கங்கோத்ரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கங்கோத்திரி (Gangotri) (Hindi: गंगोत्री) உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். பாகீரதி நதிக்கரையில் உள்ள இந்நகரம் முக்கியமானதொரு இந்து புனிதத்தலம் ஆகும்.
கங்கோத்ரி பலராலும் கங்கையின் பிறப்பிடமெனக் கருதப்பட்டாலும் உண்மையில் கங்கோத்ரியிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறையே கங்கையின் பிறப்பிடமாகும். கங்கோத்ரியில் உள்ள நீரோட்டத்தின் பெயர் பாகீரதி என்பதாகும். இந்நீரோட்டம் தேவப்பிரயாகையில் தான் கங்கை எனும் பெயரைப் பெறுகிறது.
பகீரதன் எனும் அரசன் செய்த தவத்தாலே விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு கங்கை ஆறு வந்ததாகவும், அதனாலேயே பாகீரதி ஆறு எனும் பெயர் உண்டானதாகவும் இதிகாச, புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
Remove ads
புவியியல் அமைவு
கங்கோத்திரி 30.98°N 78.93°E இல் அமைந்துள்ளது.[1] கங்கோத்திரி கொடுமுடியில் உள்ள பசுமுகத்திலிருந்து பாகீரதி ஆறு உற்பத்தியாகிறது.
மக்கள் வகைப்பாடு
2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[2] கங்கோத்ரியின் மொத்த மக்கள் தொகை 606. இதில் ஆண்கள் 60%, பெண்கள் 40%. கங்கோத்ரியில் சராசரி எழுத்தறிவு விகிதம் 89%. இதில் ஆண்களின் விகிதம் 91%, பெண்கள் 80%. ஆறு வயதுக்குட்பட்டோரின் சதவீதம் 0%.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads