வத்திக்கான் நகர்

From Wikipedia, the free encyclopedia

வத்திக்கான் நகர்
Remove ads

வத்திக்கான் நகர் (Vatican City) இத்தாலி நாட்டின் உரோம் நகரிலுள்ள ஒரு தன்னாட்சியுடைய சுதந்திர நாடாகும். இதன் அரசியல் தலைவர் திருத்தந்தையாவார். வத்திக்கான் நகரத்தில் இவரின் அதிகாரப்பூர்வ உறைவிடமும் அலுவலகமும் அமைந்துள்ள கட்டடம் திருத்தூதரக அரண்மனை என அழைக்கப்படுகிறது. எனவே கத்தோலிக்க கிறித்தவத்தின் தலைமை மையமாக வத்திக்கான் நகரம் திகழ்கிறது. இதன் மொத்தப் பரப்பளவு 44 எக்டேர் (108.7 ஏக்கர்) ஆகவும், 2017 கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1000 ஆகவும் இருக்கிறது.[1] ஆதலால், இதுவே பரப்பளவு மற்றும் மக்கட்தொகை அடிப்படையில் உலகின் மிகச்சிறிய நாடாகும்.

விரைவான உண்மைகள் வத்திக்கான் நகர-நாடுStatus Civitatis VaticanaeStato della Città del Vaticano, தலைநகரம் ...

இது ஒரு திருச்சபை [1] அல்லது புனித தலம்-முடியாட்சி [2] நாடு (ஒரு வகையான அரசியலமைப்பு) இதை ஆள்பவர் ரோமின் பிஷப்பான - போப் ஆவார். இதன் உயர்நிலை அலுவலர்கள் அனைவரும் பல்வேறு தேசிய மரபுகளைச் சேர்ந்த கத்தோலிக்க குருமார்களாவர். 1377 ஆம் ஆண்டில் அவிஞானில் இருந்து போப் இங்கு திரும்பியதிலிருந்து, அவர்கள் இப்போது வத்திக்கான் நகரத்தில் உள்ள திருத்தூதரக அரண்மனையில் வசித்து வந்தனர்.

வத்திக்கான் நகரம் 1929ஆம் ஆண்டு முதல் நிலைத்திருக்கும் ஒரு நகர-நாடு. 1929இல் தன்னாட்சி நாடாக உருவெடுத்த வத்திக்கான் நகரத்தைக் கிறித்தவ சமயத்தின் தொடக்கத்திலிருந்தே நிலைத்துவருகின்ற திருப்பீடத்திலிருந்து (Holy See) வேறுபடுத்திக் காண வேண்டும். வத்திக்கான் நகரின் அரசாணைகள் இத்தாலிய மொழியிலும்; திருப்பீடத்தின் அரசாங்க ஆவணங்கள் இலத்தீன் மொழியிலும் வெளியிடப்படுகின்றன. இரு ஆட்சியமைப்புககளுக்கும் வெவ்வேறு கடவுச்சீட்டுக்கள் உள்ளன: நாடில்லாத திருப்பீடம் வெறும் அரசுதொடர்புடைய மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை பிறப்பிக்கின்றது; வத்திக்கான் நகரம் குடியுறிமை கடவுச்சீட்டுக்களை பிறப்பிக்கின்றது. இரண்டு அரசுகளுமே குறைந்த அளவிலேயே கடவுச்சீட்டுக்களை பிறப்பிக்கின்றன.

1929ஆம் ஆண்டு இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக உருவான வத்திக்கான் நகர் ஒரு புதிய உருவாக்கமாகவே அமைந்தது. முந்தைய மத்திய இத்தாலியை உள்ளக்கியிருந்த திருத்தந்தை நாடுகளின்(756-1870) சுவடாக இதனை யாரும் கருதுவதில்லை. 1860-ஆம் ஆண்டு திருத்தந்தை நாடுகள் முழுதும் இத்தாலி முடியரசோடு சேர்க்கப்பட்டது. இருதியாக உரோமை நகரமும் அதன் சுற்று பகுதியும் 1870இல் சேர்க்கப்பட்டது.

வத்திக்கான் நகரத்தில் புனித பேதுரு பேராலயம், சிஸ்டைன் சிற்றாலயம், வத்திக்கான் அருங்காட்சியகங்கள் போன்ற சமய மற்றும் கலாச்சார தளங்கள் உள்ளன. இவை உலகின் மிகப் பிரபலமான ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைக் கொண்டுள்ளன. வத்திக்கான் நகரத்தின் தனித்துவமான பொருளாதாரமானது அஞ்சல்தலைகள் மற்றும் சுற்றுலாப் பொருட்களின் விற்பனை, அருங்காட்சியகங்களுக்கான நுழைவுக் கட்டணம், மற்றும் வெளியீடுகளின் விற்பனை ஆகியவற்றால் திரளும் நிதி ஆதரவைக் கொண்டுள்ளது.

Remove ads

பெயர்

வாடிகன் சிட்டி நகரத்தின் பெயர் முதலில் லடான் ஒப்பந்தத்தில் பயன்படுத்தப்பட்டது, இது 11 பெப்ரவரி 1929 இல் கையெழுத்திடப்பட்டது, இது நவீன நகர-நாட்டை நிறுவியது. இப்பெயரானது வத்திக்கான் மலையில் இருந்து எடுக்கப்பட்டது, நாட்டின் புவியியல் அமைந்த இடம் இதுவாகும். "வத்திக்கான்" என்பது எட்ருஸ்கன் குடியேற்றத்தின் பெயரிலிருந்து தோன்றியது, வத்திக்கான் அல்லது வத்திகம் என்பதன் பொருள் தோட்டம் என்பதாகும்.

நகரத்தின் உத்தியோகபூர்வ இத்தாலிய பெயர் சிட்டா டெல் வாட்டிகானோ என்பதாகும். மரபுசார் முறையில் ஸ்டாட்டோ டெல்லா சிட்டா டெல் வட்டிகானோ என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றின் பொருள் "வத்திக்கான் நகர நாடு" என்பதாகும்.  திரு ஆட்சிப்பீடம் (இது வத்திக்கான் நகரத்திலிருந்து வேறுபட்டது) மற்றும் கத்தோலிக்க தேவாலயமும் தனது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் மதத்திற்குரிய (ecclesiastical) இலத்தீன் மொழியையே பயன்படுத்தினாலும், வத்திக்கான் நகரம் அதிகாரப்பூர்வமாக இத்தாலிய மொழியைப் பயன்படுத்துகிறது. இந்த நகரம் லத்தீன் பெயரில் வத்திக்கானே (Status Civitatis Vaticanæ) எனப்படுகிறது [3][4]. இது திரு ஆட்சிப்பீடத்தின் அதிகாரபூர்வமான ஆவணங்களில் மட்டுமல்லாமல், பெரும்பாலான அதிகாரப்பூர்வ திருச்சபை மற்றும் போப்பாண்டவர் ஆவணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

Remove ads

நில அமைப்பு

Thumb
வத்திக்கான் நகரம்
"வத்திக்கான்" என்ற பெயர் வத்திக்கான் மலை எனப் பொருட்படும் லத்தீன் வார்த்தையான வட்டிகனசில் இருந்து பெறப்பட்டது.இதன் ஆட்சிப்பகுதியானது புனித பேதுரு பேராலயம், திருத்தூதரக அரண்மனை, சிசுடைன் சிற்றாலயம் மற்றும் பல அருங்காட்சியகக் கட்டிடங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இப்பகுதியானது 1929 வரை இத்தாலிய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. 1929இல் இலாத்தரன் ஒப்பந்தத்தின் போது, முன்மொழியப்பட்ட பகுதிகளின் எல்லைகள் ஏற்கனவே இருந்த சுற்று சுவர் மூலம் வரையறுக்கப்பட்டது. மேலும் இந்நகரத்தின் எல்லைகள் இத்தாலியில் இருந்து ஒரு வெள்ளை கொடு மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இலாத்தரன் உடன்படிக்கை படி இந்நகரின் பகுதிகள் மட்டுமல்லாது இத்தாலிய ஆட்சிப்பகுதிக்குள் அமைந்துள்ள ஆலயங்களும் வத்திக்கான் நகர ஆட்சிப்பகுதியாக அமைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Thumb
புனித பேதுரு பேராலயம்
Remove ads

ஆரம்பகால வரலாறு

விரைவான உண்மைகள் வத்திக்கான் நகர் Vatican City, வகை ...
  • "வத்திக்கான்" என்ற பெயர் ரோமன் குடியரசின் காலத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வந்திருக்கின்றது.
  • ரோம பேரரசரான முதலாம் ஆக்ரிப்பினா(கி.மு.1418-அக்டோபர் கி.பி.33 )ஆட்சி காலத்தின் கீழ் கி.பி. 1 வது நூற்றாண்டில் இப்பகுதியில் தோட்டங்கள் மாளிகைகள் போன்றவை கட்டப்பட்டன
  • பின்னர் கி.பி.40 ல் அவரது மகன் பேரரசர் கலிகுல்லா தனது தோட்டங்களில் நீரோ கேளிக்கை கூடத்தை அமைத்தார்.
  • கி.பி. 64 ல் ரோமில் பெரும் தீ விபத்திற்கு பிறகு பல கிரிஸ்துவர்களின் பலியிடும் இருப்பிடமாக மாறியது.பண்டைய வழக்கப்படி இங்கு புனித பீட்டர் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்தார் என கூறப்படுகிறது.
  • 4 வது நூற்றாண்டின் முதல் பாதியில் புனித பீட்டர் என்ற காண்ஸ்டாண்டீனிய பசிலிக்கா கட்டப்பட்டது.
  • 1939 ல் இருந்து 1941 வரை மறுமலர்ச்சி காலத்தின் போது திருத்தந்தை பன்னிரண்டாம் பையசின் ஆணைப்படி தோண்டியபோது பண்டைய இடுகாடின் எஞ்சியுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டது.
  • திருத்தந்தை அரண்மனை திருத்தந்தை சிமாசஸ் ஆட்சிக்காலத்தின் போது 5 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டது.

பொருளாதாரம்

வத்திக்கான் நகரின் வருவாயானது வத்திக்கான் அருங்காட்சியகங்கள் மற்றும் அலுவலகங்கள் மூலமும்,நாணயங்கள்,பதக்கங்கள் மற்றும் சுற்றுலா பரிசு விற்பனை மூலம் வருகிறது.அருங்காட்சியகங்களின் அனுமதி கட்டணம் மூலமும் மற்றும் வெளியீடுகள் விற்பனை மூலம் . வேத தொழிலாளர்கள் வருமானம் வழங்கப்படுகிறது.மற்ற துறைகளானது அச்சுத்துறை,பளிங்குகல் உற்பத்தி மற்றும் ஊழியர்களின் சீருடை உற்பத்தி முதலியவை ஆகியவை ஆகும்.

மேலும் வத்திக்கான் வங்கி என்று அழைக்கப்படும் IOR வங்கி உலகளாவிய நிதி நடவடிக்கைகளை நடத்துகிறது வத்திக்கான் நகரம் அதன் நாணயங்களை சொந்தமாக தயாரிக்கின்றது.ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு சிறப்பு ஒப்பந்தம் காரணமாக ஜனவரி 1, 1999 முதல் அதன் நாணயமாக யூரோ பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 2,000 பேர் வேலைக்கு எந்த வத்திக்கான் நகர நிர்வாகத்தில் 2007 ஆம் ஆண்டில் 6.7 மில்லியன் யூரோக்கள் ஒரு உபரி இருந்தது ஆனால் 2008 ல் 15 மில்லியன் யூரோக்கள் ஒரு பற்றாக்குறை ஏற்பட்டது.

குற்றம்

Thumb
புனித பீட்டர் சதுக்கத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் சட்டைப்பைத் திருடர்களின் இலக்காக உள்ளது.

வத்திக்கான் நகரில் நிகழும் பெரும்பாலான குற்றங்கள் அங்கு வரும் வெளியாட்களால் நிகழ்கிறது. அவர்கள் பணப்பையைப் பறிப்பு, சட்டைப்பைத் திருட்டு, கடைத்திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.[5] புனித பீட்டர் சதுக்கத்தில் கூடும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தோதாக இருக்கிறது.[6] புனித பீட்டர் சதுக்கத்தில், இத்தாலிய காவல்துறை தான் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. எனவே, அங்கு குற்றங்கள் நிகழும்போது இத்தாலிய அதிகாரிகளால் குற்றவாளிகள் விசாரிக்கப்படலாம்.[7]

வத்திக்கான் நகரில், விசாரணைக் கைதிகளுக்கான சில தடுப்புச் சிறைகளைத் தவிர, வேறு சிறைச்சாலை அமைப்பு ஏதும் இல்லை.[8] வத்திக்கானில் குற்றங்கள் செய்ததற்காக தண்டிக்கப்பட்டவர்கள் இத்தாலிய சிறைகளில் தண்டனை அனுபவிப்பர். அதற்கான செலவுகளை வத்திக்கான் ஏற்கும்.[9]

Remove ads

புவியியல்

காலநிலை

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், Vatican City, மாதம் ...
Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads