ஓசேமரிய எஸ்கிரிவா

From Wikipedia, the free encyclopedia

ஓசேமரிய எஸ்கிரிவா
Remove ads

புனித ஓசேமரிய எஸ்கிரிவா தே பலகுயர் (9 சனவரி 1902 – 26 ஜூன் 1975;') ஒரு உரோமன் கத்தோலிக்க குரு ஆவார். எசுப்பானியா நாட்டில் பிறந்த இவரே ஓபஸ் தேயி (en:Opus Dei) என்னும் பொது நிலையினருக்கான சபையினையும் கத்தோலிக்க குருக்கள் சபை ஒன்றையும் துவங்கியவர். இவருக்கு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், 2002-ஆம் ஆண்டில் புனிதர் பட்டம் அளித்தார். அப்போது திருத்தந்தை இவரைப்பற்றி கூறியது, "புனித ஓசேமரிய எஸ்கிரிவா கிறித்தவத்திற்கு சாட்சியம் பகர்ந்த தலையானவர்களுள் ஒருவர்" என்றார்.[1][2][3]

விரைவான உண்மைகள் புனித ஓசேமரிய எஸ்கிரிவா தே பலகுயர், பொது நிலை வாழ்வின் புனிதர் ...
Thumb
ஓசேமரிய எஸ்கிரிவாவின் முத்திரை

இவர் மத்ரித்தில் உள்ள கம்ப்லுயுடென்ஸ் பல்கலைக்கழகத்தில், சட்டத் துறையில் (civil law) முனைவர் பட்டமும், லார்தரன் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டமும் பெற்றார். இவரின் பணிகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது, ஓபஸ் தேயி என்னும் பொது நிலையினருக்கான துறவற சபையினைத் துவங்கியது ஆகும். இச்சபை பல குற்ற சாட்டுகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளானது. குறிப்பாக இதன் இரகசியத்தன்மை, வலது சாரி அரசியலில் ஊள்ள ஈடுபாடு, மூட சடங்குகள் முதலியன மிகவும் கடுமையாக தாக்கப்படுவதாகும். ஆனாலும், இச்சபையினரும், இச்சபையினை சாராத பலரும் இக்குற்றசாட்டுகளை மறுத்துள்ளனர்.[4] வத்திகான் பகுப்பாய்நர்கள் பலரும், குறிப்பாக சான் ஆலன் en:John L. Allen, Jr., இக்குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றதாகவும், ஓபஸ் தேயி மற்றும் எஸ்கிரிவாவின் எதிரிகளால் பரப்பப் படுவதாகவும் கூறுகின்றனர்.[5][6][7][8]

திருத்தந்தையர்கள் இரண்டாம் அருள் சின்னப்பர் மற்றும் பதினாறாம் ஆசீர்வாதப்பர் முதலியோர் 'பொது நிலையினரின் பங்கு', 'செய்யும் தொழிலின் மூலம் புனிதம் அடைவது' மற்றும் 'எல்லோருக்கும் புனிதராக விடப்படும் அழைப்பு' முதலிய இவரின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.[9]

The Way என்னும் பெயரில் வெளியான இவரின் புத்தகம், ஒரு மில்லியன் பிரதிகளுக்கும் மேல், 50-க்கும் மேலான மொழிகளில் விற்றுள்ளது.[5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads