1896 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

1896 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள், அலுவல்முறையாக முதலாம் ஒலிம்பியாட்டின் விளையாட்டுப் போட்டிகள், (Games of the I Olympiad) கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரத்தில் ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 15, 1896 வரை நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இதுவே தற்காலத்தில் நடைபெற்ற முதல் பன்னாட்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகும். பண்டைக் கிரேக்கம் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பிறப்பிடமாகக் கருதப்படுவதால் இந்த துவக்க ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற ஏதென்சு நகரமே பொருத்தமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரெஞ்சு ஆசிரியரும் வரலாற்றாளருமான பியர் தெ குபர்த்தென் 1894இல் சூன் 23 அன்று பாரிசில் கூட்டிய பேராயமொன்றில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது. இந்தப் பேராயத்தில் தான் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவும் (IOC) நிறுவப்பட்டது.

விரைவான உண்மைகள்

பல்வேறு இடையூறுகளையும் பின்னடைவுகளையும் கடந்து 1896ஆம் ஆண்டு நடத்தப்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்கள் வெற்றியடைந்ததாக கருதப்பட்டது. அதுநாள்வரையிலான மிக கூடுதலான பன்னாட்டு பங்கேற்பைப் பெற்ற ஓர் விளையாட்டு நிகழ்வாக இது அமைந்தது. பேனதினைக்கோ விளையாட்டரங்கில் மிகுந்த மக்கள் திரள் போட்டிகளைக் காணக் கூடியது.[1] போட்டி நடத்திய கிரேக்கர்களுக்கு தங்கள் நாட்டு இசுபைரிடோன் லூயி மாரத்தானை வென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. போட்டிகளில் மிகுந்த பதக்கங்களைப் பெற்றவராக செருமானிய கார்ல் சூமான் விளங்கினார்; மற்போர் மற்றும் சீருடற் பயிற்சி விளையாட்டாளரான இவருக்கு நான்கு பதக்கங்கள் கிடைத்தன.

இந்தப் போட்டிகளுக்குப் பின்னர் கிரேக்க மன்னர் முதலாம் ஜார்ஜ், அமெரிக்கப் போட்டியாளர்களில் சிலர் உட்பட பல முக்கிய நபர்கள் அடுத்தப் போட்டிகளையும் ஏதென்சிலேயே நடத்த குபர்த்தெனுக்கும் ஐஓசிக்கும் மனு கொடுத்தனர். இருப்பினும் 1900 ஒலிம்பிக் போட்டிகளை பாரிசில் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டு விட்டதால் இதனை ஏற்க இயலவில்லை. இருப்பினும் ஒவ்வொரு நான்காண்டுகளுக்கும் இடையில் நான்காண்டுகளுக்கு ஒருமுறை ஏதென்சில் இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுகள் என்ற பல்துறை விளையாட்டுப் போட்டிகளை திட்டமிட்டது; அத்தகைய முதல் விளையாட்டுப் போட்டிகள் 1906இல் ஏதென்சில் நிகழ்த்தப்பட்டது. பின்னர் இந்தப் போட்டிகளை கைவிட்ட பன்னாட்டு ஒலிம்பிக் குழு இந்த இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுக்களில் வழங்கப்பட்ட பதக்கங்களையும் அங்கீகரிக்கவில்லை. 108 ஆண்டுகள் கழித்தே 2004இல் ஒலிம்பிக் போட்டிகள் மீண்டும் ஏதென்சில் நடந்தது.

Remove ads

பங்கேற்ற நாடுகள்

Thumb
பங்கேற்ற நாடுகள்

இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு முன்னதாக ஒலிம்பிக் இயக்கத்தில் தேசிய அணிகள் குறித்த வரயறை எதுவம் இருக்கவில்லை. பத்தாண்டுகள் கழித்து 1896இல் பங்கேற்ற போட்டியாளர்களின் தேசியத்தைக் குறித்த மூலங்கள் ஆயப்பட்டு பதக்க எண்ணிக்கைகள் வழங்கப்பட்டன. இதனால் பங்கேற்ற நாடுகள் குறித்து பல பிணக்குகள் எழுந்துள்ளன. பன்னாட்டு ஒலிம்பிக் குழு 14 நாடுகள் பங்கேற்றதாக அறிவித்தபோதும் அவற்றை பட்டியலிடவில்லை.[2] கீழ்காணும் 14 நாடுகளே ப.ஒ.கு அங்கீகரித்த நாடுகளாக இருக்க வாய்ப்புள்ளது. சில ஆதாரங்களின்படி 12 நாடுகள், சிலி மற்றும் பல்கேரியாவைத் தவிர்த்து, பட்டியலிடப்பட்டுள்ளன.மேலும் சில இத்தாலியை மட்டும் தவிர்த்து 13 எனக் காட்டுகின்றன. சில ஆதாரங்களில் எகிப்து சேர்க்கப்பட்டுள்ளன. பெல்ஜியமும் உருசியாவும் போட்டியாளர்களை அறிவித்தபோது பின்னர் விலக்கிக் கொண்டன.

மேலதிகத் தகவல்கள் பங்கேற்ற நாடுகள் ...
Remove ads

பதக்கங்கள்

Thumb
1896 கோடைக்கால ஒலிம்பிக்கில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட வெள்ளி பதக்கம்.

கலந்துகொண்ட 14 நாடுகளில் 10 பதக்கங்களை வென்றன. தவிரவும் கலவை அணி எனப்பட்ட பன்னாட்டு நாடுகளின் அணி மூன்று பதக்கங்களை வென்றன. ஐக்கிய அமெரிக்கா மிகுந்த தங்கப் பதக்கங்களை (11) வென்றது. போட்டி நடத்திய கிரீசு மிகுதியான மொத்த பதக்கங்களையும் (46) மிகுதியான வெள்ளி (17) மற்றும் வெண்கல (19) பதக்கங்களை வென்றது. ஐக்கிய அமெரிக்காவை விட ஒரு தங்கப் பதக்கம் குறைவாக 10 பதக்கங்களை வென்றது.[10]

இந்த துவக்க ஒலிம்பிக் விளையாட்டுக்களில், வெற்றியாளர்களுக்கு வெள்ளிப் பதக்கமும், ஓர் சைத்தூன் கிளையும், சான்றிதழும் வழங்கப்பட்டன. இரண்டாமிடத்தை எட்டியவர்களுக்கு செப்பு பதக்கமும் பட்டை மரக்கிளையும் சான்றிதழும் வழங்கப்பட்டன.[13][14] பின்னதாக அண்மைய மரபுகளுக்கேற்ப ப.ஒ.அ ஒவ்வொருப் போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பின்னோக்கி தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை அறிவித்தது.[10]

குறிப்பு

      போட்டி நடத்திய நாடு (கிரீசு)

மேலதிகத் தகவல்கள் நிலை, நாடு ...
Remove ads

பெண் போட்டியாளர்கள்

1896 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், இசுட்டாமதா ரேவிதி என்ற கிரேக்கப் பெண் அலுவல்முறையான மாரத்தான் முடிவுற்றதற்கு அடுத்தநாள், ஏப்ரல் 11, அன்று மாரத்தான் ஓடினார். ஓட்ட முடிவில் விளையாட்டரங்கினுள் நுழைய அனுமதிக்கப்படாவிடினும் அவர் இந்த ஓட்டத்தை 5 மணிகள், 30 நிமிடங்களில் நிறைவு செய்தார்.இதற்கான சாட்சிகளையும் ஏற்பாடு செய்து புறப்பட்ட நேரத்தையும் முடித்த நேரத்தையும் குறிப்பிட்டு அவர்களிடம் கையொப்பம் பெற்றார். இந்த ஆவணத்தை கிரேக்க ஒலிம்பிக் குழுவினரிடம் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற எண்ணியிருந்தார். ஆனால் இதனை உறுதி செய்ய அவரது ஆவணமோ கிரேக்க ஒலிம்பிக் குழுவினரின் ஆவணங்களோ கிடைக்கவில்லை.[15]

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads