பன்னாட்டு ஒலிம்பிக் குழு

From Wikipedia, the free encyclopedia

பன்னாட்டு ஒலிம்பிக் குழுmap
Remove ads

பன்னாட்டு ஒலிம்பிக் குழு (French: Comité international olympique, CIO, ஆங்கிலம்: International Olympic Committee, IOC) (சுருக்கமாக ப.ஒ.கு) சூன் 23, 1894 அன்று டெமெட்ரியோசு விகேலசை முதல் தலைவராகக் கொண்டு சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் பியர் டி குபேர்டன் துவக்கிய ஓர் பன்னாட்டு அமைப்பாகும். இன்று 205 நாடுகளின் தேசிய ஒலிம்பிக் குழுக்கள் இதில் அங்கம் வகிக்கின்றன.

விரைவான உண்மைகள் உருவாக்கம், வகை ...
Thumb
லோசானில் அமைந்துள்ள அலுவலகம்

ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நவீன குளிர்கால மற்றும் வேனில் கால ஒலிம்பிக் விளையாட்டுக்களை ப.ஒ.கு ஒருங்கிணைக்கிறது. ப.ஒ.கு ஒருங்கிணைத்த முதல் ஒலிம்பிக் போட்டிகள் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் நடந்த 1896 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகும்; முதல் குளிர்கால போட்டிகள் பிரான்சின் சமோனிக்சில் நடந்த 1924 குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆகும். 1992 வரை குளிர்கால விளையாட்டுக்களும் கோடைகால விளையாட்டுக்களும் ஒரே ஆண்டில் நிகழ்த்தப்பட்டன. அதன் பின்னர் ப.ஒ.கு குளிர்கால விளையாட்டுக்களை இரு கோடைகால விளையாட்டுக்களுக்கு இடையே இரண்டாம் ஆண்டு நடத்துகிறது. இது இரண்டை திட்டமிட போதிய நேரம் ஒதுக்கவும் வளங்களை கால இடைவெளியில் முழுமையாக பயன்படுத்திடவும் உதவுகிறது.[1][2][3]

Remove ads

வெளியிணைப்புகள்

46°31′5″N 6°35′49″E

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads