கக்கோலாத் அருவி

From Wikipedia, the free encyclopedia

கக்கோலாத் அருவி
Remove ads

கக்கோலாட் நீர்வீழ்ச்சி (Kakolat Falls) இந்தியாவின் பீகார் மாநிலம் நவாதா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும்.

விரைவான உண்மைகள் கக்கோலாட் நீர்வீழ்ச்சிKakolat Falls ककोलत जलप्रपात, அமைவிடம் ...
Thumb
கோடைகாலத்தில் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

கக்கோலாட் மலையில் கக்கோலாட் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பீகார் மற்றும் சார்க்கண்ட் மாநிலங்களின் எல்லையில் நவாதாவுக்கு 33 கிலோமீட்டர் தொலைவிலும் தலி பசாருக்கு 4 கிலோமீட்டர் தொலைவிலும் இந்நீர்வீழ்ச்சி இருக்கிறது. மிகவும் அதிகமான சுற்றுலா பயணிகளால் பார்வையிடப்பட்ட மற்றும் புகழ்பெற்ற பீகார் பயணத்தின் ஒரு பகுதியாக கக்கோலாட் நீர்வீழ்ச்சிப் பயணம் கருதப்படுகிறது. சுற்றுலா பயணிகள் பல மாநிலங்கள் மற்றும் அருகிலுள்ள அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இங்கு வருகை தருகின்றனர். பீகாரின் ககோலாட் நீர்வீழ்ச்சி 150 முதல் 160 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் ஓர் இயற்கை நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது[1]

கக்கோலாட் நீர்வீழ்ச்சியுடன் தொடர்புடைய புராணக் கதைகளும் உண்டு, மலைப்பாம்பாக போகும்படி சபிக்கப்பட்ட ஒரு திரேத யுக மன்னர் இந்நீர்வீழ்ச்சியில் வாழ்கிறார் என்று இந்து மத ஆன்மீகவாதிகளால் கூறப்படுகிறது. வனவாச காலத்தில் பாண்டவர்கள் இப்பகுதிக்கு வந்ததாகவும் இதனால் பாம்பாக உருமாறியிருந்த மன்னன் சாபவிமோசனம் பெற்றதாகவும் அக்கதை செல்கிறது. இந்நீர்வீழ்ச்சியில் குளித்தவர்கள் பிறகெப்போதும் பாம்பாக பிறக்க மாட்டார்கள் என்று அம்மன்னன் பறைசாற்றினான். கக்கோலாட் நீர்வீழ்ச்சி பீகாரில் பெருமளவில் பிரபலமான ஒரு சுற்றுலா தலமாக மாறியுள்ளது, வார இறுதி சுற்றுலா திட்டங்களுக்கு கோடைகாலத்தில் இங்கு பெரும் கூட்டம் கூடுகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் பலவிதமான நீர்விளையாட்டுகளுக்கும் வேடிக்கை விளையாட்டுகளுக்கும் வாய்ப்பு உள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கான முக்கியத்துவத்தைத் தவிர கக்கோலாட் நீர்வீழ்ச்சி பிசுவா அல்லது சேத் சங்ராந்தி திருவிழா சமயத்தில் பரவலாக பார்வையிடப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இச்சமய நிகழ்வில் பக்தர்கள் பலரும் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்வார்கள்.

கக்கோலாட் நீர்வீழ்ச்சி பெரும் வரலாற்று சிறப்பு மிக்கதாகவும் புராண முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. கக்கோலாட் மலையில் நவாதாவுக்கு 33 கிலோமீட்டர் தள்ளியுள்ள கோவிந்தபூர் காவல் நிலையம் அருகே இந்நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது . இதற்கு கீழே ஓர் ஆழமான இயற்கை நிர்த்தேக்கம் இங்கே உள்ளது.

சுமார் 160 அடி (49 மீ) உயரம் கொண்ட கக்கோலாட் நீர்வீழ்ச்சியை சுற்றிலும் பச்சை பசேல் என்ற வனப்பகுதி சூழ்ந்து காணப்படுகிறது [2]. பீகாரில் கக்கோலாட் நீர்வீழ்ச்சி ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறிவருகிறது. கோடைகாலத்தில், இந்தியா முழுவதிலுமுள்ள மக்கள் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா வருகிறார்கள்.

30 டிசம்பர் 2018 அன்று நீர்வீழ்ச்சியை பார்வையிட்ட முதலமைச்சர் நிதீசு குமார் புகழ்பெற்ற கக்கோலாட் நீர்வீழ்ச்சி தொடர்பான பல்வேறு நல திட்டங்களை அறிவித்தார். தனது பயணத்தின்போது சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக ஒரு கயிற்றுப் பாலம் கட்டப்படும் என்றும் அறிவித்தார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads