

பண்டைக்கால முதலே நெல் பயிரிடப்பட்டு வருகிறது. ஒரைசா[5] என்பது நெல்லுக்கான செவ்வியல் இலத்தீனச் சொல். சட்டைவா[6] என்றால் "பயிரிடப்படும்" என்று பொருள்.


காட்சிமேடை

குறிப்புகள்

  1. Oka (1988)
  2. CECAP, PhilRice and IIRR. 2000. "Highland Rice Production in the Philippine Cordillera."
  3. Glaszmann, J. C. (May 1987). "Isozymes and classification of Asian rice varieties". Theoretical and Applied Genetics. 74 (1): 21–30. PubMed. doi:10.1007/BF00290078

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads