கச்சேரி

இலங்கையின் மாவட்ட ஆட்சியரகங்கள் From Wikipedia, the free encyclopedia

கச்சேரி
Remove ads

கச்சேரி அல்லது மாவட்டச் செயலகம் (kachcheri அல்லது district secretariat) என்பது இலங்கையில் மாவட்டத்தை நிர்வகிக்கும் முதன்மை அரசு நிர்வாக மையமாகும். இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தலா ஒரு கச்சேரி உள்ளது.

Thumb
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ள பழைய கச்சேரி கட்டிடம் புனரமைப்புக்கு முன்னர்

மாவட்டச் செயலகத்தின் முக்கிய பணி மத்திய அரசு மற்றும் பிரதேச செயலகங்களின் தொடர்புகள் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது ஆகும். மாவட்டச் செயலகமானது மாவட்ட நிலையில் வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் கீழ்மட்ட உட்பிரிவுகளின் செயற்பாடுகளுக்கு உதவுதல், [1] அத்துடன் மாவட்டத்தில் வருவாய் சேகரிப்பு மற்றும் தேர்தல்களை ஒருங்கிணைத்தல் போன்ற பொறுப்புகளையும் கொண்டுள்ளது. [2] மாவட்டச் செயலகத்தின் தலைவரான மாவட்டச் செயலாளர் முறையாக அரசாங்க அதிபர் என்று அழைக்கப்படுகிறார்.

கச்சேரி என்பது இந்துத்தானி சொல்லாகும். [3] [4] இச்சொல்லானது இலங்கையில் பிரித்தானிய காலனித்துவ நிருவாகத்தின் துவக்க ஆண்டுகளில் வருவாய் ஆட்சியர் அலுவலகத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. [5] (இலங்கை) காலனித்துவ நிருவாகத்தின் டச்சு முறையின் முக்கிய அம்சமாக வருவாய் ஆட்சியரகம் இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், பிரித்தானிய காலனித்துவ நிருவாகிகள் குடிமை மற்றும் வருவாய் நிருவாகத்துடன் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்க வடிவத்தை நோக்கி இது நகர்ந்தது. இதனால் உள்ளூரில் கச்சேரி என்று அழைக்கப்பட்டு வந்த ஆட்சியர் அலுவலகம் மாவட்ட செயலாளர் அலுவலகமாக மாற்றப்பட்டது. [5] விடுதலைக்குப் பிறகும், கச்சேரி மாவட்ட நிருவாக மையமாகவும், மாகாண நிருவாகத்தின் மையப்புள்ளியாகவும் தக்கவைக்கப்பட்டு அரசாங்க முகவரின் கீழ் வைக்கப்பட்டது. [6] இருப்பினும், 1987 இல், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் [7] மாகாண சபைகளை நிறுவுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. [8] இவ்வாறு, 1990 சனவரியில் நடைமுறைக்கு வந்த மாகாண சபை நிருவாகம், 19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் இருந்து மாறாமல் இருந்த கச்சேரி நிருவாகத்தை மாற்றியமைத்தது.

Remove ads

குறிப்பிடத்தக்க கச்சேரி கட்டிடங்கள்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads