ஓல்மியம் அசிட்டேட்டு

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

ஓல்மியம் அசிட்டேட்டு
Remove ads

ஓல்மியம் அசிட்டேட்டு (Holmium acetate) என்பது Ho(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

தயாரிப்பு

ஓல்மியம் கார்பனேட்டை அசிட்டிக் அமிலத்தில் கரைப்பதன் மூலம் ஓல்மியம் அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது:[1]

Ho2(CO3)3 + 6 CH3COOH → 2 (CH3COO)3Ho + 3 H2O + 3 CO2

4 என்ற காரகாடித்தன்மைச் சுட்டெண் மதிப்பு கொண்ட அசிட்டிக் அமிலத்தில் ஓல்மியம் ஆக்சைடை கரைத்து ஓல்மியம் அசிட்டேட்டு சேர்மத்தின் நான்கு நீரேற்று (Ho2(CH3COO)6·4H2O):[2] தயாரிக்கப்படுகிறது.

Ho2O3 + 6 CH3COOH → 2 Ho(CH3COO)3 + 3 H2O

இயற்பியல் பண்புகள்

ஓல்மியம் அசிட்டேட்டின் அரையேழு நீரேற்றானது 105 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து அரைநீரேற்றாக உருவாகிறது. 135 பாகை செல்சியசு வெப்பநிலையில் மேலும் சிதைவடைந்து ஒரு நீரிலியாக மாறுகிறது. கூடுதலாக 590 பாகை செல்சியசுக்கு வெப்பப்படுத்தினால் Ho(OH)(CH3COO)2, HoO(CH3COO) பின்னர் Ho2O2CO3 என ஓல்மியம் ஆக்சைடாக உருவாகிறது. , [3]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads