கசாரிபாக் தேசியப் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹசாரிபாக் தேசியப் பூங்கா(ஆங்கிலம்: Hazaribagh National Park) இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் ஹசாரிபாக் நகரிலிருந்து 12 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கடமான்கள், புள்ளிமான்கள், காட்டெருதுகள், காட்டுப்பன்றி மற்றும் நீலான் போன்றவை அதிகம் காணப்படும். இப்பூங்கா ஹசாரிபாக் நகரிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும், ராஞ்சி நகரிலிருந்து இந்த தேசியப் பூங்கா 135 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்துள்ளது. சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக காட்சிக் கோபுரங்கள் உள்ளன. இந்தப் பூங்காவில் புலிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது. மொத்தம் 14 புலிகள் 1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டன. இந்தப்பூங்கா 186 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads