கச்சியப்பர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கச்சியப்பர் (Kachiyapper) கோயில் அர்ச்சகரும், ஒரு புகழ் பெற்ற கவிஞரும் வேதாந்தவாதியும் ஆவார்.கந்தபுராணம் என்னும் நூலை இயற்றிய புலவர்.
காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர்.
கந்தபுராணத்தில் சேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் ஒன்றில் இவரின் தந்தை காளத்தி எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.[1] கவிவீரராகவன் என்பது இவரது இளமைப் பெயர்.[2]

Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
கச்சியப்பர் ஒரு சைவ பிராமண குடும்பத்தில் பிறந்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவிலில், காஞ்சிபுரம் குமார கோட்டம் முருகன் கோவில் முதலிய இடங்களில் அர்ச்சகராகப் பணியாற்றினார்.
படைப்புகள்
கச்சியப்பர் ஒரு கவிஞரும் வேதாந்தியும் ஆவார். இவரது படைப்புகளில் கந்த புராணம் மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இது சமசுகிருத மொழி கந்தபுராணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். மொத்தம் ஆறு காண்டங்களையும் 13,305 பாடல்களையும் உள்ளடக்கி அதே பாணியில் ஆக்கப்பட்டுள்ளது. பரசுராம முதலியார் கந்த புராணத்திற்குக் கச்சியப்பர் எழுதிய முன்னுரையின் அடிப்படையில் கந்த புராணத்தின் காலம் பொ.ஊ. 778-ஆம் ஆண்டாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
கந்த புராணம்
தமிழ் மற்றும் சமசுகிருத அறிஞரான கச்சியப்ப சிவ ஆச்சாரியார் என்கின்ற கச்சியப்பர் குமார கோட்டம் கோவிலில் ஒரு பூசாரியாக இருந்தார். இவர் கந்த புராணம் என்ற நூலை இயற்றினார். கச்சியப்பர் உரை இயற்றிய மண்டபம், கந்தபுராண அரங்கேற்ற மண்டபம் (வெளிப்புற மண்டபம்) இன்னும் கோயில் வளாகத்தில் உள்ளது. இப்போதும் கூட இந்த வளாகத்தில் மயில்கள் குவிந்து வருகின்றன.[3] காச்சியப்பர் கந்த புராணத்தில் ஆறு காண்டங்களை அமைத்துள்ளார். ஆறு காண்டங்களிலும் சேர்த்து மொத்தமாக 10,346 பாடல்கள் உள்ளன. கந்த புராணத்தின் முதல் வரியைக் கச்சியப்பாின் தெய்வமான முருகன் எழுதியதாக நம்பப்படுகிறது. பகலில் பூசாரி எழுதிய 100 சரணங்களைக் கடவுள் திருத்தியதாகவும் நம்பப்படுகிறது.[4] கவிஞர் தனது இசையமைப்பைக் கடவுளிடம் எடுத்துச் சென்று பாடி ஒத்திகை பார்த்தார்.[5] இப்போதும் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் கச்சியப்பரின் வழித்தோன்றல்களே எனக் கூறப்படுகிறது.[6]
கந்தபுராணத்தில் சம்பவ காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் ஆகிய முதல் ஆறு காண்டங்களையும் கச்சியப்பர் இயற்றினார். ஏழாவது காண்டமான உபதேச காண்டத்தைக் குகலேரியப்ப முதலியார் இயற்றினார்.[7]
Remove ads
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads