கங்காரு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கங்காரு பாலூட்டிகளில் வயிற்றில் பை உள்ள இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் காணப்படுகின்றன. இவை நான்கு கால்களைக் கொண்டிருப்பினும் தன் பின்னங்கால்களால் தத்திச்செல்கின்றன. சமநிலை பேணுவதற்குத் தனது வாலைப் பயன்படுத்துகின்றன.
ஒரே தாண்டுதலில் 13 மீட்டர்கள் தூரம் தாண்டும் ஒரே விலங்கினம் கங்காருவாகும். இவ்விலங்கின் மடியில் ஒரு பை காணப்படுகிறது. இப்பையில் இவை தங்கள் குட்டியைக் தாங்கிக் கொண்டிருக்கின்றன. குட்டிகள் பால் அருந்துவதற்கான முலையும் இந்தப்பையினுள்ளே இருக்கின்றது.
கங்காருகள் அவற்றின் இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் கங்காருகளின் அதிகப்படியான மேய்ச்சலினால் ஏற்படும் புல்வெளிகளின் இழப்பைத் தடுப்பதற்காகவும் சுட்டுக்கொல்லப்படுகின்றன.[2] கங்காரு இறைச்சியி்ல் கொழுப்பின் அளவு குறைவாக உள்ளதால் மனிதர்களுக்கு நல்லதாகக் கருதப்படுகின்றது.[3]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads