ஓர்டோவிசியக் காலம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஓர்டோவிசியம் அல்லது ஓர்டோவிசியக் காலம் (Ordovician) என்பது 485.4± 1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 443.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் 6 காலங்களில் 2வது காலமான ஓர்டோவிசியக் காலம் கேம்பிரியக் காலத்தின் முடிவிலிருந்து சிலுரியக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது.ஓர்டோவிசியக் காலம் வேல்சிய பழங்குடியினரான ஓர்டோவின்சியர்கள் நினைவாக இடப்பட்டது. அடம் செட்சுவிக்கு, இறொட்டரிக்கு முரிச்சன் என்ற இரு நிலவியலாளர்களது மாணாக்கர்கள் வடக்கு வேல்சில் உள்ள ஒரு பாறைப் படிவுகளை ஒரு சாரார் கேம்பிரியக் காலத்திற்கும் ஒரு சாரார் சிலுரியக் காலத்திற்கும் உரியதாக கருதி தருகத்தில் ஈடுபட்டிருந்தனர். இத்தருக்கத்தை நிவர்த்தி செய்யும் வகையில் இப்பெயர் 1879 ஆம் ஆண்டு சாருலசு இலெபுவேர்த்து என்ற இங்கிலாந்து நிலவியலாளரால் இடப்பட்டது. விவாதத்திற்குரிய பாறைப்படிவுகளில் காணப்பட்ட விலங்குகளின் தொல்லுயிர் எச்சங்களை அவதானித்த இலெபுவேர்த்து அவை கேம்பிரியக் காலத்துக்கோ அல்லது சிலுரியக் காலத்துக்கோ உரியவை அல்ல என்பதை கணிப்பிட்டு அவற்றைத் தனியான ஒரு காலத்தில் இட்டார்.

ஓர்டோவிசியக் காலம் காலம்
485.4–443.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
PreЄ
Pg
N
Mean atmospheric O
2
content over period duration
c. 13.5 vol %[1][2]
(68 % of modern level)
Mean atmospheric CO
2
content over period duration
c. 4200 ppm[3][4]
(15 times pre-industrial level)
Mean surface temperature over period duration c. 16 °C[5][6]
(2 °C above modern level)
Sea level (above present day) 180 m; rising to 220 m in Caradoc and falling sharply to 140 m in end-Ordovician glaciations[7]
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads